சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

கொரோனா வைரசிடம் இருந்து பாதுகாக்கக்கூடிய பல்வேறு பாதுகாப்பு கவசங்களை டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

2019ம் ஆண்டின் இறுதியில் பரவ ஆரம்பித்த கோவிட்-19 வைரஸ், இன்றளவும் சிறு துளிகூட வீரியம் குறையாமல் உலக நாடுகள் அனைத்திலும் பரவிக் கொண்டிருக்கின்றது. இந்த வைரசின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றுவதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகினாலும், அது பயன்பாட்டிற்கு வர இன்னும் பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகின்றது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

எனவே, மக்கள் தங்களைத் தாங்களே வைரசின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்வது தலையாய கடமையாக மாறியுள்ளது. தற்போது வைரஸ் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள முக மூடி, கண்ணாடி மாஸ்க், சானிட்டைசர் போன்றவற்றை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இவை பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதிச் செய்யப்பட்டு வருகின்றன.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இந்நிலையில், நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா, உள் நாட்டிலேயே வைரஸ் தடுப்பு உபகரணங்களை தயாரித்து குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

மக்களை வைரசின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றும் விதமாக பல்வேறு பாதுகாப்பு கவசம் மற்றும் கிருமி நாசினிகளை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதுகுறித்த புகைப்படங்களை ஆங்கில தளமான ரஷ்லேன் வெளியிட்டுள்ளது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

முன்னதாக, டாடா நிறுவனம் கொரோனா வைரசுக்கு எதிரான போரில் மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ரூ. 1,500 கோடிகளை தாராள மனதுடன் அரசுக்கு வழங்கி உதவியது. இதுமட்டுமின்றி, நாட்டின் சில ரிமோட் கிராமங்களைத் தேர்வு செய்து, அங்கு மக்களிடையே வைரஸ் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு (சானிட்டைசர், மாஸ்க்) அம்சங்களை வழங்கியது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இதுமட்டுமின்றி, கொரோனா பாதிப்பின் ஹாட் ஸ்பாட்டாக மாறியிருக்கும் மும்பை அரசுக்கு உதவிக் கரம் நீட்டும் விதமாக 100 வென்டிலேட்டர்கள், 20 விங்கர் மாடலிலான உயிர் காக்கும் ஆம்புலன்ஸ்களை கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கியது. இத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் ரூ. 10 கோடி நிதியை அம்மாநில வைரஸ் மற்றும் நோய் பற்றி ஆய்வு செய்யும் நிறுவனத்திற்கு வைரசுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதற்காக வழங்கியது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இவ்வாறு, தொடர்ச்சியாக மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற முழு முனைப்புடன் டாடா நிறுவனம் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றது.

இந்த நிலையில்தான் தற்போது குறைந்த விலையில் பாதுகாப்பு அம்சங்களை டாடா நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

அந்தவைகயில், சானிட்டைசேஷன் கிட் ரூ. 1,499 க்கும், கார்களில் பிரிவை ஏற்படுத்த உதவும் கண்ணாடி கவர்களை ரூ. 1,399-க்கும் அது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

கண்ணாடி கவர்கள் டாடா நெக்ஸான், டியாகோ மற்றும் டிகோருக்கு மட்டுமே பொருந்தும். மேலும், சானிட்டைசேஷன் பேக்கில் கேஎன் 95 மாஸ்க் மற்றும் காரின் முக்கிய கூறுகளை பாதுகாப்பாக மூடக் கூடிய கவர் அதில் அடங்கும்.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இந்த கவர்களைக் கொண்டு ஸ்டியரிங் வீல், இருக்கை, கியர் க்நாப் மற்றும் பிரேக் ஆகியவற்றை மூட முடியும். இத்துடன், சானிட்டைசேஷன் பேக்கில் டிஸ்யூஸ், ஹேண்ட் சானிட்டைசர், நைட்ரைல்ஸ் குளோவ்ஸ், டிஃபியூசர் (இந்த திரவம் அதிகமாக தொடக்கூடிய இடங்களை சுத்தம் செய்ய உதவும்), சாவியைப் பாதுக்காக்கும் பெட்டகம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களை டாடா வழங்குகின்றது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இந்த கவர்களை எஸ்எஸ்எம்எஸ் எனும் தனிச் சிறப்புக் கொண்ட மூலக்கூறுகளைக் கொண்டு டாடா தயாரித்துள்ளது. அகையால், இதனை 12 முதல் 15 முறை வரை துவைத்து பயன்படுத்தலாம்.

