சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

வழக்கமான பயன்பாட்டு அம்சத்தைக் கொண்டிருக்கும் கார்களில் ஒன்றான டாடா ஹாரியர், மிகவும் அசால்டாக ஆற்றைக் கடக்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

இந்திய நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான டாடா மோட்டார்சின் புகழ்வாய்ந்த கார்களில் ஒன்று ஹாரியர். இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காரை, லேண்ட் ரோவரின் அதி-நவீன கார்களை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஒமெகா-ஆர்க் எனும் பிளாட்பாரத்தில் வைத்து உற்பத்தி செய்து வருகின்றது டாடா நிறுவனம்.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டின் தொடக்கத்தில் மிகவும் சக்தி வாய்ந்த எஞ்ஜினுடன் புதுப்பித்தது அந்நிறுவனம். இருப்பினும் பெரியளவில் அது வாடிக்கையாளர்கள் மத்தியில் ஈர்ப்பைப் பெறவில்லை. அதேசமயம், கணிசமான யூனிட்டுகளை ஒவ்வொரு ஆண்டும் அது விற்பனைச் செய்து வருகின்றது.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

டாடா ஹாரியர் எஸ்யூவி கார் முன் பக்க வீல் டிரைவ் சிஸ்டத்தின் அடிப்படையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த திறனானது சில சவாலான சாலையைக்கூட எளிதில் கடக்க உதவும். இதனை உறுதிச் செய்கின்ற வகையில் ஓர் சம்பவம் தற்போது அரங்கேறியிருக்கின்றது.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

அந்த சம்பவத்தில் டாடா ஹாரியர் எஸ்யூவி கார் 450மிமீ ஆழம் நிறைந்த ஆற்றைக் கடக்கின்ற வகையிலான காட்சிகள் அமைந்திருக்கின்றது.

இது எப்படி முடியும் டாடா ஹாரியர் என்ன ஆஃப் ரோடு வாகனமா என கேட்கத் தோன்றலாம்..?

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

ஹாரியர் ஓர் ஆஃப் ரோடு ரக வாகனமாக இல்லை என்றாலும், ஒரு சில ஆஃப்ரோடு அம்சங்களை அது பெற்றிருக்கின்றது. இதனாலயே நீரோடிக் கொண்டிருக்கும் ஆற்றுப் படுகையை அக்கார் சுலபமாக கடந்து சென்றுள்ளது. இதுகுறித்த வீடியோவை விரேஷன் ஏ என்னும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

ஹாரியர் எஸ்யூவி கார் என்னதான் அந்த ஆற்றில் சுலபமாக சென்று வந்தாலும் இதுபோன்று அக்காரை இயக்குவது ஆபத்தில் கொண்டுபோய் விடலாம். குறிப்பாக, காரின் திறனை அது மிகக் கடுமையாக பாதிக்கலாம். ஏனெனில், காரின் எக்சாஸ்ட் சிஸ்டம் வாயிலாக நுழையும் தண்ணீர் அதனை மீண்டும் இயங்க முடியாத வகையில் பாதிப்படையச் செய்துவிடும்.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

இந்நிலை ஆற்றின் நடுப்பகுதியில் ஏற்படுமேயானால் நாம் நினைத்து பார்க்க முடியாத ஓர் பின் விளைவை அது ஏற்படுத்திவிடும். இது இழப்புகளை ஏற்படுத்துவதுடன் அதிக செலவிற்கும் வழி வகுக்கும்.

குறிப்பாக, இசியூ மற்றும் பிஸ்டன் உள்ளிட்டவற்றை இது மிகக் கடுமையாக பாதிப்படையச் செய்யும்.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

குறிப்பாக, பிஸ்டனை இயங்க முடியாத அளவிற்கு அது பாதிக்கத் செய்யும்.

இதுவே, ஆஃப் ரோடு வாகனங்களை இதுமாதிரியான சூழ்நிலையில் வைத்து இயக்கினால் பாதிப்பு 99.99 சதவீதம் ஏற்படாது.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

ஏனெனில், அதில் நீர் நுழைவதைக் கட்டுப்படுத்த பல்வேறு கருவிகள் பயன்படுத்தப்பட்டிருக்கும். இதனை, வழக்கமான போக்குவரத்திற்கு வாகனங்களில் எதிர்பார்க்க முடியாது. எனவே, மிக அதிக செலவீணத்தை இது ஏற்படுத்திவிடும்.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

தற்போது வெளியாகியிருக்கும் இதேமாதிரியான ஓர் சாகச வீடியோவை அண்மையில் டாடா நிறுவனமும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் ஹாரியர் ஆழமான நீர்நிலைகளில் செல்லும் திறனைப் பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

ஆனால், நிஜ வாழ்க்கையில் இதுபோன்ற சாகசத்தைச் செய்யலாமா என்பது பற்றிய தகவலை அது வெளியிடவில்லை.

அதேசமயம், வழக்கமான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் வாகனங்களை இதுமாதிரியான நீர் நிலைகளில் வைத்து இயக்குவதற்கு ஏற்ப ஸ்னோர்கள் வெளிப்புறச் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.

சவாலான ஆற்றை அசால்டாக கடந்த டாடா ஹாரியர்... சாதாரண பயணிகள் காரால் எப்படி இது முடிந்தது? வீடியோ!

அது ஹெட்ரோஸ்டேடிக்குகளை லாக்காகமல் தடுக்க உதவும். இதுமாதிரியான ஏதேனும் ஓர் கருவியை பொருத்திய பின்னரே டாடா ஹாரியர் காரை அந்த இளைஞர் ஆற்றில் இருக்கியிருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Harrier Crossing River Video. Read In Tamil.
Story first published: Monday, June 1, 2020, 15:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X