Just In
- 2 hrs ago
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- 9 hrs ago
பாதுகாப்பு படை வீரர்களுக்காக களமிறங்கிய ராயல் என்பீல்டு பைக் ஆம்புலன்ஸ்கள்... உருவாக்கியது யார்னு தெரியுமா?
- 10 hrs ago
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- 11 hrs ago
பிரேக் பிடிக்காததால் லாரியை 3 கிலோ மீட்டர் தூரம் ரிவர்ஸ் கியரில் ஓட்டிய டிரைவர்... கடைசில என்ன ஆச்சு தெரியுமா?
Don't Miss!
- News
சட்டசபை தேர்தலில் திமுக அணிக்கு 1.7% தான் கூடுதல் வாக்குகளாம்- எச்சரிக்கும் ஏபிபி- சி வோட்டர் சர்வே
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Movies
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கடவுள்போல் உயிர்களை காப்பாற்றும் டாடா தயாரிப்புகள்... வீடியோ வெளியிட்டு நெகிழ்ந்த இளைஞர்...
டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் அதிக பாதுகாப்பு கொண்டவையாக என்பதை நிரூபிக்கின்ற வகையில் இளைஞர் ஒருவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்த தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாலைகள் ஆபத்து நிறைந்தவை என்பதை எடுத்துரைக்கின்ற வகையில் நாள்தோறும் விபத்தின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணமே இருக்கின்றது. தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவலால் பொதுமுடக்கம் நீடித்துக் கொண்டிருக்கின்ற நிலையிலும் விபத்தின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.

இதற்கு வாகன ஓட்டிகள் கண்மூடித் தனமாக வாகனத்தை இயக்குவதே முக்கிய காரணமாக இருக்கின்றது. வைரஸ் பரவல் காரணமாக தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நாடு முழுவதும் செயல்பாட்டில் இருப்பதால் பெரும்பாலான முக்கிய சாலைகள் வெறிச்சேடிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இதனை தங்களுக்காகவே ஆள் நடமாட்டம் இல்லாமல் செய்யப்பட்டிருப்பதாக எண்ணிக்கொள்ளும் வாகன ஓட்டிகள் கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் வாகனத்தை இயக்குகின்றனர். இதன்விளைவாக விபத்து மற்றும் காவல்துறையின் கெடுபிடியில் சிக்கி மிகுந்த வேதனைக்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில்தான் நம்ப முடியாத ஓர் விபத்துச் சம்பவம் பற்றிய தகவல் இணையத்தில் வெளியாகி பலரை ஆச்சரியத்தில் மூழ்கடித்து வருகின்றது. இந்த விபத்தில் டாடா நிறுவனத்தின் ஹெக்ஸா கார், கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு சிதைந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. ஆனால், இந்த விபத்தில் உயிர்சேதம் ஏதும் அரங்கேறவில்லை என கூறப்படுகின்றது.

அதேசமயம், நாம் பார்க்கவிருக்கும் இந்த சம்பவம், கொரோனா காலத்தில் அரங்கேறியது இல்லை என்றும், கொரோனாவிற்கும் முந்தைய நாட்களில் நடைபெற்ற சம்பவம் என்றும் விபத்துகுறித்து வீடியோவை வெளியிட்டிருக்கும் யுட்யூப் இளைஞர் கூறியுள்ளார். டாடா நிறுவனத்தின் கார்களின் பாதுகாப்பு அம்சத்தைப் பற்றிய தெளிவுப்படுத்தும் விதமாகவேமுந்தைய நாட்களில் நடைபெற்ற விபத்தின் வீடியோ மற்றும் தகவலை அவர் பகிர்ந்திருப்பதாக கூறுகின்றார்.

