அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

இந்திய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ், கியா செல்டோஸ் மற்றும் ஹூண்டாய் க்ரெட்டாவிற்கு போட்டியாக புதிய மிட்-சைஸ் 5-இருக்கை க்ராஸ்ஓவர் மாடலின் தயாரிப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய டாடா மாடல் குறித்து வெளியாகியுள்ள தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய தயாரிப்புகளை சந்தைக்கு கொண்டுவர தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக அடுத்த இரண்டு ஆண்டுகளில் எஸ்யூவி மற்றும் க்ராஸ்ஓவர் பிரிவுகளில் இந்நிறுவனத்தின் மாடல்கள் சந்தைப்படுத்தப்படவுள்ளன.

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

ரூ.30 லட்சத்திற்குள்ளான எக்ஸ்ஷோரூம் விலைகளில் கொண்டுவரப்படவுள்ள இந்த புதிய மாடல்களின் தயாரிப்பு பணிகளில் டாடா நிறுவனம் ஈடுப்பட்டு வந்த நிலையில் கொரோனா வைரஸ் அவற்றை ஒட்டு மொத்தமாக நிறித்திவிட்டது. இந்த வைரஸினால் இந்த திட்டங்கள் தாமதமானது மட்டுமில்லாமல் இந்நிறுவனத்தின் மொத்த விற்பனை எண்ணிக்கையும் கடந்த மார்ச் மாதத்தில் சுமார் 84% அளவில் குறைந்திருந்தது.

MOST READ: மழைகாலங்களில் நீரினால் வாகனங்கள் பாதிப்படையாமல் தடுப்பது எப்படி..? எளிய முறைகள் இதோ...

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

அதனை தொடர்ந்து ஏப்ரல் மாதத்திலும் இந்நிறுவனம் உள்பட ஆட்டோமொபைல் நிறுவனங்கள் அனைத்தின் விற்பனையும் பூஜ்ஜியமாக சந்தையில் பதிவானது. ஆனால் தற்போது ஊரடங்கில் சற்று தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளதால் டாடா நிறுவனம் தனது வழக்கமான பணிகளை மெல்ல மெல்ல மீண்டும் ஆரம்பித்து வருகிறது.

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

இந்த வகையில் இந்நிறுவனத்தின் புதிய கிராவிட்டாஸ் எஸ்யூவி மாடல் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டது. இந்த எஸ்யூவி மாடல் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

சென்னை -பெங்களூர் நெடுஞ்சாலையில் டாடா கிராவிட்டாஸ் சோதனை ஓட்டம்...

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

டாடா நிறுவனத்தில் இருந்து விரைவில் அறிமுகமாகவுள்ள இந்த எஸ்யூவி காருக்கு அடுத்து புதிய எச்பிஎக்ஸ் காம்பெக்ட் க்ராஸ்ஓவர் மாடலையும் இந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த இரு தயாரிப்புகளை தொடர்ந்து ப்ளாக்பேர்டு என்ற பெயரில் மிட்-சைஸ் 5-இருக்கை க்ராஸ்ஓவர் ஒன்றும் டாடாவில் இருந்து சந்தைக்கு வரவுள்ளது.

இந்த நிலையில் மோட்டார் வாலா என்ற யூடியுப் சேனல் ஒன்று கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, நிஸான் கிக்ஸ் மற்றும் ரெனால்ட் டஸ்டர் மாடல்களுக்கு போட்டியாக வரவுள்ள டாடாவின் இந்த 5-இருக்கை க்ராஸ்ஓவரின் கற்பனை தோற்றத்தை 2018 சுபாரு ட்ரைபெகா கான்செப்ட்டில் இருந்து கொண்டு வந்துள்ளது.

MOST READ: ஆட்டிபடைக்கும் கொரோனா... ஊருக்கு திரும்பும் வழியில் தொழிலாளர்களுக்கு நடந்த சோகம்... என்னனு தெரியுமா?

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

டாடா நெக்ஸான் மற்றும் ஹெரியர் மாடல்களில் இருந்து சில காஸ்மெட்டிக் பாகங்களை படத்தில் உள்ள ப்ளாக்பேர்டு எஸ்யூவி மாடல் கொண்டிருந்தாலும், மொத்த தோற்றத்தில் சுபாரு கான்செப்ட்டை தான் அடிப்படையாக கொண்டுள்ளது. இது வழக்கமாக இதுபோன்ற செய்தி தளங்களில் இருந்து வெளிவரும் இந்த எஸ்யூவி மாடலின் தோற்றம் தான்.

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

அதனால் இதற்கும் அறிமுகமாகவுள்ள ப்ளாக்பேர்டு க்ராஸ்ஓவர் தயாரிப்பு மாடலுக்கும் எந்த விதத்திலும் தொடர்பு இருக்காது என்றே தெரிகிறது. இந்த கார் குறித்து இதுவரை வெளிவந்துள்ள தகவலில் இந்த கார் செரி டிக்கோ 5எக்ஸ் மாடலின் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

MOST READ: மலைபோல் குவியும் முன்பதிவு... இந்த 2 கார்களுக்குதான் ஹூண்டாய் நன்றி சொல்ல வேண்டும்...

அசத்தலான தோற்றத்தில் புதிய எஸ்யூவி காரை உருவாக்கும் முயற்சியில் டாடா.. கியா செல்டோஸிற்கு போட்டி ரெடி

மற்றப்படி டாடா ப்ளாக்பேர்டு மாடலை பற்றிய வேறெந்த தகவலும் கிடைக்க பெறவில்லை. ஆனால் எப்படியிருந்தாலும் இந்த கார் ஹெரியர் மற்றும் நெக்ஸான் மாடல்களுக்கு இடையே நிலைநிறுத்தப்படும். அதேபோல் டாடாவின் புதிய 2.0 டிசைன் தத்துவத்தை இந்த எஸ்யூவி கார் கொண்டிருக்கலாம்.

Most Read Articles

English summary
New Tata Blackbird SUV rendering with C shaped LED DRLs
Story first published: Thursday, May 28, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X