கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

பயணிகள் வர்த்தகப் பிரிவை சரிவிலிருந்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, புதிய நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்படுவதற்கு டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

நாட்டின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உள்ளது. கனரக மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்கள் சந்தையில் மிக வலுவான நிறுவனமாக இருந்து வரும் டாடா மோட்டார்ஸ் கார் சந்தையில் நிலையான இடத்தை பெறுவதற்காக கடுமையாக போராடி வருகிறது.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், அடுத்த தசாப்தத்தில் பயணிகள் வாகனங்களின் தொழில்நுட்பம் மற்றும் கட்டுமானம் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றத்தை சந்திக்க வேண்டி இருக்கிறது. இதற்காக பெரிய அளவிலான முதலீடு தேவைப்படும். ஆனால், அதற்கு தக்க வர்த்தகம் இருந்தால் மட்டுமே நீடித்து நிற்க முடியும்.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

இதனை உணர்ந்து கொண்டு உலகின் பல முன்னணி கார் நிறுவனங்கள் கூட்டணி அமைத்து செயல்பட துவங்கி இருக்கின்றன. இதன்மூலமாக, முதலீட்டை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பதால், வர்த்தகத்தை செம்மையாக கொண்டு செல்வதற்கான வாய்ப்பு கிடைக்கும்.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

இதனை மனதில் வைத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் தனது பயணிகள் வாகனப் பிரிவுக்கு கூட்டாளியை தேடும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. அண்மையில் பயணிகள் வாகனப் பிரிவை தனி நிறுவனமாக மாற்ற முடிவு செய்த டாடா மோட்டார்ஸ், அதனை மற்றொரு நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கூட்டணி நிறுவனமாக செயல்படவும் திட்டமிட்டுள்ளது.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

கூட்டணி அமைப்பதற்காக தக்க நிறுவனத்தை இனம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக டாடா மோட்டார்ஸ் ஈடுபட்டுள்ளதை அந்நிறுவனத்தின் உயர் அதிகாரி சைலேஷ் சந்திரா உறுதிப்படுத்தி உள்ளார். அடுத்த தசாப்தத்தில் வர்த்தகத்தை நிலைப்படுத்துவதற்கு மற்றொரு நிறுவனத்தின் கூட்டணி அவசியமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

கார் மாடல்களை மேம்படுத்தி குறுகிய காலத்தில் புதுப்பொலிவுடன் அறிமுகம் செய்வதற்கு இந்த கூட்டணி திட்டம் பெரிதும் உதவும். புதிய தொழில்நுட்பங்களை குறுகிய காலத்தில் கொடுப்பதற்கும் வாய்ப்பை இது வழங்கும் என்று சைலேஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

மற்றொரு நிறுவனத்துடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இரண்டு நிறுவனங்களும் பயன்பெறும் வகையில் இந்த கூட்டணி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். கொரோனா காரணமாக, தனிநபர் வாகனங்கள் பயன்பாடு அதிகரித்து வருவதால், பயணிகள் வாகனத் துறை ஏற்றம் பெறும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

கார் மார்க்கெட்டில் நின்று ஆட புதிய 'பார்ட்னர்' தேடும் டாடா மோட்டார்ஸ்!

பயணிகள் வாகனப் பிரிவை டாடா மோட்டார்ஸ் விற்பனை செய்ய இருப்பதாக அண்மையில் பரபரப்பு தகவல் வெளியானது. ஆனால், அதற்கு டாடா மோட்டார்ஸ் மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில், மற்றொரு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து பயணிகள் வாகனப் பிரிவு வர்த்தகத்தை வலுப்படுத்த டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors has revealed actively scouting for a partner for passenger vehicle business.
Story first published: Monday, October 26, 2020, 11:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X