ரூ.1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா உற்பத்தி!

கொரோனா வைரசிடம் இருந்து மக்களைக் காப்பதற்காக ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய டாடா குழுமத்தின் டாடா மோட்டார்சுக்கு கடும் நெருக்கடியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

இந்தியாவின் பழம்பெரும் வாகன உற்பத்தி நிறுவனங்களில் டாடா நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் தனித்துவமான வரவேற்பு எப்போதும் உண்டு. இதனாலயே இந்திய வாகன உலகின் ஜாம்பவானாக மிக நீண்ட காலமாக டாடா மோட்டார்ஸ் இருந்து வருகின்றது. ஆனால், இந்நிறுவனம் அண்மைக் காலங்களாக மிக இக்கட்டான சூழ்நிலையைச் சந்தித்து வருகின்றது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

ஒரு புறம் புதிய வாகனங்களின் படையெடுப்பு இருக்க, மறு புறம் இயற்கை சூழ்நிலைகள் டாடா நிறுவனத்திற்கு பெரும் சவாலை ஏற்படுத்த ஆரம்பித்திருக்கின்றன. இருப்பினும், சற்றும் சலைக்காமல் டாடா நிறுவனம் மிகப் போர் களத்தில் இருப்பதைப் போன்று போராடிக் கொண்டிருக்கின்று.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

முன்னதாக கடந்த 2019ம் ஆண்டு கடும் விற்பனை வீழ்ச்சியில் சிக்கி தவித்து வந்த டாடா மோட்டார்ஸ், தற்போது உயிர் கொல்லி வைரஸ் கொரோனாவின் பிடியில் சிக்கியிருக்கின்றது.

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் இந்த வைரஸின் காரணமாக டாடாவின் விற்பனை கடும் சரிவைச் சந்திக்க ஆரம்பித்துள்ளது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

இதுமட்டுமின்றி, இதன் உற்பத்தியும் அதளபாதாளத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக அதிர்ச்சிமிகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை சிஎன்பிசி செய்தி நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

அது வெளியிட்டுள்ள புகைப்படத்தின்படி, இதுவரை இல்லாத அளவிற்கு டாடா நிறுவனம் உற்பத்தியை குறைத்திருப்பது தெரியவந்துள்ளது. அதாவது 16,051 என்ற எண்ணிக்கைக்கு டாடா அதன் உற்பத்தியை குறைத்திருக்கின்றது. இது, 75.3 சதவீதம் அளவிற்கு குறைவாகும். டாடா அதன் உற்பத்தி வரலாற்றில் காணாத உற்பத்தி வீழ்ச்சியாக இது உள்ளது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

இதுவே கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிட்டால், அப்போது 64,977 யூனிட்டுகளை உற்பத்தி செய்திருந்தது. ஒவ்வொரு ஆண்டும் டாடா அதன் உற்பத்தியை அதிகரித்து வந்தமே இருந்து வருகின்றது. ஆனால், குறிப்பிட்ட இக்கட்டான சூழ்நிலைகள் காரணமாக அதன் உற்பத்தி மிகக் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால், எப்போது வெற்றிக் கனியை ருசித்து வந்த டாடா தற்போது மிகக் கசப்பான அனுபவத்தை சந்தித்துக் வருகின்றது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

அதேசமயம், கொரோனா வைரஸ் டாடாவின் உற்பத்தியை மட்டுமின்றி விற்பனையையும் பதம் பார்த்துள்ளது. குறிப்பாக, கடந்த மார்ச் மாத உள்நாட்டு விற்பனையில் ஒட்டுமொத்தமாக 84 சதவீத சரிவை அது சந்தித்துள்ளது. அதாவது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உள்நாட்டு விற்பனையில் 11,012 யூனிட் வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

அதேசமயம், கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாதத்தைப் பார்த்தோமேயானால் 68,727 யூனிட்டுகளை அது விற்பனைச் செய்திருந்தது. இதை வைத்து பார்க்கையில் நடப்பாண்டில் டாடா நிறுவனம் மிகப் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து வருவது தெரியவந்துள்ளது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

இதேபோன்று, அனைத்து பிரிவுகளிலும் கணிசமான விற்பனைச் சரிவை டாடா சந்தித்த வண்ணமே இருக்கின்றது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ள இதே நிலைதான் நாட்டில் இயங்கிக் கொண்டிருக்கும் பல வாகன நிறுவனங்களுக்கும் தற்போது நிலவி வருகின்றது.

ரூ. 1,500 கோடியை வாரி வழங்கிய ஜாம்பவானுக்கு ஏற்பட்ட கடும் நெருக்கடி.. அதளபாதாளத்தில் டாடா வாகன உற்பத்தி!

இந்தநிலையில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்ப இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள்கூட ஆகலாம் என கூறப்படுகின்றது. அதாவது, கொரோனா வைரஸ் பிரச்னை ஓயும் வரை இதே நிலைதான் உலகம் முழுவதும் நீடிக்கும் என அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது. ஆகையால், இந்த வைரஸ் மனித குலத்திற்கு மட்டுமின்றி உலகின் அனைத்துத்துறைக்குமே பேராபத்தை விளைவிக்கும் வகையில் தோன்றியிருக்கின்றது.

Source: CNBC-TV18

Most Read Articles

English summary
Tata Motors Production Slips By 75 Percent. Read In Tamil.
Story first published: Friday, April 3, 2020, 20:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X