இதுகுறித்த வீடியோவை நிகில் ரானா எனும் அவரது யுட்யூப் பக்கத்திலேயே வெளியிட்டிருக்கின்றார். இந்த சம்பவத்தில் டாடா ஹெக்ஸா காரை இயக்கிய ஓட்டுநர் மற்றும் காரின் உரிமையாளர் ஆகிய இருவருமே எந்தவொரு ஆபத்துமின்றி தப்பித்திருப்பதனாலயே இந்த தகவலை மிகவும் பெருமையுடன் அவர் பதிவிட்டுள்ளார். இந்த விபத்து யுட்யூபரை மட்டுமில்லைங்க, விபத்தை நேரில் பார்த்தவர்களுக்கும் மிகுந்த ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏனெனில், விபத்திற்கு பின்னர் காரின் தோற்றம் அந்தளவிற்கு உருக்குலைந்து காணப்பட்டிருக்கின்றது. விபத்துகுறித்த புகைப்படத்தைப் பார்க்கும் பலர், ஏன் நீங்கள்கூட, "இப்பேர்பட்ட விபத்தில் இருந்தா பயணிகள் தப்பித்தார்கள்" என ஆச்சரியமடைவீர்கள். அந்தளவிற்கு கார் முழுவதுமாக சேதமடைந்துள்ளது. கண் மூடித் தனமாக முன்னாடிச் சென்றுக் கொண்டிருந்த டிராக்டரை ஓவர்டேக் செய்த பேருந்தினாலயே இந்த விபத்து நேர்ந்ததாகக் கூறப்படுகின்றது.

இதில், டாடா ஹெக்ஸா காரில் வந்தவர்கள் அப்பாவிகள் என்றே கருதப்படுகின்றது. ஏனெனில் அவர்கள், அவர்களுக்கான பாதையில் எந்த விதிமீறலிலும் ஈடுபடாமல் சென்றிருக்கின்றனர். ஆனால், பேருந்து ஓட்டுநரோ, அவசரம் காரணமாக தன் முன்னால் சென்றுக் கொண்டிருந்த வாகனங்களை ஓவர் டேக் செய்தவாறே சென்றிருக்கின்றார். அப்போதுதான் இந்த எதிர்பாராத விபத்து அரங்கேறியிருக்கின்றது.

இதில் டாடா ஹெக்ஸாவின் முன் பகுதி அப்பளத்தோடுகூட ஒப்பிட முடியாத வகையில் நொறுங்கியது. இதில், அதிர்ஷ்டவசமாக காரில் பயணித்த இருவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். ஆனால், அவர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டிருந்தன. தற்போது அவர்கள் சிகிச்சைப் பெற்று நலமுடன் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையேதான் அந்த யுட்யூபரும் உறுதி செய்கின்றார்.

டாடா நிறுவனத்தின் ஹெக்ஸா கார் மட்டுமில்லைங்க மேலும் பல தயாரிப்புகள் இதுபோன்று அதிக பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டதாக இருக்கின்றன. அதிலும், டாடா நிறுவனத்தின் நெக்ஸான் எஸ்யூவி கூடுதல் பாதுகாப்பு அம்சங்களைக் தாங்கியதாக காட்சியளிக்கின்றது. இதுமட்டுமின்றி, டாடா நிறுவனத்தின் டியாகோ, டிகோர் மற்றும் ஹாரியர் ஆகிய அனைத்து கார்களும் அதிக பாதுகாப்பு கவசங்களைக் கொண்டதாக தற்போது விற்பனைக்கு கிடைத்து வருகின்றன.

இதில் டாடா ஹெக்ஸா கார் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் விற்பனையில் இருந்து நீக்கப்பட்டது. அக்கார் அனைத்து சீதோஷ்ன நிலை மற்றும் நிலப்பரப்பையும் சமாளிக்கின்ற திறனைக் கொண்ட மாடலாகும். இதனால், இந்தியாவில் ஹெக்ஸா கணிசமான வரவேற்பைப் பெற்றது. இருப்பினும் ஒரு சில காரணங்களுக்காக அது சந்தையில் இருந்து நீக்கப்பட்டது.
இருப்பினும் இந்த காரின் இழப்பை ஈடுகட்டுகின்ற வகையில் பல்வேறு அதிக பாதுகாப்பு திறன் கொண்ட கார்களை டாடா மோட்டார்ஸ் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுமட்டுமின்றி புதிய அதிக இருக்கை வசதிக் கொண்ட கிராவிட்டஸ் எஸ்யூவி மாடலையும் அது விரைவில் களமிறக்க இருக்கின்றது. இக்கார் குறித்த கூடுதல் தகவலை அறிந்துக்கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.