மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

கடந்த மார்ச் மாதத்தில் ஒரு ஹெக்ஸா கார் கூட விற்பனையாகததால் இந்த மாடலின் தயாரிப்பை நிறுத்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மற்றப்படி கடந்த மாதம் 22ஆம் தேதி இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டுவரப்பட்ட ஊரடங்கு உத்தரவு இதன் தயாரிப்பு நிறுத்தத்திற்கு காரணம் இல்லை.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

விற்பனையில் சோபிக்காததால் நிறுத்தப்பட்டுள்ள டாடா ஹெக்ஸா மாடலின் தயாரிப்பு பணிகள், இந்த கார் பிஎஸ்6 தரத்திற்கு அப்கிரேட் செய்யும்போது தான் மீண்டும் துவங்கவுள்ளது. ஹெக்ஸா மாடலை தவிர்த்து டாடா நிறுவனத்தின் பெரும்பான்மையான மாடல்கள், பிஎஸ்4 வாகனங்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்த ஏப்ரல் 1 காலக்கெடு முன்பாகவே பிஎஸ்6-க்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுவிட்டன.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

இந்த வகையில் சமீபத்தில் இந்நிறுவனத்தில் இருந்து அல்ட்ராஸ் பிஎஸ்6 கார் புதியதாக அறிமுகமானது. தயாரிப்பு நிறுத்தப்பட்டுள்ள ஹெக்ஸா மாடலில் 2.2 லிட்டர் டீசல் என்ஜினை வாரிகோர் 320 மற்றும் வாரிகோர் 400 என்ற இரு ட்யூன் தேர்வுகளில் டாடா நிறுவனம் வழங்கி வருகிறது.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

இந்த டீசல் என்ஜின் தான் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படவுள்ளது. இதில் 2.2 லிட்டர் வாரிகோர் 320 என்ஜினானது அதிகப்பட்சமாக 4,000 ஆர்பிஎம்-ல் 150 பிஎச்பி பவரையும், 1,500-3,000 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனையும் தற்போதைய பிஎஸ்4 மாடலில் வெளிப்படுத்துகிறது.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படவுள்ளது. 2.2 லிட்டர் வாரிகோர் 400 என்ஜின் 4,000 ஆர்பிஎம்-ல் 156 பிஎச்பி பவர் மற்றும் 1,750-2,500 ஆர்பிஎம்-ல் 400 என்எம் டார்க் திறனையும் அதிகப்பட்சமாக காருக்கு வழங்கி வருகிறது.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

இந்த என்ஜினுடன் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 2020 டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் ஹெக்ஸா மாடலின் கான்செப்ட் வெர்சனை டாடா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

இதனால் பிஎஸ்6 ஹெக்ஸா சஃபாரி மாடலின் அறிமுகத்தை இன்னும் சில வாரங்களில் சந்தையில் எதிர்பார்க்கலாம். மேலும் இந்த கான்செப்ட் வெர்சன் காரில் வாரிகோர் 400 என்ஜினை 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மற்றும் 4x4 சிஸ்டத்துடன் டாடா நிறுவனம் வழங்கியிருந்தது.

மார்ச்சில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை... ஹெக்ஸாவின் தயாரிப்பை நிறுத்தும் டாடா மோட்டார்ஸ்...

ஸ்பெஷலான பச்சை நிற பெயிண்ட் அமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த டாடா ஹெக்ஸா சஃபாரி கான்செப்ட் வெர்சனில் ரேடியேட்டர் க்ரில் ஃப்ரேம், கண்ணாடிகள், கதவு ஹேண்டில்கள் மற்றும் டெயில்கேட் கார்னிஷ், ரூஃப் ரெயில்கள் உள்ளிட்டவை பளபளப்பான கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது. காரை சுற்றிலும் கூடுதலான கருப்பு நிறத்தில் க்ளாடிங்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

Most Read Articles

English summary
Tata Hexa Registers Zero Units Sold In March: MPV Discontinued In India
Story first published: Saturday, April 4, 2020, 11:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X