பார்த்தாலே பரவசம்... டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

பிஎஸ்-6 எஞ்சினுடன் டாடா ஹாரியர் பிளாக் எடிசன் மாடல் டீலர் ஒன்றில் தரிசனம் கொடுத்துள்ளது. பார்த்தாலே பரவசப்படுத்தும் இந்த கருஞ்சிறுத்தை போன்ற இந்த காரின் படங்கள், கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் விசேஷ மாடலாக டார்க் எடிசன் விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. இது தனித்துவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் முழுக்க முழுக்க கருப்பு வண்ண தீம் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

கடந்த ஆகஸ்ட்டில் பிஎஸ்-4 ஹாரியர் டார்க் எடிசன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. மூன்று மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளிலும், ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிலும் கிடைத்து வந்தது. ரூ.16.76 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைத்து வந்தது.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

இந்த நிலையில், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான ஹாரியர் டார்க் எடிசன் மாடல் டீலர்களை வந்தடைந்துள்ளது. டீலர் ஒன்றில் நிறுத்தப்பட்டு இருந்த பிஎஸ்6 டார்க் எடிசன் மாடலின் படங்கள், விபரங்களை காடிவாடி தளம் வெளியிட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

இந்த மாடலில் இருக்கும் பிஎஸ்6 தரமுடைய 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலில் 14 விதமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் முழுக்க கருப்பு வண்ண மாடலாக கிடைக்கிறது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் முழுவதும் கருப்பு வண்ணமாக காட்சித் தருகிறது. க்ரில், ஸ்கிட் பிளேட், பம்பர்கள், டிஃபியூசர், ஸ்பாய்லர், சக்கரங்கள் என அனைத்துமே கருப்பு வண்ணத்தில்தான் கொடுக்கப்பட்டுள்ளன.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலின் உட்புறத்தில் டேஷ்போர்டு, சீட் கவர்கள், டோர் பேனல்கள், அப்ஹோல்ஸ்ட்ரி அனைத்துமே கருப்பு வண்ணத்தில்தான் இடம்பெற்றுள்ளன. இதனால், இது மிகவும் பிரிமீயமாக தெரிகிறது. ஆங்காங்கே க்ரோம் பாகங்களுடன் அலங்காரம் தனித்துவப்படுத்துகிறது.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும் வசதிகள் உள்ளன. 7 அங்குல எம்ஐடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், 9 ஸ்பீக்கர்களுடன் கூடிய ஜேபிஎல் பிரிமீயம் ஆடியோ சிஸ்டம் ஆகியவை உள்ளன.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. ஹில் அசிஸ்ட் தொழில்நுட்பமும் முக்கியமானது.

டாடா ஹாரியர் பிஎஸ்6 பிளாக் எடிசன் முதல் தரிசனம்!

புதிய டாடா ஹாரியர் பிஎஸ்6 டார்க் எடிசன் மாடலானது XZ, XZ Plus, XZA மற்றும் XZA Plus ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. பிஎஸ்6 டார்க் எடிசன் வேரியண்ட்டுகள் ரூ.17.70 லட்சம் முதல் ரூ.20.25 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
The Tata Harrier Dark edition started to arrive at dealerships across the country. The special edition of the SUV has been carried forward to make it BS6-compliant. The Harrier Dark has also seen an increase in its pricing because of achieving BS6 compliance.
Story first published: Monday, June 1, 2020, 14:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X