இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ். இந்த புதிய டிப்பர் லாரியின் சிறப்புகள், தொழில்நுட்ப விபரங்களை தொடர்ந்து காணலாம்.

 இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்தியாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் என்ற பெருமையை டாடா மோட்டார்ஸ் பெற்றுள்ளது. குறிப்பாக, வர்த்தக வாகன சந்தையில், மிக வலுவான நிறுவனமாக இருந்து வருகிறது. பல வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தாலும், டாடா வர்த்தக வாகனங்களுக்கு பெரிய வரவேற்பு இருந்து வருவதுடன், வலுவான சந்தையையும் வைத்திருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்த நிலையில், வெளிநாட்டு நிறுவனங்களின் வருகையால் எழுந்துள்ள நெருக்கடியை தவிர்த்துக் கொள்ளும் விதத்தில், பல புதிய வர்த்தக வாகனங்களை அறிமுகம் செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ். அந்த வகையில், இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா சிக்னா 4825.TK என்ற பெயரில் இந்த புதிய டிப்பர் லாரி வந்துள்ளது. இந்த டிப்பர் லாரியில் 29 கியூபிக் மீட்டர் பரப்பு கொண்ட பாரம் ஏற்றும் பக்கெட் அமைப்பு இருக்கிறது. அதாவது, 47.5 டன் பாரம் ஏற்றும் திறன் படைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால், சுரங்கம் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு தகுந்ததாக இருக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

டாடா சிக்னா 4825.டிகே டிப்பர் லாரியில் கம்மின்ஸ் 6.7 லிட்டர் பிஎஸ்-6 டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 247 பிஎச்பி பவரையும், 950 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த எஞ்சினுடன் ஜி1150 9 ஸ்பீடு ஹெவி ட்யூட்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்த டிரக்கில் லைட், மீடியம் மற்றும் ஹெவி என மூன்று டிரைவிங் மோடுகளும் இடம்பெற்றுள்ளன. நிலபரப்பு, பாரத்தின் அளவு அடிப்படையில் இந்த டிரைவிங் மோடுகள் பயன்படும். இந்த புதிய டிப்பர் டிரக் 10x4, 10x2 என இரண்டு மாடல்களில் கிடைக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்த டிப்பர் டிரக்கின் கேபின் க்ராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு தரம் சோதிக்கப்பட்டுள்ளது. டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் சிஸ்டம், 3 நிலைகளில் ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி, ஏசி சிஸ்டம், பிளைண்ட் ஸ்பாட் மிரர், வலிமையான ஸ்டீல் பம்பர் அமைப்புடன் வந்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

இந்த டிப்பர் லாரியில் சரிவான சாலைகளில் டிரக் பின்னோக்கி நகர்வதை தடுக்கும் ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எஞ்சின் பிரேக், ஐசிஜிடி பிரேக் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. பாரத்தை இறக்கும்போது டிப்பர் பகுதி மேலே எழும்போது டிப்பர் கவிழும் நிலை ஏற்படுவது குறித்து எச்சரிக்கும் வசதியும் உள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய டிப்பர் லாரியை அறிமுகப்படுத்தியது டாடா மோட்டார்ஸ்

புதிய டாடா சிக்னா 4825.டிகே டிப்பர் லாரிக்கு 6 ஆண்டுகள் அல்லது 6 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படுகிறது. மேலும், உரிமையாளர்கள் லாரி இருக்கும் இடத்தையும், நகர்வையும் துல்லியமாக கண்காணிக்கவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது குறித்த எச்சரிக்கைகளை வழங்கும் கனெக்டெட் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Motors has launched the Signa 4825.TK tipper truck in India. The Signa 4825.TK tipper is the country's first 47.5-tonne multi-axle tipper truck that will be used in the transportation of coal and construction aggregates.
Story first published: Friday, August 14, 2020, 5:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X