டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தா அதிரடியாக குறைப்பு!

டாடா நெக்ஸான் காருக்கு அறிவிக்கப்பட்ட மாதச் சந்தா கட்டணம் அதிரடியாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் சிறந்த தேர்வாக மாறி இருக்கிறது. விற்பனையிலும் நம்பர்-1 ஆக இருந்து வருகிறது. போதுமான ரேஞ்ச், சரியான விலை போன்ற காரணங்களால், டாடா நெக்ஸான் காருக்கான சந்தை வலுவாக மாறி இருக்கிறது.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் பட்ஜெட்டை பார்த்து தயங்கும் வாடிக்கையாளர்களை மனதில் கொண்டு மாதச் சந்தா திட்டம் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

இதில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை மாதச் சந்தாவில் பெற விரும்புவோர் மூன்று ஆண்டுகளுக்கு 41,900 என்ற மாதச் சந்தாவாக நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தது 12 மாதங்கள் முதல் 36 மாதங்கள் வரை மாதச் சந்தாவில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை எடுத்துக் கொள்ளலாம்.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், இந்த சந்தா தற்போது ரூ.34,900 என அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ6,000 வரை மாதச் சந்தா குறைக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 30 வரை இந்த சிறப்பு மாதச் சந்தா திட்டம் அமலில் இருக்கும். முதலில் வரும் 100 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சந்தா திட்டத்தை பெறும் வாய்ப்புள்ளது.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய சந்தா கட்டணத்தில் 24 மணிநேர சாலை அவசர உதவித் திட்டம், வழக்கமான இடைவெளிகளில் பராமரிப்புப் பணிகள் மற்றும் ஒருங்கிணைந்த காப்பீட்டு திட்டம் ஆகியவையும் அடக்கம். எனவே, முன்பணம் மற்றும் வேறு எந்த கட்டணமும் இல்லாமல் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை மாதச் சந்தாவில் எடுத்து பயன்படுத்த முடியும்.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

மேலும், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை இந்த சந்தா திட்டத்தில் பெறுவோருக்கு வீட்டில் அல்லது அலுவலகத்தில் சார்ஜர் அமைத்துக் கொடுக்கப்படும்.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

இந்த மாதச் சந்தா திட்டத்தை ஓரிக்ஸ் ஆட்டோ நிறுவனத்துடன் இணைந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வழங்குகிறது. டெல்லி, மும்பை, புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் இந்த மாதச் சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பிற நகரங்களிலும் இந்த மாதச் சந்தா திட்டம் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 நெக்ஸான் எலெக்ட்ரிக் காருக்கான மாதச் சந்தாவை அதிரடியாக குறைத்தது டாடா மோட்டார்ஸ்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 30.2kW லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் மின் மோட்டார் 129 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என டாடா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

Most Read Articles

English summary
Tata has announced limited period monthly subscription offer for Nexon electric SUV in India.
Story first published: Monday, September 21, 2020, 18:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X