டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள, டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான கார் மாடல் என்ற பெருமையை டாடா நெக்ஸான் எஸ்யூவி பெற்றிருக்கிறது. காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்து வரும் டாடா நெக்ஸான் எஸ்யூவி பெட்ரோல், டீசல் மாடல்களில் கிடைக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் நெக்ஸான் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் உருவாக்கி இருக்கிறது. கடந்த மாதம் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய மாடல் தனிநபர் வாடிக்கையாளர் வட்டத்தை குறிவைத்து களமிறக்கப்பட இருப்பதால், பேராவலை ஏற்படுத்தி உள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

இந்த நிலையில், டாடா நெக்ஸான் மின்சார கார் வரும் 28ந் தேதி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக டீம் பிஎச்பி தளம் மூலமாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது, ஆட்டோ எக்ஸ்போவிற்கு முன்னதாக இந்த கார் சந்தைக்கு வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

புதிய டாடா நெக்ஸான் கார் வசதிகள், சிறப்பம்சங்களை பொறுத்து எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் என மூன்று வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

டாடா நெக்ஸான் காரின் சாதாரண மாடலிலிருந்து மின்சார மாடலை வேறுபடுத்தும் விதமாக சில மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த காரில் எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், 16 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

மேலும், 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கும். ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். இந்த காரில் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், ரியர் கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

டாடா நெக்ஸான் காரில் 30.2 kWh லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த திறன் வாய்ந்த பேட்டரியும், இதன் ஆற்றல் வாய்ந்த மின் மோட்டாரும் இணைந்து 127 பிஎச்பி பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை எட்டிப்பிடிப்பதற்கு 9.9 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். இந்த காரின் பேட்டரியானது ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ வரை பயணிக்கும் திறனை வழங்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

இந்த காரின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் மூலமாக ஒரு மணிநேரத்தில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண சார்ஜர் மூலமாக சார்ஜ் ஏற்றுவதற்கு 8 முதல் 9 மணிநேரம் பிடிக்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி வெளியானது

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா, விரைவில் வரும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களைவிட விலை குறைவான தேர்வாக நிலைநிறுத்தப்படும் என்பதால், நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
According to report, The new Tata Nexon electric car might be launched in India on January 28, 2020.
Story first published: Tuesday, January 14, 2020, 14:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X