டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

டாடா மோட்டார்ஸ் ஸ்போர்டியர் பண்பை கொண்ட அல்ட்ராஸ் டர்போ மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த தீவிரமாக தயாராகி வருகிறது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அல்ட்ராஸ் டர்போ கார் ஒன்று புனேக்கு அருகே சோதனையில் உட்படுத்தப்பட்ட போது கண்டறியப்பட்டுள்ளது.

டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

டாடா அல்ட்ராஸ் டர்போ இந்திய சந்தையில் இந்த வருடம் முடிவதற்கு உள்ளாக அறிமுகமாகலாம் என முன்பே நமது தளத்தில் கூறியிருந்தோம். இந்த டர்போ வெர்சனில் நிச்சயம் டர்போ முத்திரை காரை சுற்றிலும் பொருத்தப்படும்.

டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

இதனை முந்தைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பார்த்திருப்பீர்கள். ஆனால் இம்முறை டீம்பிஎச்பி செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களில் சோதனை காரில் அத்தகைய அடையாளக்குறி எதையும் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இந்த சோதனை கார் டெக்டோனிக் ப்ளூ நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

இது ஒன்று தான் இது டர்போ கார் என்பதை நமக்கு தெரியப்படுத்துகிறது. ஏனெனில் இந்த நிறத்தில் வழக்கமான அல்ட்ராஸ் மாடல் விற்பனை செய்யப்படுவதில்லை. இதே டெக்டோனிக் ப்ளூ நிறம் டாடா நெக்ஸானுக்கும் வழங்கப்படவுள்ளது.

டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

இந்த புதிய நிறத்தேர்வை தவிர்த்து இந்த சோதனை அல்ட்ராஸ் டர்போ காரின் மற்ற பாகங்களில் எந்த மாற்றமும் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த டர்போ காரில் 1.2 லிட்டர் 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின், 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவுள்ளது.

டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

இந்த டர்போ என்ஜின் அமைப்பின் மூலமாக அதிகப்பட்சமாக 110 பிஎச்பி பவரை பெற முடியும். இது அல்ட்ராஸ் ஜெனிவா எடிசனின் 102 பிஎச்பி-ஐ காட்டிலும் சற்று அதிகமே. மேலும் 7-ஸ்பீடு ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்மிஷனையும் (டிசிடி) கூடுதல் தேர்வாக அல்ட்ராஸ் டர்போ கார் பெற்றுவரவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

டர்போ என்ஜின் உடன் அல்ட்ராஸை கொண்டுவர துடியாய் துடிக்கும் டாடா... இதுதான் காரணமாம்...

பெல்ஜியத்தை சேர்ந்த பஞ்ச் பவர்ட்ரெயின் நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படவுள்ள இந்த டிசிடி யூனிட் ஆனது ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடா மற்றும் ஹூண்டாய் கார்களில் உள்ள உலர்ந்த-க்ளட்ச் யூனிட்களுக்கு பதிலாக ஈரமான-க்ளட்ச் டிசிடி கியர்பாக்ஸ் ஆக இருக்கும். இது இந்திய சாலைகளுக்கு மிகவும் நம்பகமானதாக விளங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Most Read Articles

English summary
Tata Altroz Turbo variant spied
Story first published: Wednesday, September 23, 2020, 13:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X