பயணிகள் வாகன விற்பனை பிரிவை விற்க சீன நிறுவனத்துடன் பேச்சு... டாடா விளக்கம்!

பயணிகள் வாகனப் பிரிவை விற்பனை செய்வதற்கு வெளிநாட்டு நிறுவனத்துடன் பேச்சு நடந்து வருவதாக வெளியானத் தகவலுக்கு டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது டாடா மோட்டார்ஸ். கார், பஸ், டிரக், சிறிய வகை சரக்கு வாகனங்கள் என பல்வேறு வகை வாகனங்களை டாடா மோட்டார்ஸ் தயாரித்து வருகிறது. குறிப்பாக, வர்த்தக வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் முதன்மை வகிக்கிறது.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

அதேநேரத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் அடங்கிய பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு தொடர்ந்து எதிர்பார்த்த அளவு விற்பனை வளர்ச்சியை பெற முடியாமல் தவித்து வருகிறது.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

பயணிகள் வாகன விற்பனைப் பிரிவை தூக்கி நிறுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் கற்றை வித்தைகளையும் போட்டு பார்த்தும், அது பிரயோஜனமாக இல்லை. தொடர்ந்து நஷ்டத்தையே சந்தித்து வருகிறது.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

இதனால், பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு குறித்து டாடா மோட்டார்ஸ் அதிரடி முடிவு எடுத்துள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது. அதாவது, உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனைப் பிரிவின் 49 சதவீத பங்குகளை விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவித்தன.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

மேலும், ஆசியா அல்லது ஐரோப்பாவை சேர்ந்த நிறுவனங்களுடன் இதுதொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், கூடிய விரைவில் விற்பனை செய்ய டாடா மோட்டார்ஸ் முயன்று வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

சீனாவை சேர்ந்த கீலி, செர்ரி உள்ளிட்ட நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தையை டாடா நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதில், செர்ரி நிறுவனம் ஜாகுவார் லேண்ட்ரோவர் சீனப் பிரிவின் 50 சதவீத பங்குகளை வைத்துள்ளது.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

இந்த நிலையில், இந்த செய்திக்கு டாடா மோட்டார்ஸ் மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்வதாக வெளியான அந்த தகவலில் உண்மை இல்லை என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

பயணிகள் வாகன பிரிவை விற்பனை செய்கிறதா டாடா மோட்டார்ஸ்?

இந்தியாவின் மிகவும் வலுவான வாகன விற்பனை கட்டமைப்பு மற்றும் வாடிக்கையாளர் தளத்தை டாடா மோட்டார்ஸ் பெற்றிருப்பதாகவும், சிறந்த தயாரிப்புகளுடன் வர்த்தகத்தை வலுப்படுத்த முயன்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட செய்தியில் துளியும் உண்மை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
Mumbai based auto manufacturer Tata Motors Limited has denied reports of plans to sell up to 49 percent stake in the brand's domestic passenger vehicle business.
Story first published: Saturday, August 8, 2020, 12:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X