Just In
- 1 hr ago
ஆக்டிவா உடனான போட்டியை சமாளிக்க குறைந்த விலை ஜூபிடர்... டிவிஎஸ் அதிரடி... ஆஹா இவ்ளோ குறைந்த விலையா?
- 2 hrs ago
சீனாவில் தீப்பற்றி எரிந்த டெஸ்லா மாடல் 3... இந்தியாவிற்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார் என்பதால் கடும் அதிர்ச்சி...
- 3 hrs ago
முண்டாசு கட்டிய பிஎம்டபிள்யூ... இந்தியாவில் 25 புதிய மாடல்களுடன் தெறிக்கவிட திட்டம்!
- 3 hrs ago
சுசுகி அக்செஸ் 125 ஸ்கூட்டரின் விலை உயர்ந்தன... எவ்வளவு உயர்ந்திருக்கு தெரிஞ்சா நிச்சயம் ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- News
சசிகலாவுக்கு நுரையீரல் தொற்று... ஐ.சி.யூ.வில் தொடர்ந்து சிகிச்சை -விக்டோரியா மருத்துவமனை
- Sports
இனிமே இவரை டீமை விட்டு ஒதுக்க முடியாது.. என்ன செய்யப் போகிறார் கேப்டன் கோலி?
- Finance
பட்ஜெட்டுக்கு முன் எதில் முதலீடு செய்யலாம்.. முதலீட்டாளர்களுக்கு சூப்பர் டிப்ஸ்..!
- Movies
மன்னிச்சு விட்ருங்கன்னு கெஞ்சுறாங்க.. பாலாவை மன்னிக்கணும்னா 3 கண்டிஷன் போடும் ஜோ மைக்கேல்!
- Lifestyle
மொறுமொறுப்பான... ஓட்ஸ் கட்லெட்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மாருதியை தொடர்ந்து சீண்டிவரும் டாடா மோட்டார்ஸ்!! இம்முறை வேகன்ஆர் சிக்கி கொண்டுள்ளது பாவம்..
மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களிடையே இணையத்தில் தொடர்ந்து பனிப்போர் நீடித்துவருகிறது. இந்த வகையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மாருதியின் வேகன்ஆர் ஹேட்ச்பேக் காரை பற்றி பதிவிட்டுள்ள பதிவை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் சமீப காலமாக சமூக ஊடகங்களில் தன்னை மிகவும் ஈடுப்படுத்தி வருகிறது. இதனால் உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் இந்நிறுவனம் உன்னிப்பாக கவனிக்கிறது. அதற்கு மத்தியில் போட்டி நிறுவனங்களை கிண்டல் செய்யவும் டாடா மறக்கவில்லை.

கடந்த சில வாரங்களாக ஹூண்டாய், மாருதி என இந்திய சந்தையின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களிடம் லந்து கொடுத்துவரும் டாடா நிறுவனத்திடம் சமீபத்தில் சிக்கி இருப்பது மாருதி சுசுகி வேகன்-ஆர் ஆகும். இது டாடா டியாகோ ஹேட்ச்பேக்கின் நேரடி போட்டி மாடலாகும்.

மாருதியின் பிரபலமான ஹேட்ச்பேக் மாடலாகவும், வாடிக்கையாளர்கள் மத்தியில் தொடர்ந்து வரவேற்பு பெற்றுவரும் காராகவும் விளங்கும் வேகன்ஆர் அதன் 2-நட்சத்திர என்சிஏபி பாதுகாப்பு மதிப்பீட்டிற்காக கேலி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பான டாடாவின் பதிவில் எதுவும் இல்லாத மர வண்டி ஒன்று ஒரு சக்கரம் உடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. அதற்கு மேலாக "OH SH**T! WAGONE" என்ற வாக்கியங்கள் உள்ளன. வேகோன் என்பது வேகன்ஆர்-ஐ மறைமுகமாக குறிப்பது போல் உள்ளது.

படத்திற்கு மேலே, புறக்கணிப்பதற்கு பாதுகாப்பு அம்சம் மிக முக்கியம் (two-ஐ too என கருதுகிறேன்). உங்கள் வண்டியை யாராவது கவிழ்க்கும் முன் புத்திசாலித்தனமாக இருங்கள். உலகளாவிய என்சிஏபி அமைப்பில் 4 நட்சத்திரங்களை பெற்ற பிரிவின் பாதுகாப்புமிக்க டியாகோவை தேர்வு செய்யுங்கள் என்ற டாடாவின் கருத்து பதிவிடப்பட்டுள்ளது.

இதில் CaRt என்ற வார்த்தையில் உள்ள ‘R' என்பதும் வேகன்ஆர்-இன் ஆர்-ஐ குறிப்பதுபோல் தான் உள்ளது. மாருதி வேகன்ஆர் ஜிஎன்சிஏபி சோதனையில் வயது அதிகமுடைய பயணிகளுக்கான பாதுகாப்பில் ஐந்திற்கு இரண்டு நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுக்காப்பிலும் அதே இரு நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது.

இந்த மதிப்பீடுகள் அனைத்தையும் பெற்றிருப்பது இந்தியாவில் தற்சமயம் விற்பனையில் மூன்றாம் தலைமுறை வேகன்ஆர் கார் ஆகும். அதுவே டாடா டியாகோ வயது அதிகமுடைய பயணிகளுக்கான பாதுகாப்பில் நான்கு நட்சத்திரங்களையும், குழந்தைகளுக்கான பாதுக்காப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது.

உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனையில் மாருதி எஸ்-பிரெஸ்ஸோ, ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் கியா செல்டோஸ் என தற்சமயம் விற்பனையில் உள்ள மூன்று கார்களும் மிகவும் குறைவான மதிப்பீடுகளை பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில் டியாகோவின் 4 நட்சத்திரங்கள் மூலமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என டாடா நிறுவனம் பயன்படுத்தி வருகிறது.

டியாகோ மட்டுமின்றி ஹெரியரை தவிர்த்து (இன்னும் சோதனையில் ஈடுப்படுத்தப்படவில்லை) மற்ற அனைத்து டாடா கார்களும் நல்ல மதிப்பீடுகளையே பெற்றுள்ளன. டாடா அல்ட்ராஸ் - 5, நெக்ஸான் - 5 ஆகும். முந்தைய காலங்களில் எல்லாம் கார்களின் மைலேஜ் மற்றும் உட்புற வசதிகளை தான் இந்திய வாடிக்கையாளர்கள் பெரிதாக கவனித்தனர்.

ஆனால் இப்போது கார்களில் பாதுகாப்பு அம்சங்களையே அதிகளவில் எதிர்பார்க்கின்றனர். இந்த விஷயத்தில் டாடா மோட்டார்ஸின் கை தான் ஓங்கியுள்ளது. பார்ப்போம், இனியாவது மற்ற நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளின் மற்ற சிறப்பம்சங்களை கூறி தன்னை முன்னிலை படுத்துகின்றவா என்று.