கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

டாடா நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் இணைப்பு கார் தொழிற்நுட்ப வசதிகளை வெளிக்காட்டும் விதமாக புதிய வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் காம்பெக்ட் எஸ்யூவி மாடலை இந்த ஆண்டு துவக்கத்தில் சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய நெக்ஸான் மாடல் அதன் முந்தைய தலைமுறை காரை விடவும் டிசைன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களில் வேறுப்பட்டு உள்ளது.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இந்த வகையில் மிகவும் பாதுகாப்பான மாடலாக விளங்குகின்ற டாடா நெக்ஸானிற்கு போட்டியாக மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்கள் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் உள்ளன.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இந்த நிலையில் தான் நெக்ஸான் எஸ்யூவி மாடலில் வழங்கப்பட்டுள்ள இணைப்பு கார் தொழிற்நுட்ப அம்சங்களை வெளிக்காட்டும் வகையில் புதிய வீடியோ டாடா நிறுவனத்தில் இருந்து அதன் அதிகாரப்பூர்வ யூடியுப் பக்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இந்த வீடியோவில் நெக்ஸான் மாடலின் சன்ரூஃப் மற்றும் எக்ஸ்ப்ரஸ் கூல் பொத்தான் உள்ளிட்டவை காட்டுப்படுகின்றன. இதில் எக்ஸ்ப்ரஸ் கூல் பொத்தானானது இந்த எஸ்யூவி காரில் புதியதாக வழங்கப்பட்ட அம்சமாகும். இவை மட்டுமின்றி ஐஆர்ஏ என்ற இண்டலிஜண்ட் ரியல்-டைம் அசிஸ்ட் என்ற இணைப்பு வசதியும் இந்த காரில் உள்ளது என்பதையும் இந்த வீடியோ காட்டுகிறது.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இந்த ஐஆர்ஏ தொழிற்நுட்பத்தை பெற்ற முதல் டாடா மாடல் இந்த 2020 நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் தான். இந்த இணைப்பு கார் தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஜியோஃபென்ஸ் மூலமாக காரை ட்ராக் செய்ய முடியும். இதில் ஒன்றாக இந்த காரில் உள்ள ஃபைண்ட்-மை கார்-வசதியானது கார் பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பகுதியை ஸ்மார்ட்போன் இணைப்புடன் அறிய உதவும்.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இவற்றுடன் கார் எங்காவது விபத்திற்குள்ளானால் தகவலானது அவசர கால தொடர்பு எண்களுக்கும், வாகனத்தின் உரிமையாளருக்கும் அனுப்பி வைக்கப்படும் வசதியையும் இந்த 2020 ஃபேஸ்லிஃப்ட் மாடல் கொண்டுள்ளது. இந்த இணைப்பு கார் தொழிற்நுட்பங்களில் ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் ஹிங்கிலிஷ் போன்ற மொழிகள் அடங்கிய வாய்ஸ் கமெண்ட்டும் உள்ளது.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இதனால் காரின் ஏர்-கான், இசை, அழைப்புகள், எரிபொருள் அளவு மற்றும் ரேஞ்ச் உள்ளிட்ட தகவல்களை குரல் கட்டுப்பாட்டின் மூலமாகவே ஓட்டுனர் அறிந்து கொள்ள முடியும். இவை மட்டுமின்றி மற்ற ஹை எண்ட் கார்களில் உள்ள வாட்3வோர்ட்ஸ் நாவிகேஷன் வசதியும் அப்டேட் செய்யப்பட்ட நெக்ஸான் மாடலில் உள்ளது.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

டாடா நெக்ஸான் ஆனது பெட்ரோல், டீசல் மற்றும் எல்க்ட்ரிக் என மூன்று விதமான என்ஜின் தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் 1.2 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினானது அதிகப்பட்சமாக 120 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனையும், 1.5 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் 110 பிஎச்பி மற்றும் 270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

கார் இருக்கும் இடத்தை மொபைல் போன் வழியாகவே பார்க்கலாம்... டாடா நெக்ஸானில் புதிய தொழிற்ந்நுட்பம்...

இந்த இரு என்ஜின் தேர்வுகளுடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு மேனுவல் மற்றும் ஏஎம்டி என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. முழு சார்ஜில் 250 கிமீ தூரம் வரை காரை இயக்கி செல்லும் ஆற்றல் கொண்ட இதன் எலக்ட்ரிக் மோட்டாருடன் சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Tata Nexon’s new TVC shows off the compact SUV’s connected car features (Tata Nexon iRA Advanced Connected Technology)
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X