நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஹெரியர் மாடலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள 6 இருக்கை க்ரவிட்டாஸ் எஸ்யூவி மாடலின் புதிய டீசர் வீடியோ ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் காண்போம்.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

டாடா நிறுவனத்தின் தனித்துவமான எஸ்யூவி மாடலாக விளங்கும் இந்த புதிய 2020 காரானது தற்சமயம் இந்தியாவில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டிற்கான ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த காரை பற்றிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இது க்ராவிட்டாஸ் மாடலின் ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்திற்கு பிறகு வெளியாகும் முதல் டீசர் வீடியோ ஆகும். இந்த எஸ்யூவி கார் கிட்டத்தட்ட டாடா ஹெரியரின் மாடலை தான் ஒத்திருப்பது ஆட்டோ எக்ஸ்போ அறிமுகத்தின்போதே தெரிய வந்திருந்தது.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

தற்போது இந்த புதிய வீடியோவின் மூலம் வழக்கமான சாலைகளில் இந்த எஸ்யூவி மாடலின் செயல்படுவிதம் எவ்வாறு இருக்கும் என்பதும் வெளிவந்துள்ளது. மேலும் இந்த கார் ஹெரியர் மாடலின் முன்புறத்தை மிகவும் குறைவான மாற்றங்களுடன் பெற்றிருப்பதையும் இந்த புதிய வீடியோ உறுதிப்படுத்தும் விதத்தில் உள்ளது.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

ஆனால் இந்த க்ராவிட்டாஸ் எஸ்யூவி மாடலுக்கு தனி அடையாளமாக பின்புறத்தில் அதிகரிக்கப்பட்ட ரூஃப் பகுதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இந்த காரின் பின்புறம் லேண்ட் ரோவர் டிஸ்கவரியை ஒத்து காணப்படுகிறது. எனவே இந்த மாடலில் மிகவும் காற்றோட்டமான உட்புற கேபினை எதிர்பார்க்கலாம்.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

மேலும் இது கஸ்டமைஸ்ட் நிறுவனங்களுக்கு மூன்றாவது இருக்கை வரிசையை உருவாக்கும் எண்ணத்தை வரவழைக்கவும் செய்யும். இந்த காரில் கேப்டன் இருக்கைகள் இரு வரிசைகளில் வழங்கப்பட்டுள்ளன. பென்ச் இருக்கை மூன்றாவது வரிசையில் உள்ளது.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இந்த இருக்கைகள் பழுப்பு நிறத்தில் இந்த க்ராவிட்டாஸ் மாடலில் உள்ளன. ஹெரியர் மாடல் உட்புறத்தில் இதிலிருந்து வித்தியாசமான நிறத்தில் இருக்கைகளை பெற்றிருந்தது. டாடா நிறுவனம் இந்த எஸ்யூவி மாடலை ஹெரியர் மாடலிற்கு மேலே நிலைநிறுத்தவுள்ளது. இதனால் ஹெரியரை விட அதிகமான விலையை இந்த எஸ்யூவி கார் பெறும் என தெரிகிறது.

இயக்க ஆற்றலை பெறுவதற்காக இந்த எஸ்யூவி மாடலில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ சார்ஜ்டு டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் காருக்கு அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்கும் ஆற்றல் கொண்டது.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இந்த டீசல் என்ஜின் ஆற்றலை காரின் முன்புற சக்கரங்களுக்கு வழங்கும். மேலும் இந்த 2020 எஸ்யூவி மாடலில் கரடு முரடான சாலைகளுக்கும் சேர்த்து அதிக எண்ணிக்கையில் ட்ரைவிங் மோட் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றின் ஒவ்வொரு நிலையிலும் என்ஜினானது வெவ்வேறு விதமான டார்க் திறனை காரின் முன் சக்கரங்களுக்கு வழங்கும்.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இந்த ட்ரைவிங் மோட்கள் மூலம் சக்கரங்களின் சறுக்கலை தவிர்க்க முடியும். க்ராவிட்டாஸ் எஸ்யூவி மாடலை தயாரிக்க டாடா நிறுவனம் பயன்படுத்தி வரும் ஒமேகா ஏஆர்சி ப்ளாட்ஃபாரம், லேண்ட் ரோவர் டி8 ப்ளாட்ஃபாரத்தில் இருந்து பெறப்பட்டதாகும்.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இதனால் தான் ஹெரியர் மாடல் டாடாவின் ஒரிஜினல் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படாமல் இந்த புதிய கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. தற்சமயம் முன்-சக்கர ட்ரைவ் அமைப்புடன் உள்ள ஹெரியர் கார், டாடாவின் ஒரிஜினல் ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டிருந்தால், ஆல்-வீல் ட்ரைவ்-ஐ பெற்றிருந்திருக்கும்.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இதே தயாரிப்பு முறை தான் தற்போது இந்த க்ராவிட்டாஸ் மாடலில் தொடர்ந்துள்ளது. இந்த 2020 எஸ்யூவி மாடலில் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளாக 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோ மேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டுள்ளன.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

மற்ற முக்கிய பாகங்களாக இந்த கார், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவுடன் இணைக்கக்கூடிய இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், பனோராமிக் சன்ரூஃப், தேவைக்கு ஏற்றாற்போல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஓட்டுனர் இருக்கை, என்ஜினை ஸ்டார்ட் செய்வதற்கு பொத்தான், இரட்டை க்ளைமேட் கண்ட்ரோல், லெதர் இருக்கைகள், ஆட்டோமேட்டிக் வைபர்கள் மற்றும் ஹெட்லைட் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

இவற்றுடன் ஒரே மாதிரியான 10 ஸ்பீக்கர்களையும் பெற்றுள்ள இந்த புதிய எஸ்யூவி மாடலில் பாதுகாப்பு அம்சங்களாக 6 காற்றுப்பைகள், இஎஸ்பி, ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இபிடியுடன் உள்ள ஏபிஎஸ் ப்ரேக்கிங் சிஸ்டம், பின்புற பார்க்கிங் சென்சார்கள் மற்றும் கேமிரா, அதிவேகம் மற்றும் சீட் பெல்ட் அணியாததை எச்சரிக்க அலாரம் போன்றவை உள்ளன.

நேற்று ஆட்டோ எக்ஸ்போ அறிமுகம்... இன்று புதிய டீசர்... க்ராவிட்டாஸ் அறிமுகத்தில் அதிரடி காட்டும் டாடா...

ஹெரியர் மாடலை அடிப்படையாக கொண்டு இந்த கார் தயாரிக்கப்பட்டிருந்தாலும், தனக்கென தனி சிறப்புகளை பெற்றிருப்பது டாடா நிறுவனத்தின் இத்தனை ஆண்டு கால கார் தயாரிப்பு அனுபவத்தை வெளிக்காட்டுகிறது. இந்நிறுவனத்தின் இந்த புதிய எஸ்யூவி மாடலின் ஆரம்ப விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.14 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புகள் அதிகம்.

Most Read Articles
English summary
Tata Gravitas: First TVC out after Auto Expo reveal
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X