நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லெவல்!

டாடா நிறுவனத்தின் பழைய மாடல்களில் ஒன்றான டாடா எஸ்டேட் புத்துயிர் பெற்றிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இந்தியாவில் பாரம்பரிய தோற்றத்திலான தயாரிப்புகளுக்கு எப்போதுமே தனித்துவமான வரவேற்பு உண்டு. என்னதான் தற்போது நாட்டில் அதிகளவில் கண்கவர் மற்றும் கவர்ச்சியான தோற்றத்திலான வாகனங்கள் பல வரிசைக் கட்டி விற்பனைக்கு வந்தாலும், கிளாசிக் ரகத்திலான ஆடம்பர வானங்களுக்கான வரவேற்பு எப்பொழுதுமே தனி இடம்தான்.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதற்கு, கிளாசிக் ரக வாகனங்களான வெஸ்பா ஸ்கூட்டர்கள், ராயல் என்பீல்டு மற்றும் ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் ஆகிய நிறுவனங்களின் இருசக்கர வாகனங்களுக்கு கிடைத்து வரும் அதீத வரவேற்பே முக்கிய சான்றாக இருக்கின்றது.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

தற்போது, நான்கு சக்கர வாகன சந்தையில் பெரியளவில் கிளாசிக் ரக வாகனங்கள் களமிறக்கப்படவில்லை என்றாலும் ஃபோக்ஸ்வேகன் போன்ற ஒரு சில ஆடம்பர ரக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மட்டும் பழைமை வாசம் மாறாத தோற்றமுடைய கார்களை தயாரித்து வருகின்றன. ஆனால், அவை அதிக விலையில் விற்கப்படுகின்றன. எனவே அந்த வாகனங்களைப் பலரால் வாங்க முடிவதில்லை.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதனாலயே கிளாசிக்கு தோற்றமுடைய தற்கால வாகனங்களுக்கு பதிலாக ஒரு சிலர் விண்டேஜ் வாகனங்களை வாங்கிக் கொள்கின்றனர். மேலும், அந்த வாகனங்களை தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப மாடிஃபையும் செய்து கொள்கின்றனர்.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

அந்தவகையில், டாடா நிறுவனத்தின் புகழ்மிக்க தயாரிப்புகளில் ஒன்றான டாடா எஸ்டேட் புதிய தொழில்நுட்ப வசதிக்கு ஏற்ப சீரமைக்கப்பட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலைதான் இங்கு நாம் பார்க்கவிருக்கின்றோம். இந்த கார்குறித்த புகைப்படங்களை கொச்சின் கார்டெல் வெளியிட்டுள்ளது.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இந்தியாவில் மிக நீண்ட காலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், தற்போது எவ்வாறு பலவிதமான தேர்வுகளில் காரை விற்பனைக்கு வழங்கி வருகின்றதோ, அதேபோன்று அப்போதைய கால கட்டத்திலும் வெவ்வேறு விதமான மாடல்களை அறிமுகம் செய்து இந்தியர்களைக் கிரங்கடித்தது. இதற்கு, டாடா சியாரா மற்றும் டாடா எஸ்டேட் ஆகியவைதான் உதாரணம்.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இவையிரண்டும் கால சூழ்நிலை காரணமாக அப்கிரேட் பெறாமல் காலத்தால் மழுங்கடிக்கப்பட்டு விட்டன. எனவே, இந்த பிராண்ட் கார்களை சாலையில் பார்ப்பது அரிதினும் அரிதாக மாறிவிட்டது. பெரும்பாலானோர் இந்த கார்களை ஸ்கிராப் செய்துவிட்டநிலையில், ஒரு சிலர் மட்டும் அதனை பராமரித்து பயன்படுத்தி வருகின்றனர்.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

அவ்வாறு, டாடா எஸ்டேட் காரை பராமரித்து வரும் கேரளாவைச் சேர்ந்த ஓர் இளைஞர்தான் தற்போது அதனை நவீன யுகத்திற்க்கு ஏற்பவாறு மாடிஃபை செய்துள்ளார். இதனை கொச்சின் கார்டெல் நிறுவனத்தின் உதவியால் மறு சீரமைப்பு செய்துள்ளார் அவர்.

