டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

டாடா டியாகோவின் 3 லட்சமாவது மாதிரி கார் குஜராத்தில் உள்ள தயாரிப்பு நிறுவனத்தின் சனாந்த் தொழிற்சாலையில் இருந்து தயாரிப்பு பணிகள் முழுவதும் நிறைவு செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டுள்ளது. கார்கள் தயாரிப்பில் பிராண்டின் புதிய மைல்கல்லாக கருதப்படும் இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

டாடா மோட்டார்ஸின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காராக விளங்கும் டியாகோ தயாரிப்பு நிறுவனத்திற்கு சிறந்த விற்பனை மாடல்களுள் ஒன்றாக விளங்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் தான் தற்போது இதன் 3 லட்சமாவது மாதிரி கார் தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்துள்ளது. டாடா டியாகோ முதன்முதலாக 2016ல் அறிமுகமானது.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

பிராண்டின் இம்பேக்ட் டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவான இந்த ஹேட்ச்பேக் காரின் எக்ஸ்ஷோரூம் விலை தான் ஆரம்பத்தில் இருந்து அதற்கு அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் பட்டாளத்தை பெற்று கொடுத்து வருகிறது.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

டியாகோவின் ஆரம்ப விலை தற்சமயம் எக்ஸ்ஷோரூமில் வெறும் ரூ.4.69 லட்சமாக உள்ளதை இந்த இடத்தில் பதிவு செய்தே ஆக வேண்டும். இந்த விலை மதிப்பின் மூலமாக விற்பனையில் மற்ற ஹேட்ச்பேக் கார்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் இந்த டாடா தயாரிப்பு, உலகளாவிய என்கேப் பாதுகாப்பு சோதனையில் நான்கு நட்சத்திரங்களை பெற்று அனைவரையும் கவர்ந்தது.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

ஏனெனில் இரட்டை காற்றுப்பைகள், பின்பக்க பார்கிங் உதவி மற்றும் ப்ரேக்கிற்கான விசையை வழங்குதல் உள்ளிட்டவற்றை டியாகோ பெற்று வருகிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் பிஎஸ்6 தரத்தில் டியாகோவை டாடா அறிமுகம் செய்தது.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

‘புதிய என்றென்றும்' என்ற பிராண்டின் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெளிவந்த 2020 டியாகோ, சிறிய டிசைன் மாற்றங்களுடன் மேனுவல் மற்றும் ஏஎம்டி ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த 2020 மாடலில் பிஎஸ்6 தரத்தில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

டியாகோவிற்கு தொடர்ந்து கிடைக்கும் வரவேற்பு... 3 லட்ச மாதிரிகள் தயாரித்து டாடா மோட்டார்ஸ் அசத்தல்...

இந்த சேர்த்தல்கள் அனைத்தினாலும், டியாகோ மொத்த வசதிகளுடன் களமிறங்குவதாக பலரால் கூறப்படுகிறது. மேலும் டாடா நிறுவனம் முதல் முறையாக கார் வாங்குபவர்களிடையே இந்த ஹேட்ச்பேக் காரின் பிரபலத்தை அதிகரிப்பதில்தான் இப்போதைக்கு தீவிர கவனமாக உள்ளது.

Most Read Articles

English summary
Tata Motors rolls out the 3,00,000th Tiago from its Sanand plant
Story first published: Wednesday, September 23, 2020, 9:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X