5மிகப்பெரிய அப்டேட்டுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்.. என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா ஹாரியரில் ஐந்து மிகப்பெரிய முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா நிறுவனத்தின் மிகவும் பிரபல மாடல்களில் ஒன்றாக ஹாரியர் திகழ்ந்து வருகின்றது. இந்த காரை கடந்த வருடம்தான் டாடா இந்தியாவில் அறிமுகம் செய்தது. இது, மிட்-சைஸ் எஸ்யூவி ரக கார் என்பதால் இந்தியர்கள் மத்தியில் கணிசமான வரவேற்பைப் பெற்றது.

ஆனால், இது நீண்ட காலம் நீடிக்கவில்லை. இந்திய எஸ்யூவி சந்தையில் கியா மற்றும் எம்ஜி ஆகிய இரு நிறுவனங்களும் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தின.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அவற்றின் புதிய அறிமுகங்களான செல்டோஸ் மற்றும் ஹெக்டர் எஸ்யூவி ரக கார்களுக்கு இமாலய அளவிலான வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக, இந்திய வாகன சந்தைச் சந்திக்க அதீத வரவேற்பை அவை எட்டின. இது டாடா ஹாரியருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

ஆகையால், இந்த வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கான பல்வேறு முயற்சிகளை டாடா ஹாரியரில் மேற்கொண்டு வருகின்றது.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

அந்தவகையில், ஐந்து மிக முக்கிய அப்கிரேஷனை டாடா நிறுவனம் ஹாரியருக்கு வழங்கியுள்ளது. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட ஹாரியரின் வருகை குறித்த தகவல்தான் தற்போது வெளியாகியிருக்கின்றது.

வெளியாகியிருக்கும் இந்த வீடியோவை டாடா நிறுவனமே அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது. அந்த வீடியோக்கள் அனைத்திலும் ஹாரியரில் மேற்கொண்டிருக்கும் பெரியளவிலான அப்கிரேஷனை விளக்குகின்ற வகையிலான காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றது.

முக்கியமாக இந்த ஹாரியரில் செய்யப்பட்ட அப்கிரேஷனாக பிஎஸ்-6 தரம் காட்சியளிக்கின்றது. இந்த மாசு உமிழ்வு விதி வருகின்ற ஏப்ரல் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் கட்டாயமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

பிஎஸ்-6 தரத்திற்கு உயர்த்தப்பட்டிருந்தாலும் அதன் அளவில் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகையால், இது 2.0 லிட்டர் எஞ்ஜினாகவே உள்ளது. இந்த மல்டிஜெட் எஞ்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரை வெளியேற்றும் திறனைக் கொண்டுள்ளது.

ஆனால், தற்போது விற்பனையில் இருக்கும் ஹாரியரில் இது 170 பிஎஸ் சக்தியை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. புதிய மாசு உமிழ்வு விதியின் காரணமாக இது சற்றே குறைந்துள்ளது. அதேசமயம், என்எம் டார்க்கில் எந்தவொரு மாற்றமுமின்றி 350-ஐ வழங்குகின்றது.

இந்த எஞ்ஜின் மாற்றத்தைத் தொடர்ந்து இரண்டாம் மிகப்பெரிய மாற்றமாக ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டுள்ளது. இதை உறுதிப்படுத்துகின்ற வகையில் அதிகாரப்பூர்வ வீடியோவையும் அது வெளியிட்டுள்ளது. ஆகையால், இந்த காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதே டிரான்ஸ்மிஷன்தான் டாடா ஹெக்ஸாவிலும் கிடைக்கின்றது.

இந்த தரத்திலான டிரான்ஸ்மிஷனுக்கு சந்தையில் ஏகபோக வரவேற்பு இருக்கின்றது. ஆகையால், இது டாடா ஹாரியரின் விற்பனை எண்ணிக்கை சற்றே கூட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி மேலும் சில சிறப்பு அப்கிரேட்டுகளும் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், புதிதாக அறிமுகமாக இருக்கும் டாடா ஹாரியரில் பனோரமிக் சன்ரூஃப் இடம்பெறவிருக்கின்றது. இதனால், எம்ஜி ஹெக்டருக்கு அடுத்து சந்தையில் பனோரமிக் சன்ரூஃப் வசதியுடன் கிடைக்கும் இரண்டாம் காராக டாடா ஹாரியர் மாறியிருக்கின்றது.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக வழங்குவதற்கு முன்னரே, நாட்டில் உள்ள ஒரு சில டீலர்கள் இதனை ஆப்ஷனல் தேர்வாக கூடுதல் மதிப்பில் வழங்கி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தகுந்தது. ஆனால், டாடா நிறுவனமும் தற்போது ஃபேக்டரி ஃபிட்டிங்காக வழங்கவிருக்கும் சன்ரூஃப் உயர் நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றது.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

இதைத்தொடர்ந்து, டிரைவரின் இருக்கைக்கு எலக்ட்ரானிக்கலாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதியும் புதிய அப்டேட்டாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், 18 இன்ச் அல்லாய் வீல் காரின் கவர்ச்சியான தோற்றத்திற்காக இந்த அப்கிரேஷன் வரிசையில் இணைக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர வேறெந்த மாற்றமும் பெரியளவில் காணப்படவில்லை.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

ஆனால், செய்யப்பட்டுள்ள மாற்றங்களே போதும் என கூறப்படுகின்றது. பெருவாரியான வாடிக்கையாளர்களைக் கவர இது உதவும் என நம்பப்படுகின்றது. தொடர்ந்து, லேசானா காஸ்மெட்டிக் மாற்றமும் வழங்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களின் கூடுதல் கவனத்தைப் பெற உதவும்.

5 மிகப்பெரிய அப்டேட்டகளுடன் களமிறங்கும் டாடா ஹாரியர்... என்னென்ன அப்டேட்டுனு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!

டாடா நிறுவனத்தின் ஹாரியர் தற்போது எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கு கடுமையான போட்டியை வழங்கி வருகின்றது. sஇந்த புதிய அப்டேட்டுகள் மேலும் போட்டியை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Tata Harrier Gets Five Big Upgrade. Read In Tamil.
Story first published: Friday, January 31, 2020, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X