இந்த புதுப்பித்தலால் டாடா எஸ்டேட் கார் பல பிரம்மிப்பை ஏற்படுத்தும் தொழில்நுட்ப அம்சங்களைப் பெற்றிருக்கின்றது.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

குறிப்பாக, நமது தாத்தா காலத்து காரில் இவ்வளவு அம்சங்களா., என கேள்வியெழுப்பும் அளவிற்கு அந்த கார் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கின்றது. இதற்காக பல்வேறு இழப்புகளையும், புது அணிகலன்களையும் டாடா எஸ்டேட் பெற்றிருக்கின்றது.

அதாவது, பழைய கிரில் அமைப்பு நீக்கப்பட்டு புதிய உலோக கிரில் நிறுவப்பட்டிருக்கின்றது. ஆனால், டாடா லோகோ அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து, ஹெட்லேம்ப் போன்ற மின் விளக்குகளும் மாற்றம் செய்யப்படாமல் அப்படியே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதேபோன்று டாடா எஸ்டேட்டின் உடற் நிறத்திற்கு ஏற்ற பம்பர் மாற்றிப் பொருத்தப்பட்டிருக்கின்றது. இது அந்த காருக்கு கிளாசியான தோற்றத்தை வழங்குவதில் முக்கிய பங்காற்றுகின்றது. இதைத்தொடர்ந்து, கூடுதல் கிளாசி தோற்றத்திற்காக கருப்பு நிற வண்ணப்பூச்சு செய்யப்பட்ட அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதுபோன்ற மாற்றங்கள் அந்த கார் கிளாசியானதைக் கூடுதல் கவர்ச்சியான தோற்றத்தை தாங்கியதாக மாறியிருக்கின்றது.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதேபோன்று, காரின் உட்பகுதியிலும் பல பிரம்மிப்பை ஏற்படுத்தும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, காரின் கேபினுக்குள் பிரிமியம் லுக்கை வழங்கும் விதமாக டைமண்ட் கட் தோற்றமுடைய லெதர் இருக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. இது பிரிமியம் லுக் மட்டுமின்றி சொகுசு அம்சத்தைக் கொண்டதாக இருக்கின்றது. இந்த லெதர் போர்வையானது இருக்கைக்கு மட்டுமின்றி சென்ட்ரல் பேனலுக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதுமட்டுமின்றி, ஹேண்ட் பிரேக் லிவர் மற்றும் ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவற்றிற்கும் லெதர் கவர் வழங்கப்பட்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்து, டேஷ்போர்டு, குளோவ் பாக்ஸ், ஏசி வெண்ட் உள்ளிட்டவற்றை ஹைலைட் செய்யும் வகையில் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதேபோன்று, காரின் பழைய முறை ஸ்விட்ச் பொத்தான்கள் அப்படியே புதுப்பிக்கப்பட்ட பொருத்தப்பட்டிருக்கின்றன. ஆனால், கூடுதலாக அதனை கவர் செய்கின்ற வகையில் ஃபிளிப் கவர் பேனல் வழங்கப்பட்டிருக்கின்றது. அதாவது, ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் ஹாலிவுட் படத்தில் வரும் கார்களைப் போன்ற சிறப்பு பொத்தான்கள் இந்த காரில் நிறுவப்பட்டிருக்கின்றது. அது, காரின் வைப்பர், மின் விளக்கு உள்ளிட்டவற்றை கன்ட்ரோல் செய்யும்.

நம்ம தாத்தா காலத்து டாடா காரில் இவ்ளோ அம்சங்களா... லுக்குதான் பழசு, ஆனா தொழில்நுட்பம் வேற லேவல்!

இதைத்தொடர்ந்து, எஞ்ஜினில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா., என்ற உறுதி வாய்ந்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், அதில் சிறியளவு ட்யூன் அப் செய்யப்பட்டிருக்கலாம் என்றே யூகிக்கப்படுகின்றது. டாடா எஸ்டேட் காரில் 1.9 லிட்டர் நேட்சுரல்லி அய்பயர்ட் டீசல் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 67 பிஎச்பி மற்றும் 118 என்எம் டார்க்கை வெளிப்படுத்த உதவும்.

Most Read Articles

English summary
Tata Estate Re-Stored With Modern Features. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X