மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

ஷோரூமில் இருந்து டெலிவிரி செய்யப்பட்ட அன்றே மாடிஃபைடு பணிகளுக்கு உட்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் கார்களை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

இந்திய அரசாங்கம் காற்று மாசுபடுதலை குறைப்பதற்காக எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க கடந்த சில வருடங்களாக தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறது. இதனால் தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது நிறுவனத்தில் இருந்து ஒரே ஒரு எலக்ட்ரிக் தயாரிப்பையாவது விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டு வருகின்றன.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

ஆனால் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது. இந்நிறுவனத்தின் காம்பெக்ட் எஸ்யூவி மாடலான நெக்ஸான் இவி வெர்சனிலும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. மிகவும் மலிவான எலக்ட்ரிக் காராக தற்சமயம் விளங்கும் நெக்ஸான் இவி மாடலுக்கு எதிர்பார்த்ததை விடவும் நல்ல வரவேற்பு வாடிக்கையாளர்களிடம் இருந்து கிடைத்துவருகிறது.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

இந்த நிலையில் தான் டெலிவிரி செய்த அன்றே நெக்ஸான் இவி காரை வாடிக்கையாளர் ஒருவர் மாடிஃபைடு பணிகளில் உட்படுத்தியுள்ளார். இந்த மாடிஃபைடு பணிகளை நார்த்வே மோட்டார்ஸ்போர்ட்டை சேர்ந்த ஹெமங்க் தபாடே என்பவர் மேற்கொண்டுள்ளார்.

இவர்தான் இதுகுறித்த வீடியோவினையும் தனது யுடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த மாடிஃபைடு பணிகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ள கார் நெக்ஸானின் எக்ஸ்இசட்+ வேரியண்ட் ஆகும். டாடா நிறுவனம் இந்த வேரியண்ட்டை தொழிற்நுட்ப வசதிகள் நிறைந்த டாப் வேரியண்ட்டிற்கு கீழே நிலைநிறுத்தி வருகிறது.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

இதில் புதிய அலாய் சக்கரங்களுடன் தரமான டயர்கள், சிறப்பான காலிபர்கள் உடன் பெரிய டிஸ்க் ப்ரேக் உள்ளிட்டவற்றை கஸ்டமைஸ்ட் குழு கொண்டுவந்துள்ளது. அதுவே தொழிற்சாலையில் நெக்ஸானின் எக்ஸ்இசட்+ வேரியண்ட்டிற்கு 16 இன்ச்சில் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

அதேபோல் காரின் 245 என்எம் டார்க் திறனிற்கு, ஸ்டாக் டயர்கள் சிறப்பானதாக இருந்திருக்கும். இருப்பினும் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள பெரிய அலாய் சக்கரங்கள் இந்த மாடிஃபைடு நெக்ஸான் காருக்கு சாலையில் அழகான தோற்றத்தையே வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

இந்த காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான மாற்றம் ப்ரேக்குகள் தான். ஸ்டாக் நெக்ஸான் இவி மாடலில் சிங்கிள்-பிஸ்டன் காலிபர் உடன் வெண்டிலேடட் டிஸ்க் ப்ரேக்குகள் முன்புறத்திலும், ட்ரம் ப்ரேக்குகள் பின்புறத்திலும் வழங்கப்படுகின்றன. நார்த்வே மோட்டார்ஸ்போர்ட் நிறுவனம் இதில் முன்புற டிஸ்க் ப்ரேக்கை 6-பிஸ்டன் காலிபர்களுக்கு அப்கிரேட் செய்துள்ளது.

மாடிஃபைடு செய்யப்பட்ட இந்தியாவின் முதல் டாடா நெக்ஸான் இவி கார்... அதுவும் டெலிவிரி செய்யப்பட்ட அன்றே

ஏனெனில் டாடா நெக்ஸான், முன் சக்கரங்களின் மூலம் இயங்கும் காராகும். தற்போதைக்கு அப்டேட்டான ப்ரேக்குகள் மற்றும் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள ஒரே ஒரு நெக்ஸான் இவி காராக இது விளங்குகிறது. இதனால் சாலையில் செல்லும்போது மற்ற அனைத்து கார்களை விடவும் இந்த மாடிஃபைடு கார் சற்று வித்தியாசமாக இருக்கும்.

Most Read Articles
English summary
India’s first modified Tata Nexon EV [Video]
Story first published: Thursday, August 13, 2020, 13:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X