இதேபோன்று பிரிவை ஏற்படுத்தும் கண்ணாடி கவர்களைப் பற்றி கூடுதலாக கூற வேண்டுமானால், அந்த கவர்கள் உயர் ரக பிவிசி ஷீட்டுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. இது, 0.4 மிமீ தடிமனைக் கொண்டதாகும். ஆகையால், இது எளிதில் கிழிந்துவிடாது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இந்த கண்ணாடி திரைகள் காரை தனியறைக் கொண்டதாக மாற்ற உதவும். இதனால், பயணிகளுக்கு இடையேயான தொடர்பு தவிர்க்கப்பட்டு, சமூக இடைவெளி உறுதிச் செய்யப்படும். இதனை ஒட்டுவது மற்றும் கழட்டுவது மிக சுலபம். எனவே, ஒரு முறை பயன்படுத்திய பின்னர், அந்த கண்ணாடி திரைகளை முழுமையாக கழட்டி எளிதாக சுத்தம் செய்யலாம்.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

மேலே பார்த்தது மட்டுமின்றி கூடுதலாக ஏர் ப்யூரிஃபையர் (Air Purifier), சானிட்டைஸ் செய்யக்கூடிய கால் மிதிகள் (Sanitization Floor Mat), கை படாமலே பயன்படுத்தக்கூடிய சேனிட்டைசர் தெளிப்பான் (Hand sanitizer) கேபின் காற்றை வடிகட்டும் கருவி (Air O Pure 95) உள்ளிட்டவற்றையும் டாடா விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இதில், ஏர் ப்யூரிஃபையரின் விலை ரூ. 5,799 ஆகும். இது காரின் கேபினுக்குள் இருக்கும் அசுத்தமான கிருமிகள் நிறைந்த காற்றைச் சுத்தமாக்கி, சுவாசிக்க உகந்ததாக மாற்றும். இதைப் பொருத்துவதன் மூலம் தும்பல் மற்றும் நெடியையும் தூசுக்கள் வெளியேற்ற முடியும். இத்துடன், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களையும் அழிக்க உதவும். இது ஓர் கார்பன் திறன் கொண்ட ஹெப்பா பிஎம் 2.5 ப்யூரிஃபையர் ஆகும்.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இதனைப் பயன்படுத்த 5வாட் திறன் கொண்ட யுஎஸ்பி போர்ட்டே போதுமானது. மேலும், இதில் இருந்து வெளிவரும் சத்தம் உற்று கேட்டாலும்கூட மிக மிக குறைந்த அளவிலேயே கேட்கும். இது 35டிபிக்கும் குறைவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இதேபோன்று குறைந்த விலையான ரூ. 399-ல் ஹாரியர் காருக்கும், ரூ. 259-ல் நெக்ஸான் காருக்கும் கேபின் ஏர் ப்யூரிஃபையர் அம்சத்தை டாடா அறிவித்துள்ளது. இது கார்களுக்குள் இருக்கும் மாசு மற்றும் வைரஸ் போன்றவற்றை அழிக்க உதவும்.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இதைத்தொடர்ந்து, சானிட்டைசேஷன் ப்ளூர் மேட்டைப் பற்றி பார்ப்போமேயானால், இது காலணிகள் மூலம் பரவும் நோய் தொற்றுக் கிருமிகளை அழிக்க உதவும். 1040x720 மிமீ அளவில் உள்ள இது ரூ. 2,333 என்ற விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

இதேபோன்று, ஹேண்ட்ஸ் ஃப்ரீ சானிட்டைசேஷன் டிஸ்பென்சர் ஸ்டாண்ட் ரூ. 2,100க்கும், இதன் உலோக வெர்ஷன் ரூ. 2,999க்கும் விற்கப்பட உள்ளது. காலால் மிதிப்பதன் மூலம் இதனை இயக்க முடியும். இதில், 250 மில்லி முதல் 1 லிட்டர் வரையிலான சானிட்டைசர் பாட்டிலைப் பொருத்த முடியும்.

சூப்பர்... மக்களை காப்பாற்ற குறைந்த விலையில் கொரோனா பாதுகாப்பு கருவிகள்... டாடாவை மிஞ்ச ஆளே இல்ல...

மேற்கூறிய அம்சங்கள் பலவற்றிற்கு ஒரு வருட வாரண்டியை டாடா வழங்கியுள்ளது. குறைந்த விலையில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கும், இந்த பாதுகாப்பு உபகரணங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா தடுப்பு பணியில் டாடா நிறுவனம் பல நற்பணிகளை மேற்கொண்டுள்ளது. அதில், இந்த குறைந்த விலை பாதுகாப்பு அம்சங்களும் அடங்கும்.

Most Read Articles

English summary
Tata Launches Corona Virus Safety Products. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X