டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து டாடா கிராவிட்டாஸ் மாடல் இந்த வருடத்திற்கு இறுதிக்குள்ளாக இந்தியாவில் அறிமுகமாகவுள்ளது. இந்த நிலையில் இந்த கார் தற்போது மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டபோது கண்டறியப்பட்டுள்ளது.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

இந்நிறுவனத்தின் ஹெரியர் மாடலின் 7-இருக்கை வெர்சனாக வெளியாகியுள்ள புதிய கிராவிட்டாஸ் மாடல் இந்த சோதனை ஓட்டத்தில் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் இருந்தாலும் காரின் க்ரில், ப்ளாக்-பி பில்லர் மற்றும் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை எந்த மறைப்பும் இல்லாமல் உள்ளன.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

சோதனை காரின் பின்புறம் சற்று பெரியதாக, ரூஃப்-ல் மேடு மற்றும் பெரிய அளவிலான ஜன்னல்களுடன் மூன்றாவது இருக்கை வரிசைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. கடைசி இருக்கை வரிசையில் இருந்து இரண்டாவது இருக்கை வரிசையை ஒற்றை தொடுதலின் மூலமாக மடக்க முடியும்.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

மற்ற மாற்றங்களாக பெட்ரோல் செலுத்தும் இடத்தின் மூடியும், பின்புற பம்பரும் தற்போதைய 5-இருக்கை வெர்சனில் இருந்து வித்தியாசமான டிசைனில் உள்ளன. பின்புறத்தில் கருப்பு நிற ஸ்ட்ரிப், டெயில் லேம்ப்களுடன் இடையே கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஃபாக்ஸ் ஸ்கிட் தட்டுகள் முன்புற பம்பருக்கு அடியிலும், ஹெட்லேம்ப் பிளவுப்பட்டதாகவும் வழங்கப்பட்டுள்ளது.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட டிசைனில் 17 இன்ச்சில் அலாய் சக்கரங்களை இந்த கார் பெற்றிருப்பது தற்போது வெளியாகியுள்ள சோதனை புகைப்படங்களின் மூலம் தெரிய வருகிறது. அதிக எண்ணிக்கையில் நிறத்தேர்வுகளுடன் சந்தைப்படுத்தப்படவுள்ள புதிய டாடா கிராவிட்டாஸ் மாடலுக்கு எக்ஸ்ஷோரூமில் ரூ.15 லட்சத்தில் இருந்து ரூ.19 லட்சம் வரையில் விலை நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

இந்த 7-இருக்கை வெர்சன் காரின் உட்புறத்தில் ஹெரியர் மாடலில் வழங்கப்பட்டிருந்த ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்கக்கூடிய தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பவர்டு இருக்கைகள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவற்றை அப்படியே கொண்டுள்ளது.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

இயக்கத்திற்கு இந்த கார் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் க்ரையோடெக் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. பிஎஸ்6 தரத்தில் இந்த டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவல்லது. இந்த என்ஜின் அமைப்பை எம்ஜி ஹெக்டர் மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களிலும் பார்க்கலாம்.

டாடா கிராவிட்டாஸ் மீண்டும் சோதனை ஓட்டம்... இந்திய அறிமுகம் எப்போது..?

ட்ரான்ஸ்மிஷனிற்கு 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படவுள்ளது. இதன் டாப்-வேரியண்ட் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை பெறவுள்ளது. புதிய கிராவிட்டாஸ் மாடல் தொடர்ந்து சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருவதால் இந்த காருக்கு வாடிக்கையாளர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Gaadiwaadi

Most Read Articles
English summary
Tata Gravitas (7-Seater Harrier) Spotted Again On Test; Launch In H2 2020
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X