டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஜூலை மாதத்தில் அதன் விற்பனை கார்களுக்கு குறிப்பிட்ட என்ணிக்கையில் சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்க அதன் டீலர்ஷிப்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது. டாடாவின் லேட்டஸ்ட் ஹேட்ச்பேக் மாடலான அல்ட்ராஸை தவிர்த்து மற்ற அனைத்து கார்களும் இந்த சலுகைகளில் உட்படுகின்றன.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

இந்த சலுகைகளில் பணம் தள்ளுபடி, எக்ஸ்சேன்ஞ் போனஸ், கார்ப்பரேட் தள்ளுபடிகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் போராளிகளுக்கான சிறப்பு தள்ளுபடிகள் உள்ளிட்டவை அடங்குகின்றன. இதனால் டாடா காரை வாங்குவோர் எவ்வளவு பணத்தை சேமிக்கலாம் என்பதை மாடல்கள் வாரியாக பார்ப்போம்.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

டாடா ஹெரியர்

டாடா நிறுவனம் இந்த வருட துவக்கத்தில் தான் ஹெரியர் மாடலை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து அறிமுகப்படுத்தி இருந்தது. இதில் பொருத்தப்பட்டுள்ள பிஎஸ்6 டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரை 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் காருக்கு வழங்கி வருகிறது.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

2020ஆம் ஆண்டிற்காக மேம்படுத்தப்பட்ட இந்த எஸ்யூவி காரில் பனோராமிக் சன்ரூஃப் உள்பட தொழிற்நுட்ப வசதிகளும், 17-இன்ச் அலாய் சக்கரங்கள் போன்ற டிசைன் மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. விற்பனையில் எம்ஜி ஹெக்டருடன் போட்டியிட்டு வருகின்ற இந்த காரை இந்த ஜூலை மாதத்தில் வாங்குவதன் மூலம் ரூ.80,000 ஆயிரம் வரையிலான சலுகைகளை பெற முடியும்.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

டாடா டிகோர்

காம்பெக்ட் செடான் ரக காரான டிகோர் மாடலும் சில டிசைன் மாற்றங்களுடன் பிஎஸ்6 என்ஜின் அப்டேட்டை இந்த வருடத்தில் பெற்றிருந்தது. இதன் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 86 பிஎச்பி பவரை வெளிப்படுத்தக்கூடியது. 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் அப்படியே தொடர்ந்துள்ளன.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

மாருதி சுசுகி டிசைர், ஹூண்டாய் அவ்ரா மற்றும் ஹோண்டா அமேஸ் மாடல்களுக்கு விற்பனையில் போட்டியினை அளித்துவரும் டாடா டிகோர் காரானது சந்தையில் மலிவானதாக விளங்கி வருகிறது. இதனை தற்போது மேலும் மலிவானதாக மாற்றும் வகையில் ரூ.50,000 மதிப்பிலான சலுகைகள் இந்த காருக்கு இந்த மாதத்திற்காக வழங்கப்பட்டுள்ளன.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

டாடா டியாகோ

இந்நிறுவனத்தின் செடான் பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் மற்றொரு மாடல் தான் டாடா டியாகோ. அதன் போட்டி கார்களான ஹூண்டாய் சாண்ட்ரோ, மாருதி சுசுகி வேகன்ஆர் மற்றும் டட்சன் கோ மாடல்களை காட்டிலும் டாடாவின் இந்த செடான் கார் சற்று விலை அதிகமானதாக உள்ளது.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

இயக்க ஆற்றலிற்கு டாடா டிகோர் மாடலின் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினையும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் தான் இந்த கார் பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த மாதத்தில் இந்த காரை வாங்குவதின் மூலம் ரூ.35,000 வரையில் சேமிக்க முடியும்.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

டாடா நெக்ஸான்

மேற்கூறப்பட்ட மற்ற மாடல்களை போல் காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் தற்சமயம் விற்பனையில் உள்ள நெக்ஸான் எஸ்யூவி மாடல் ஆற்றல்மிக்க பிஎஸ்6 பெட்ரோல் என்ஜினை பெற்றுள்ளது. இந்த பெட்ரோல் என்ஜின் கிட்டத்தட்ட 120 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

டீசல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகளில் பிஎஸ்4 வெர்சனில் இருந்து எந்த மாற்றமும் இல்லை. இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்கள் பட்ஜெட்டிற்கு ஏற்றவையாக விளங்க, டாப் வேரியண்ட்கள் கூடுதல் கிட்களுடன் விலையுயர்ந்த காராக சந்தையில் விளங்குகின்றன.

டாடா கார்களை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம்... ரூ.80 ஆயிரம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்...

நெக்ஸான் மாடலுக்கு இந்த மாதத்தில் பணம் தள்ளுபடி மற்றும் எக்ஸ்சேன்ஞ் போனஸ் உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. ரூ.10,000 அளவில் கார்ப்பரேட் தள்ளுபடியும், டாடா க்ரூப்பின் பரிந்துரை திட்டம் மற்றும் கொரோனா போராளிகள் மூலமாக சலுகைகளை பெறும் வசதிகள் மட்டும் இந்த எஸ்யூவி காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Harrier, Nexon, Tiago, Tigor get benefits up to Rs 80,000 in July
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X