Just In
- 1 hr ago
மாருதி அரேனா கார்களுக்கு ஆன்லைன் மூலமாக எளிதாக கடன் பெறும் திட்டம்!
- 1 hr ago
ரொம்ப பாதுகாப்பானது... 1 கோடி ரூபாய்க்கு வால்வோ கார் வாங்கிய பிரபல டிவி நடிகை... யார்னு தெரியுமா?
- 1 hr ago
2021 சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-எஸ்125 பைக் சர்வதேச சந்தையில் அறிமுகம்!! 125சிசி பைக்கிற்கு இவ்வளவு விலையா?!
- 4 hrs ago
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
Don't Miss!
- Movies
'எனக்கு கொரோனா இல்லை, இல்லவே இல்லை, அதை நம்பாதீங்க..' பிரபல நடிகை திடீர் மறுப்பு!
- News
தடுப்பூசிகள் இரண்டுமே பாதுகாப்பானவைதான்.. வதந்திகளை நம்பாதீங்க... மோடி வேண்டுகோள்!
- Sports
அவ்ளோ ஈஸியா விட்டுற மாட்டோம்.. ஆஸி.வை சுருட்டிய 2 தமிழக வீரர்கள்!
- Lifestyle
இந்தியாவில் போடப்படும் கோவிட்-19 தடுப்பூசி பற்றி ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!
- Education
தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் வேலை வேண்டுமா?
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஒரே நேரத்தில் டாடா கிராவிட்டாஸ் மற்றும் ஹெரியர் பெட்ரோல் மாடல்கள் சோதனை ஓட்டம்...
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஹெரியர் எஸ்யூவி மாடலின் பெட்ரோல் மற்றும் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹெரியரின் ஏழு இருக்கை வெர்சனான கிராவிட்டாஸ் மாடல்களை அடுத்தடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ளது. இதற்கிடையில் இந்த இரு எஸ்யூவி மாடல்களும் சோதனையின்போது தற்போது ரஷ்லேன் செய்தி தளத்தால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

பயணிகள் வாகன பிரிவில் டாடா நிறுவனம் குறிப்பிடத்தகுந்த விற்பனை எண்ணிக்கைகளை பெற துவங்கியுள்ளது. இந்த துரிதமான முன்னேற்றத்திற்கு இந்நிறுவனத்தின் சமீபத்திய அல்ட்ராஸ், ஹெரியர் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட டீசல் வேரியண்ட் மற்றும் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்/இவி உள்ளிட்டவை முக்கிய பங்களிப்பை தந்துள்ளன.

மேலும் தற்போதைய நிலையை மேலும் மேம்படுத்தும் வகையில் புதிய அறிமுகங்களும் வெளிவரவுள்ளன. அத்தகைய புதிய அறிமுக மாடல்கள் தான் மேம்படுத்தப்பட்ட ஹெரியர் பெட்ரோல் மற்றும் அதன் ஏழு இருக்கை கிராவிட்டாஸ் வெர்சன் ஆகும்.

ஹெரியரை காட்டிலும் அளவில் பெரியதாக வெளிவரவுள்ள கிராவிட்டாஸ் முதன்முதலாக 2019 ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இந்த 7-இருக்கை மாடல் டாடா ஹெரியரின் அதே ஒமேகா ப்ளாட்ஃபாரத்தில் தான் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதனால் தோற்ற அளவில் பெரிய உருவத்தை தவிர்த்து பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் உட்புறத்தில் கூடுதலாக மூன்றாவது இருக்கை வரிசையினை கிராவிட்டாஸ் மாடல் பெற்று வருகிறது. இதே 5 இருக்கை, 7 இருக்கை முறையில் தான் எம்ஜி நிறுவனமும் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் ப்ளஸ் மாடல்களை கொண்டுவந்துள்ளது.

கிராவிட்டாஸ் மாடலை 6 இருக்கை மற்றும் 7 இருக்கை என்ற தேர்வுகளில் வாடிக்கையாளர்கள் பெறலாம். ஹெரியர் எஸ்யூவி மாடலை காட்டிலும் 80மிமீ உயரம் அதிகமாகவும், 72 மிமீ அகலமானதாகவும், 63 மிமீ நீளமானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள கிராவிட்டாஸில் வீல்பேஸ் மற்றும் என்ஜின் தேர்வுகளில் எந்த மாற்றமும் இல்லை.

இதனால் ஹெரியரின் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 2 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் தேர்வுகளில் தான் இந்த 7 இருக்கை வெர்சனும் விற்பனையை துவங்கும் என தெரிகிறது. இதில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினில் ஹெரியர் தற்சமயம் விற்பனையில் இல்லை.

இந்த பெட்ரோல் வேரியண்ட்டும் தான் தற்போது சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது. ஹெரியரில் அறிமுகமானதை தொடர்ந்து கிராவிட்டாஸ் மாடலுக்கும் வழங்கப்படவுள்ள இந்த பெட்ரோல் என்ஜின் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் அளவுகள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.

ஆனால் நமக்கு தெரிந்தவரையில், 4 சிலிண்டர் அமைப்பில் அதிகப்பட்சமாக 168 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இந்த பெட்ரோல் என்ஜினை டாடா நிறுவனம் வடிவமைத்திருக்கும். அதேபோல் இதன் டார்க் திறன் 250- 270 என்எம் அளவில் இருக்கலாம். ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

இந்த புதிய பெட்ரோல் என்ஜினினால் டாடா ஹெரியரின் ஆரம்ப விலை குறைய வாய்ப்புள்ளது. மேலும் ஹெரியர் எஸ்யூவியின் விற்பனையையும் பெரிய அளவில் மேம்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த பெட்ரோல் என்ஜினின் வருகை இந்த ஆண்டு இறுதியிலும், 7-இருக்கை கிராவிட்டாஸின் அறிமுகம் அடுத்த ஆண்டு துவக்கத்திலும் இருக்கலாம்.