டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் விபரங்கள் கசிந்தது

பண்டிகை கால வரவில் உள்ள புதிய டாடா அல்ட்ராஸ் காரின் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரங்கள் கசிந்துள்ளது. அதன் முக்கிய விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் மிக முக்கிய தேர்வாக டாடா அல்ட்ராஸ் மாறி இருக்கிறது. டிசைன், எஞ்சின் தேர்வுகள், வசதிகள் மற்றும் விலை என அனைத்திலும் நிறைவான தேர்வாக வாடிக்கையாளர்கள் மத்தியில் பெயர் பெற்றிருக்கிறது.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

இந்த சூழலில், அல்ட்ராஸ் காருக்கு கூடுதல் மதிப்பும், புதிய தேர்வை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் விதத்தில் செயல்திறன் மிக்க எஞ்சின் கொண்ட புதிய பெட்ரோல் மாடலும் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன் முக்கிய விபரங்கள் இணையதளம் மூலமாக வெளியாகி இருக்கின்றன.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

டாடா அல்ட்ராஸ் காரில் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படும். தவிரவும், டிசிடி கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

புதிய டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் டர்போ மாடலானது எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸ்இசட் என நான்குவிதமான வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வர இருப்பதும் தெரிய வந்துள்ளது. புதிய டாடா அல்ட்ராஸ் டர்போ மாடலுக்கு ரூ.7.99 லட்சம் முதல் ரூ.8.75 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் வர இருக்கிறது.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வருகிறது.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

புதிய டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வானது அதிக செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வை விரும்புவோருக்கு மிகச் சரியான விலையில் சிறந்த தேர்வாக அமையும். மேலும், சாதாரண மாடலில் இருந்து வேறுபடுத்தும் விதத்தில் சில சிறிய அலங்கார மற்றும் வேறுபாடுகளுடன் புதிய மாடல் வரும் என்று தெரிகிறது. அதாவது, டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் வழங்கப்பட்டது போன்று, சிவப்பு வண்ண அலங்கார வேலைப்பாடுகளுடன் தனித்துவமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

டாடா அல்ட்ராஸ் காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் ஆகியவையும் இடம்பெற்றிருக்கும்.

 டாடா அல்ட்ராஸ் டர்போ பெட்ரோல் மாடலின் முக்கிய விபரம்

டாடா அல்ட்ராஸ் காரின் சாதாரண பெட்ரோல் மாடலைவிட விலை அதிகம் நிர்ணயிக்கப்பட்டு வந்தாலும், ஃபோக்ஸ்வேகன் போலோ, மாருதி பலேனோ கார்களின் விலையுடன் ஒப்பிடுகையில், மதிப்பை அளிக்கும் வகையிலேயே இருக்கும் என்று தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Tata Altroz will be receiving a new turbo-petrol engine in the Indian market. Ahead of its launch, several details of the upcoming Altroz have been revealed including complete specs of the all-new engine on the premium hatchback.
Story first published: Tuesday, September 29, 2020, 17:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X