மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

ஹார்ன்பில் என்ற பெயரில் விரைவில் அறிமுகமாகவுள்ள டாடா எச்2எக்ஸ் தயாரிப்பு வெர்சன் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை சோதனை ஓட்டத்தின்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

ரஷ்லேன் செய்தி தளம் இந்த மினி எஸ்யூவி காரின் சோதனை ஓட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. எச்2எக்ஸ் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாகுவதால் இந்த காரில் சி-பில்லரில் செங்குத்தாக சொருக்கப்பட்ட ரூஃப் வழங்கப்பட்டுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

காரின் முன்புறத்தில் இரு பகுதிகளாக ஹெட்லேம்ப்கள் மற்றும் தாழ்வாக பொருத்தப்பட்ட வட்ட வடிவிலான ஃபாக் விளக்குகள் உள்ளன. முன்புற பம்பரில் டாடாவின் லேட்டஸ்ட் டிசைன் மொழியின் அடிப்படையில் மூன்று-தலை அம்பு டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது. டெயில்லைட்டில் ஒளிரக்கூடிய பாகங்களிலும் இந்த டிசைன் வழங்கப்படலாம்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

உட்புறத்தில் இந்த மினி எஸ்யூவி கார் புதுமையான டிசைனில் டேஸ்போர்ட்டை பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இதன் உட்புற கேபினில் தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கலாம்.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

சற்று உயரத்தில் பொருத்தப்பட்ட இருக்கை அமைப்புகளுடன் வெளிவரவுள்ள புதிய எச்2எக்ஸ் காரில் ஹார்மன் ஆடியோ சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் மாடல் உருவாக்கப்பட்ட மாடுலர் ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் தான் இந்த காரும் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, இக்னிஸ் மற்றும் மஹிந்திரா கேயூவி100 மாடல்களுடன் போட்டியிடவுள்ள இந்த மினி எஸ்யூவி காரை இம்பேக்ட் 2.0 டிசைன் தத்துவத்தின்படி உருவாக்கி வருகின்ற டாடா நிறுவனம் ஹெரியர் மாடலில் இருந்து சில பாகங்களை எடுத்து இந்த காரில் பொருத்தியுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

எலக்ட்ரிக் மோட்டாருடன் இணக்கமானதாக ஹார்ன்பில் மாடல் தயாரிக்கப்பட இருந்தாலும், எஸ்யூவி மாடல் முதலில் வழக்கமான எரிபொருள் என்ஜின் உடன் விற்பனைக்கு வரவுள்ளது. இதன்படி இந்த காரில் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவுள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

அதிகப்பட்சமாக 86 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. இந்த மினி எஸ்யூவி மாடலின் விலை எக்ஸ்ஷோரூமில் 4-5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மாருதி எஸ்-பிரெஸ்ஸோவிற்கு போட்டியாக டாடா கொண்டுவரும் புதிய மினி எஸ்யூவி.. லாக்டவுன் தளர்வால் சோதனை..

கொரோனா வைரஸினால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் டாடா ஹார்ன்பில் மாடலின் அறிமுகம், சோதனை மற்றும் சரிபார்ப்பு செயல்முறை போன்ற டாடாவின் செயல்பாடுகள் அனைத்தும் பாதியில் நின்றுள்ளன. இருப்பினும் இந்த ஆண்டு பண்டிக்கை காலத்தில் இதன் அறிமுகம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Tata HBx mini SUV to rival Maruti S Presso – Spied as lockdown eased
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X