கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

லிஃப்ட், சார்ஜர், ஒய்-ஃபை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கொண்ட மின்சார காரை டாடா நிறுவனம் மும்பைக்கு டெலிவரிக்கு வழங்கியுள்ளது. இதுகுறித்த தகவலை இப்பதிவில் காணலாம்.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பைக்கு டாடா மோட்டார்ஸ் 26 மின்சார பேருந்துகளை இன்று (4 டிசம்பர்) டெலிவரி வழங்கியது. இந்த பேருந்துகள் பிரிஹன் மும்பை மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அண்மையில் இதுவரை எந்தவொரு நகரமும் கொடுத்திராத வகையில் 340 மின்சார பேருந்துகளுக்கான ஆர்டர் கொடுக்கப்பட்டன.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

இதனடிப்படையிலேயே உரிய நேரத்தில் இன்று 26 மின்சார பேருந்துகள் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள மின்சார பேருந்துகள் வருகின்ற காலத்தில் கொடுக்கப்பட்ட திட்ட அட்டவனையின்படி வரிசையாக டெலிவரிக் கொடுக்கப்பட இருக்கின்றன. இதன் முன்னோட்டமாகவே இன்றைய டெலிவரி வழங்கல் நிகழ்வு அமைந்திருக்கின்றது.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

பேருந்து டெலிவரி வழங்கும் நிகழ்வில் மஹாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சர் உத்தவ் தாக்ரே உட்பட பல முக்கிய அரசு அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். தற்போது வழங்கப்பட்டிருக்கும் இந்த மின்சார பேருந்துகள் மும்பையின் பேக்பே, ஒர்லி, மல்வானி மற்றும் சிவாஜி நகர் ஆகிய பகுதிகளில் பயன்படுத்தப்பட இருக்கின்றன.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

இதனை பராமரிக்கும் பணியினை டாடா மோட்டார்ஸே ஏற்றுக் கொண்டிருக்கின்றது. சார்ஜ், அப்கிரேஷன் மற்றும் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை அதுவே மேற்கொள்ள இருக்கின்றது. டெலிவரிக் கொடுக்கப்பட்டிருக்கும் மின்சார பேருந்துகள், அல்ட்ரா அர்பன் குளிர்சாதன வசதிக் கொண்ட பேருந்துகள் ஆகும்.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

25 இருக்கைகளை மட்டுமே இந்த பேருந்துகள் கொண்டிருக்கின்றது. எனவே விசாலமான இடவசதி மற்றும் சொகுசான பயணத்திற்கு ஏற்ற பேருந்தாக இது இருக்கும். இதுமட்டுமின்றி, பயணிகளின் பயன்பாட்டு வசதிக்காக செல்போன் சார்ஜிங் போர்ட், வைஃபை ஹாட்ஸ்பாட் உள்ளிட்ட வசதிகளும் பேருந்தில் இடம் பெற்றிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

இத்துடன், பயணிகள் எளிதில் ஏறி, இறங்குவதற்கு ஏதுவாக மிகப்பெரிய நுழைவாயில்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கான லிஃப்ட் திறன் படிகட்டு வசதியும் இப்பேருந்தில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது, அவர்களை பேருந்திற்குள் ஏற்ற மற்றும் இறக்குவதற்கு உதவியாக இருக்கும்.

கார் மட்டுமில்ல டாடாவின் பேருந்துகளும் கெத்தா இருக்கு... நம்ப முடியா வசதிகளுடன் 26 பேருந்துகளை டெலிவரி பெற்ற மும்பை!

இதுபோன்ற பல்வேறு சிறப்பு வசதிகளுடன் டாடா மின்சார பேருந்துகள் மும்பைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, இப்பேருந்தில் ஐடிஎஸ் எனப்படும் நுண்ணறிவு போக்குவரத்து சிஸ்டம், டெலிமேடிக்ஸ் சிஸ்டம் மற்றும் மீளுருவாக்கம் செய்யக் கூடிய பிரேக்கிங் வசதி உள்ளிட்ட சிறப்பு தொழில்நுட்ப வசதிகளும் வழங்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

English summary
Tata Motors Delivers 26 State-Of-The-Art e-Buses To BrihanMumbai Electric Supply & Transport. Read In Tamil.
Story first published: Friday, December 4, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X