பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

சக்திவாய்ந்த புதிய டர்போ எஞ்சின் தேர்வில் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

கடந்த மாதம் டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் ரூ.5.29 லட்சம் என்ற மிக சவாலான ஆரம்ப விலையில் வந்துள்ள இந்த மாடல் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நவீன தொழில்நுட்ப அம்சங்கள், சிறந்த எஞ்சின் தேர்வுகளும் வாடிக்கையாளர்களிடத்தில் வரவேற்பை பெற்று தந்துள்ளது.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

எனினும், மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் டொயோட்டா க்ளான்சா உள்ளிட்ட போட்டியாளர்களை எதிர்கொள்வதில் கடும் நெருக்கடிகள் உள்ளன. டாடா அல்ட்ராஸ் காரின் மதிப்பை கூட்டும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளது.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

இதன்படி, அல்ட்ராஸ் காரில் ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளை தவிர்த்து, புதிய 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் தேர்வையும் வழங்குவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. இந்த புதிய 1.2 லிட்டர் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் அதே 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின்தான் அல்ட்ராஸ் காரிலும் பயன்படுத்தப்படும். நெக்ஸான் எஸ்யூவியில் இந்த எஞ்சின் 118 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

ஆனால், அல்ட்ராஸ் காரில் இந்த புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 100 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக மாற்றம் செய்யப்பட்டு இருக்கும். அதேநேரத்தில், தற்போது வழங்கப்படும் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகளைவிட இதுதான் அதிக செயல்திறன் கொண்ட அல்ட்ராஸ் தேர்வாகவும் இருக்கும்.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

புதிய டாடா அல்ட்ராஸ் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலில் டியூவல் க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். இதனால், மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களில் வழங்கப்படும் சிவிடி கியர்பாக்ஸ் தேர்வுக்கு சிறந்த மாற்று தேர்வாக அல்ட்ராஸ் இருக்கும்.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

கோவையை சேர்ந்த ஜெயெம் எஞ்சினியரிங் நிறுவனத்துடன் இணைந்து டாடா டிகோர் மற்றும் டியாகோ காரின் ஜேடிபி என்ற பவர்ஃபுல் மாடல்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த நிலையில், கோவை ஜெயெம் எஞ்சினியரிங் நிறுவனத்திற்கும், டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இணைந்து உருவாக்கிய ஜேடிபி பிராண்டு கைவிடப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

எனவே, டாடா அல்ட்ராஸ் காரின் சாதாரண மாடலிலேயே இந்த புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இதனால், கூடுதல் ஆக்சஸெரீகள், தோற்றத்தில் மிரட்டும் வேலைப்பாடுகள் உள்ளிட்டவை இடம்பெறாது என்று தெரிகிறது.

பவர்ஃபுல் டர்போ எஞ்சினுடன் போட்டியாளர்களை ஒரு கை பார்க்கப் போகும் டாடா அல்ட்ராஸ்!

டாடா அல்ட்ராஸ் காரில் தற்போது 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 84 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே இப்போது கிடைக்கிறது.

Source: Carwale

Most Read Articles
English summary
Tata Motors is planning to give powerful petrol engine option in Altroz car in India later this year.
Story first published: Thursday, February 27, 2020, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X