அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கும் பணிகளை டாடா தொடங்கியுள்ளது.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இந்திய மார்க்கெட்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் கடந்த ஜனவரி 28ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் டெலிவரிகள் நடப்பு மார்ச் மாதம் முதல் தொடங்கியுள்ளன. முதல் பேட்ஜ் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு உரிமையாளர்களுக்கு டெலிவரி செய்யப்பட்டுள்ளன.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

ஆனால் டாடா நிறுவனம் எவ்வளவு நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களை டெலிவரி செய்தது? என்பது தொடர்பான விபரம் எதுவும் வெளியாகவில்லை. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் விலை 13.99 லட்ச ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது பேஸ் வேரியண்ட்டின் விலையாகும். அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 15.99 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். XM, XZ+ and XZ+ Lux ஆகிய வேரியண்ட்களில் டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் கிடைக்கிறது. சிக்னேச்சல் டீல் ப்ளூ, மூன்லைட் சில்வர், கிளாசியர் ஒயிட் என மூன்று கலர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 3,994 மிமீ. அகலம் 1,811 மிமீ. வீல் பேஸ் நீளம் 2,498 மிமீ.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் எலெக்ட்ரிக் டெயில்கேட்டையும் இந்த கார் பெற்றுள்ளது. மேலும் டிஎப்டி டிஸ்ப்ளே உடன் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆட்டோ ஏர் கன்டிஷனிங் மற்றும் சன் ரூஃப் ஆகிய வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இதுதவிர ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் வசதிகளுடன் ஹார்மன் டச் ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது. குளோபல் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட்டில் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை முழுமையாக பெற்ற முதல் இந்திய கார் என்ற பெருமை டாடா நெக்ஸானையே சாரும். அதன் எலெக்ட்ரிக் வெர்ஷன்தான் இந்த கார்.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

அதற்கு ஏற்ப டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் ஏராளமான பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. இதில், ட்யூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ், இபிடி மற்றும் சிஎஸ்சி எனப்படும் கார்னரிங் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் ஆகியவை முக்கியமானவை. இந்தியாவில் அனைத்து விதமான நிலப்பரப்புகளிலும், நெக்ஸான் எலெக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் சுமார் 1 மில்லியன் (10 லட்சம்) கிலோ மீட்டர்கள் சோதனை செய்துள்ளது.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இதனால் கடினமான நிலப்பரப்பு, உயரமான மலைகள் என அனைத்து விதமான இடங்களிலும் ஓட்டுவதற்கு ஏற்ற காராக நெக்ஸான் எலெக்ட்ரிக் இருக்கும் என டாடா கூறியுள்ளது. டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 312 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும்.

அனைவரும் காத்து கிடந்த டாடா எலெக்ட்ரிக் காரின் டெலிவரி தொடங்கியது... விலை எவ்ளோனு பாத்தீங்களா?

இது ஓரளவிற்கு சிறப்பான ரேஞ்ச் என்பதால், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்ற மாடலாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் தற்போதுதான் எலெக்ட்ரிக் கார்கள் மெல்ல மெல்ல அறிமுகமாக தொடங்கியுள்ளன. வரும் காலங்களில் இன்னும் அதிகமான மின்சார கார்கள் இந்திய மார்க்கெட்டில் களமிறங்கவுள்ளன.

Most Read Articles
English summary
Tata Nexon EV Delivery. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X