ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்தியாவிற்கு பெருமிதம் தேடி தந்த டாடா அல்ட்ராஸ் கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் அனைத்தையும் இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த அல்ட்ராஸ் (Altroz) காரை ஜனவரி 22ம் தேதி (இன்று) விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்திருந்தது. இடையில் குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் டாடா அல்ட்ராஸ் கார் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக ஸ்கோர் செய்த செய்தி வெளியாகி, வாடிக்கையாளர்களின் ஆவலை அதிகரிக்க செய்தது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார்களை பெற்ற இரண்டாவது இந்திய கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் பெற்றது. அதற்கு முன்பு அதே டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் 5 ஸ்டார்களை அள்ளியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், ஏற்கனவே அறிவித்தபடி வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அல்ட்ராஸ் காரை டாடா இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இது பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக கார் ஆகும். இதன்மூலம் இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதல் முறையாக நுழைந்துள்ளது. ஆம், இந்தியாவில் டாடா நிறுவனத்தால் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ள முதல் பிரிமீயம் ஹேட்ச்பேக் ரக கார் அல்ட்ராஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

மாருதி சுஸுகி பலேனோ, டொயோட்டா க்ளான்சா, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் உள்ளிட்ட கார்களுடன் டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் போட்டியிடவுள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் 45X கான்செப்ட் மாடலை டாடா நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. இதன் அடிப்படையில்தான் டாடா அல்ட்ராஸ் கார் உருவாக்கப்பட்டுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் புதிய ஆல்ஃபா பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட முதல் கார் அல்ட்ராஸ்தான் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. அல்ட்ராஸ் காரின் புரொடெக்ஸன் வெர்ஷனை, கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற 89வது ஜெனீவா சர்வதேச மோட்டார் ஷோ நிகழ்ச்சியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்தது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

இதன்பின்பு கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டாடா அல்ட்ராஸ் கார் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அத்துடன் 21 ஆயிரம் ரூபாய் என்ற முன்பணத்துடன் புக்கிங்கும் தொடங்கப்பட்டது. இந்த சூழலில், டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் இந்திய மார்க்கெட்டில் இன்று முறைப்படி விற்பனைக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

டாடா அல்ட்ராஸ் காரில், இம்பேக்ட் 2.0 டிசைன் மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஏற்கனவே நாம் டாடா ஹாரியர் எஸ்யூவியில் பார்த்ததுதான். டாடா அல்ட்ராஸ் காரின் நீளம் 3990 மிமீ, அகலம் 1755 மிமீ, உயரம் 1523 மிமீ ஆகும். அதே சமயம் டாடா அல்ட்ராஸ் காரின் வீல்பேஸ் நீளம் 2501 மிமீ ஆகவும், க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 165 மிமீ ஆகவும் இருக்கிறது.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் டாடா அல்ட்ராஸ் கார் கிடைக்கவுள்ளது. இந்த காரின் பெட்ரோல் வெர்ஷனின் எடை 1036 கிலோ கிராம். அதே சமயம் டீசல் வெர்ஷனின் எடை 1150 கிலோ கிராம். டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் மொத்தம் 5 அட்டகாசமான கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

டாடா அல்ட்ராஸ் காரின் கலர்கள் பின்வருமாறு:

  • ஹை-ஸ்ட்ரீட் கோல்டு
  • ஸ்கைலைன் சில்வர்
  • டவுன்டவுன் ரெட்
  • மிட்டவுன் க்ரே
  • அவென்யூ ஒயிட்
  • ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

    டாடா அல்ட்ராஸ் இன்ஜின்:

    டாடா அல்ட்ராஸ் காரில் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படவுள்ளன. இந்த 2 இன்ஜின்களுமே பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு இணக்கமானது. டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரின் 3 - சிலிண்டர், 1.2 லிட்டர், Revotron பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 86 பிஎஸ் பவரையும், 113 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.

    ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

    அதே சமயம் இந்த காரின் 4 - சிலிண்டர், 1.5 லிட்டர், டர்போசார்ஜ்டு Revotorq டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 90 பிஎஸ் பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்த வல்லது. இந்த இரண்டு இன்ஜின்களுடனும் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ்தான் வழங்கப்படவுள்ளது. தற்போதைய நிலையில் ஆட்டோமெட்டிக் ஆப்ஷன் கிடையாது.

    ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

    டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் XE, XM, XT, XZ மற்றும் XZ(O) என மொத்தம் 5 வேரியண்ட்களில் கிடைக்கும். டாடா அல்ட்ராஸ் காரில், ஸ்போர்ட்டியான க்ரில், எல்இடி டிஆர்எல்கள் உடன் ட்யூயல்-சேம்பர் ஆட்டோமெட்டிக் புரொஜெக்டர் ஹெட்லேம்ப்ஸ், ஸ்பிளிட் டெயில்லேம்ப்ஸ், பியானோ பிளாக் ஓஆர்விஎம் மற்றும் 16 இன்ச் லேசர் கட் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன.

    ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

    இதுதவிர 7 இன்ச் டிஎஃப்டி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதிகளுடன் 7 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், மல்டிஃபங்ஷன் ஸ்டியரிங் வீல், ஃபுல் ஆட்டோமெட்டிக் ஏசி, க்ரூஸ் கண்ட்ரோல், ப்ளூ ஆம்பியண்ட் லைட் மற்றும் 15 லிட்டர் கூல்டு க்ளவ் பாக்ஸ் ஆகிய வசதிகளும் டாடா அல்ட்ராஸ் காரில் வழங்கப்படுகின்றன.

    ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

    டாடா அல்ட்ராஸ் பிரிமீயம் ஹேட்ச்பேக் காரில் பாதுகாப்பு வசதிகளுக்கும் பஞ்சமில்லை. ட்யூயல் ஃப்ரண்ட் ஏர்பேக்குகள், இபிடி உடன் ஏபிஎஸ் மற்றும் சிஎஸ்சி, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஐசோஃபிக்ஸ், ஹை-ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் போன்ற ஸ்டாண்டர்டு பாதுகாப்பு வசதிகளை டாடா அல்ட்ராஸ் கார் பெற்றுள்ளது.

    ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க

    டாடா அல்ட்ராஸ் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் ஆரம்ப விலை 5.29 லட்ச ரூபாய் மட்டுமே. இது பேஸ் வேரியண்ட்டின் விலையாகும். இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 9.29 லட்ச ரூபாயாக நிர்யணம் செய்யப்பட்டுள்ளது. டாடா அல்ட்ராஸ் காரின் வேரியண்ட்கள் வாரியாக விலையை கீழே காணலாம்.

    ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க
    • பெட்ரோல் எக்ஸ்இ- 5.29 லட்சம்
    • பெட்ரோல் எக்ஸ்எம் - 6.15 லட்சம்
    • பெட்ரோல் எக்ஸ்டி - 6.84 லட்சம்
    • பெட்ரோல் எக்ஸ்இஸட் - 7.44 லட்சம்
    • பெட்ரோல் எக்ஸ்இஸட் (ஓ) - 7.69 லட்சம்
    • ரொம்ப பாதுகாப்பான கார்... புதிய டாடா அல்ட்ராஸ் விற்பனைக்கு வந்தது! விலை தெரிஞ்சா அசந்து போயிருவீங்க
      • டீசல் எக்ஸ்இ - 6.99 லட்சம்
      • டீசல் எக்ஸ்எம் - 7.75 லட்சம்
      • டீசல் எக்ஸ்டி - 8.44 லட்சம்
      • டீசல் எக்ஸ்இஸட் - 9.04 லட்சம்
      • டீசல் எக்ஸ்இஸட் (ஓ) - 9.29 லட்சம்
      • (இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்)

Most Read Articles
English summary
Tata Altroz Premium Hatchback Launched In India - Price, Features, Variants, Colours, Engine. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X