ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம், ஆனா டாடா கார் அட்டகாசமா இருக்கு!!!

டாடா ஹாரியர் காரை அலங்கரிக்கும் விதமாக இளைஞர் ஒருவர் ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

டாடா நிறுவனத்தின் பிரபல கார்களில் ஒன்றாக ஹாரியர் இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக காராகும். இந்த காருக்குதான் இளைஞர் ஒருவர் ரூ. 40 ஆயிரம் செலவில் ஸ்டிக்கரை ஒட்டியிருக்கின்றார். ஏற்கனவே கவர்ச்சியான தோற்றத்தில் இருக்கும் ஹாரியர் காருக்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை அவர் மேற்கொண்டிருக்கின்றார்.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

டாடா நிறுவனம் ஹாரியர் எஸ்யூவி காரை அறிமுகம் செய்த சில மாதங்களிலேயே இக்காரின் அப்டேட் வெர்ஷனை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதில் அதி திறன் வாய்ந்த எஞ்ஜின் தேர்வு, ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் விற்பனைக்கு கிடைக்கின்றது. இருப்பினும், ஒரு சில விஷயங்களை ஹாரியர் பயனர்கள் கூடுதலாக சேர்த்துக்கொள்கின்றனர்.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

அம்மாதிரியான ஹாரியர் பயனர் தீபு கவுட் என்பவரே டாடா ஹாரியர் எஸ்யூவி காரை அட்டகாசமான அவுட்லுக்கில் உருமாற்றியுள்ளார். இதுகுறித்த படங்களை அவரே இணையம் வாயிலாக பகிர்ந்தும் இருக்கின்றார். அட்டகாசமான ஸ்டிக்கர் ஒட்டுதலைப் பெற்றிருக்கும் இக்கார் ஓர் ட்யூவல் டோன் நிறத்திலான ஹாரியர் ஆகும்.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

இக்காரின் பானட்டில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர், நங்கூரம் ஒன்று சங்கிலியால் கட்டப்பட்டு தொங்க விட்டிருப்பதைப் போன்ற வடிவைப் பெற்றிருக்கின்றது. இதேபோன்று பக்கவாட்டு ஸ்டிக்கரில் முற்றிலும் வித்தியாசமான உருவங்கள் காட்சியளிக்கின்றன. இதுபோன்ற ஸ்டிக்கர்களே காரின் பின் மற்றும் பின் பக்க மேற்கூறை பகுதியில் ஒட்டப்பட்டிருக்கின்றன.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

இந்த ஸ்டிக்கர் அமைப்பு காருக்கு அட்டகாசமான வெளிப்புற தோற்றத்தை வழங்குகின்றது. குறிப்பிட்டுக் கூற வேண்டுமானால் மிக மிக கவர்ச்சியான காராக டாடா ஹாரியர் மாறியிருக்கின்றது. காரின் வெளிப்பக்கத்திற்கு மட்டுமின்றி அலாய் வீல்களுக்கும் புதிய நிறம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கு கருப்பு நிற பெயிண்ட் பூச்சு வழங்கப்பட்டுள்ளது.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

இதேபோன்று காரின் ஜன்னல் கண்ணாடிகளும் மாற்றப்பட்டிருக்கின்றன. முந்தைய ஜன்னல் கண்ணாடிகள் நீக்கப்பட்டு தற்போது அடர் கருப்பு நிறம் கொண்ட கண்ணாடிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் சேர்ந்து ஹாரியருக்கு ஓர் முரட்டு பையன் போன்ற தோற்றத்தை வழங்குகின்றன. இந்த ஒட்டுமொத்த மாற்றத்திற்குமே சேர்த்து ரூ. 40 ஆயிரம் செலவாகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

இது சற்று காஸ்ட்லியான ஸ்டிக்கர் விராப்பிங் ஆகும். இதனை நாட்டின் எந்த மூலையிலும் நம்மால் பெற முடியும். ஆனால், இதுபோன்ற மாற்றங்களைச் செய்வது சட்டத்திற்கு புறம்பான செயலாகும். குறிப்பாக அடர் கருப்பு நிறம் கொண்ட ஜன்னல் கண்ணாடிகளைப் பயன்படுத்துவது மோட்டார் வாகன விதிகளின்படி கடுமையான குற்றமாகக் கருதப்படுகின்றது.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

எனவேதான் இதுபோன்ற மாற்றங்களைக் கொண்ட வாகனங்களை சாலையில் இயங்க போலீஸார் அனுமதி மறுக்கின்றனர். ஸ்டிக்கர் விராப்பிங் மற்றும் ஜன்னல் கண்ணாடி மாற்றத்தைத் தவிர வேறெந்த சேஞ்ஜஸ்களும் இக்காரில் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகின்றது.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

இந்தியாவைப் பொருத்தவரை வாகன விவகாரத்தில் உண்மை தோற்றத்தை மாற்றக்கூடிய எந்தவொரு மாறுதலுக்கும் அனுமதி கிடையாது. இது பல்வேறு சட்ட விரோத செயலுக்கு வழி வகுக்கும் என்கின்ற காரணத்திற்காக வாகன மாடிஃபிகேஷனை இந்திய மோட்டார் வாகன சட்டம் ஏற்பதில்லை. ஆகையால், பெரும் பொருட்செலவில் செய்யப்படும் மாற்றங்கள் பிற்காலங்களில் பல்வேறு பின்விளைவுகளில் சிக்க வழி வகுக்கும்.

ரூ. 40 ஆயிரத்திற்கு ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞர்... செலவு அதிகம்தான் இருந்தாலும் டாடா ஹாரியர் அட்டகாசமா இருக்கு!

டாடா ஹாரியர் மாடலின் ஆரம்ப விலை ரூ.13.69 லட்சமாகவும், இதன் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டின் விலை ரூ.16.25 லட்சமாகவும் உள்ளது. டாடா நிறுவனம் சமீபத்திலேயே பிஎஸ்6 அப்டேட் உடன் ஹாரியரை அறிமுகப்படுத்தியது. ரூ.70,000 விலை அதிகரிப்புடன் இக்கார் சந்தைக்கு கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles
English summary
Tata Harrier SUV Wrapped With Multiple Colours. Read In Tamil.
Story first published: Thursday, September 17, 2020, 20:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X