டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியின் ரேஞ்ச் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை தொடர்ந்து காணலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடல்கள் ஒன்றன் பின் ஒன்றாக சந்தைக்கு வந்தன. இந்த மூன்று மாடல்களுமே குறிப்பிடத்தக்க அளவு விற்பனை எண்ணிக்கையை தனது ரகத்தில் பதிவு செய்து வருகின்றன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

எனினும், தனிநபர் பயன்பாட்டு சந்தையில் இந்த மூன்று மாடல்கள்தான் இப்போது முக்கிய தேர்வாக உள்ள நிலையில், இதன் விற்பனையை ஒப்பீடு செய்ய வேண்டிய நிலை உள்ளது. அதன்படி, மூன்று கார்களில் டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு அதிக விற்பனை கிடைக்கத் துவங்கி இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

ஹூண்டாய் கோனா, எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளைவிட விலை குறைவான தேர்வாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதுடன், போதுமான ரேஞ்ச் மற்றும் பிற இரண்டு மாடல்களுக்கும் போட்டியை தரும் வகையிலான தொழில்நுட்ப அம்சங்களிலும் நிறைவை தருகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

இந்தநிலையில், விலை குறைவான தேர்வாக இருந்தாலும், ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச் குறைவாக உள்ளது. அதாவது, பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்து பயணிக்கும் தூரம் போட்டியாளர்களைவிட குறைவு.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

இந்த நிலையில், சாஃப்ட்வேர் அப்டேட் மற்றும் சில உதிரிபாகங்களை மாற்றி அமைப்பதன் மூலமாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரின் ரேஞ்ச்சை அதிகரிக்க முடியும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதற்கான முயற்சிகளிலும் அந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

இதுகுறித்து ஓவர்டிரைவ் தளத்திடம் பேசிய டாடா மோட்டார்ஸ் உயர் அதிகாரி ஆனந்த் குல்கர்னி,"எங்களது எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்படும் ஸிப்ட்ரான் தொழில்நுட்பத்தை தொடர்ந்து மேம்படுத்துவதற்கான திட்டம் வைத்துள்ளோம். இதன் மூலமாக பயண தூரத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

தற்போது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 95kW மின் மோட்டாரும், 30.2kWh லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியும், மின் மோட்டாரும் இணைந்து 129 பிஎச்பி பவரையும் 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். அதாவது, சாதாரண டாடா நெக்ஸான் எஸ்யூவியை விட சக்திவாய்ந்த மாடலாக இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

இந்த காரின் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 312 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். நடைமுறையில் 250 கிமீ முதல் 300 கிமீ தூரம் வரை செல்வதற்கான வாய்ப்பை வழங்கும். இது நடைமுறைக்கு சிறந்த தேர்வாக இருக்கும். ஆனால், மிக நீண்டதூர பயணத்தின்போது சிக்கல் இருக்கும். நெடுஞ்சாலைகளில் சார்ஜிங் கட்டமைப்புகள் வலுவாகும்போது இந்த பிரச்னை தீர்ந்து போகும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

டாடா நெக்ஸான் காருக்கான சாதாரண சார்ஜர் மூலமாக பேட்டரியை சார்ஜ் ஏற்றுவதற்கு 8 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக 80 சதவீதம் அளவுக்கான சார்ஜை 60 நிமிடங்களில் ஏற்ற முடியும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் 'ரேஞ்ச்' எங்கேயோ போகப்போகுது?

டாடா நெக்ஸான் எஸ்யூவி ரூ.13.99 லட்சம் முதல் ரூ.15.99 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. வசதிகளை பொறுத்து மூன்று விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கும். இதன் ரேஞ்ச் அதிகரிக்கப்பட்டால், அது விற்பனைக்கு மேலும் வலுசேர்க்கும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
The Tata Nexon EV driving range is expected to increase with future updates made to the compact-SUV. Future updates are also expected to improve Nexon EV's performance as well.
Story first published: Friday, May 8, 2020, 17:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X