மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார், வெறும் பத்தே மாதங்களில், 2,000 யூனிட்கள் விற்பனை என்ற மைல்கல்லை கடந்துள்ளது. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை டாடா நிறுவனம் கடந்த ஜனவரி மாத இறுதியில் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. விற்பனைக்கு வந்து சுமார் 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் மொத்த விற்பனை கடந்த மாதம் 2,200 யூனிட்களை எட்டியது.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

டாடா நிறுவனம் ஆயிரமாவது நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை கடந்த ஆகஸ்ட் மாதம்தான் உற்பத்தி செய்திருந்தது. அடுத்த மூன்று மாதங்களில், மேலும் 1,000 டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எலெக்ட்ரிக் கார்களில் முதன்மையானதாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாறியுள்ளது.

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பிஎஸ்6 - இப்படி ஒரு ரிவியூ வீடியோ இதுக்கு முன்னாடி பாத்திருக்க மாட்டீங்க!!!

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் விலையை டாடா நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 26,000 ரூபாய் வரை உயர்த்தியது. XM, XZ+, மற்றும் XZ+ Lux என மொத்தம் மூன்று வேரியண்ட்களில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

இதில், பேஸ் வேரியண்ட்டான XM வேரியண்ட்டின் விலை உயர்த்தப்படவில்லை. தொடர்ந்து 13.99 லட்ச ரூபாய் என்ற விலையிலேயே XM வேரியண்ட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால் XZ+ மற்றும் XZ+ Lux வேரியண்ட்களின் விலை தலா 26,000 ரூபாய் உயர்த்தப்பட்டு முறையே 15.25 லட்ச ரூபாய் ஆகவும், 16.25 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

இந்த விலை உயர்விற்கு முன்னதாக XZ+ வேரியண்ட் 14.99 லட்ச ரூபாய் என்ற விலையிலும், XZ+ Lux வேரியண்ட் 15.99 லட்ச ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டன. பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் 9.9 வினாடிகளில் எட்டி விடும்.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால் 312 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்ய முடியும் என அராய் அமைப்பு சான்று வழங்கியுள்ளது. ஓட்டும் முறைகளை வைத்து இது மாறுபடலாம் என்றாலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதுதான்.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு தற்போதைய நிலையில் நேரடி போட்டி என எந்த காரும் இல்லை. இருந்தாலும் ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களுக்கு டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சவால் அளித்து வருகிறது. ஆனால் மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி வடிவத்தில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கு சவால் வரவுள்ளது.

மின்சார வாகன மார்க்கெட்டையும் ஒரு கை பார்க்கும் டாடா... விற்பனையில் புதிய உச்சம் தொட்ட நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்...

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இந்த இரண்டு கார்களும் நேருக்கு நேராக போட்டியிடும். இந்த இரண்டு கார்களின் ஐசி இன்ஜின் மாடல்களும், சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் போட்டியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Nexon Electric SUV Crosses 2,000 Units Sales Milestone In 10 Months. Read in Tamil
Story first published: Thursday, December 3, 2020, 15:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X