வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

டார்க் எடிசனை ஹெரியரின் விலை குறைவான எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி+ ட்ரிம்களுக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

டாடா ஹெரியரின் டாப் எக்ஸ்இசட் மற்றும் எக்ஸ்இசட்+ ட்ரிம்கள் ஏற்கனவே டார்க் எடிசனில் விற்பனைக்கு கிடைத்து வருகின்றன. இந்த நிலையில்தான் ஹெரியர் டார்க் எடிசனை இன்னும் வாடிக்கையாளர்கள் எளிதில் பெறும் விதமாக குறைவான விலையில் ஆரம்ப நிலை எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி+ ட்ரிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

ஹெரியர் டார்க் எடிசன் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி+ ட்ரிம்களின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.16.50 லட்சம் மற்றும் ரூ.17.30 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஹெரியரின் ஆரம்ப விலையை காட்டிலும் அதன் டார்க் எடிசனின் ஆரம்ப விலை சுமார் ரூ.1.35 லட்சம் குறைவாகும்.

Harrier 6 MT 6 AT
Variant Price Price
XE Rs13,84,000 NA
XM Rs15,15,000 Rs16,40,000
XT Rs16,40,000 NA
XT Dark Rs16,50,000 NA
XT+ Rs17,20,000 NA
XT+ Dark Rs17,30,000 NA
XZ Rs17,65,000 Rs18,95,000
XZ DT Rs17,15,000 Rs19,05,000
XZ Dark Rs17,85,000 Rs19,15,000
XZ+ Rs18,90,000 Rs19,99,500
XZ+ DT Rs19,00,000 Rs20,20,000
XZ+ Dark Rs19,10,000 Rs20,30,000
வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

தோற்றத்தை பொறுத்துவரையில் ஹெரியரின் டாப் வேரியண்ட்களின் டார்க் எடிசனைதான் தற்போது புதியதாக கொண்டுவரப்பட்டுள்ள விலை குறைவான டார்க் எடிசன்களும் பெற்றுள்ளன. இதனால் வழக்கம்போல் அடர் கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள காரில் அலாய் சக்கரங்கள் மற்றும் பம்பரின் மீதுள்ள ஸ்கிட் தட்டுகள் கருப்பு நிறத்தில் ஜொலிக்கின்றன.

வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

அதேநேரம் டார்க் தீம் காரின் உட்புற கேபினிற்கு நன்கு மேம்படுத்த நிலையிலேயே வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் டேஸ்போர்டு மற்றும் இருக்கைகள் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதுவே ஹெரியரின் வழக்கமான வேரியண்ட்களில் டேஸ்போர்டு ட்யூல்-டோன் பழுப்பு நிறத்தில் வழங்கப்படுகிறது.

வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

டாடா ஹெரியரின் எக்ஸ்டி மற்றும் எக்ஸ்டி+ ட்ரிம்கள் 7 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், என்ஜின் ட்ரைவ் மோட்கள், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், கீலெஸ் எண்ட்ரீ, ஆட்டோமேட்டிக் வைபர் மற்றும் ஹெட்லேம்ப்கள் (ஹலோஜன் ப்ரோஜெக்டர்கள்), என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான், இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஹோல்ட் அசிஸ்ட் உள்ளிட்டவற்றை பெற்று வருகின்றன.

வழக்கமான வேரியண்ட்களை காட்டிலும் டார்க் எடிசனில் டாடா ஹெரியரை வாங்குவதே சிறந்தது... ஏன் தெரியுமா..?

எக்ஸ்டி+ ட்ரிம் கூடுதலாக பனோராமிக் சன்ரூஃப்-ஐயும் பெறுகிறது. இந்த ட்ரிம்களுக்கு வழங்கப்படும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் இவற்றின் புதிய டார்க் எடிசன்களுக்கும் தொடரவுள்ளது. வழக்கமான எக்ஸ்டி+ ட்ரிம்-ஐ காட்டிலும் எக்ஸ்டி+ டார்க் எடிசன் வெறும் ரூ.10,000 மட்டுமே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Harrier Dark Edition Gets Cheaper By Rs 1.35 L – New Variants Launched
Story first published: Wednesday, October 7, 2020, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X