போலீஸ் உடையில் கம்பீரமாக காட்சியளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்.. என்ன கார்னு தெரியுதா?

போலீஸ் உடையில் டாடா நிறுவனத்தின் பிரபல கார் ஒன்று கம்பீரமாக காட்சியளித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

நாட்டின் மிக முக்கியமான வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக டாடா மோட்டார்ஸ் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம், அண்மையில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2020-இல் அதன் புத்தம் புதிய கிராவிடஸ் என்ற 7 சீட்டர் மாடலை காட்சிப்படுத்தியது. இதை மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவும் இருக்கின்றது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

டாடா நிறுவனம், அதன் டியாகோ, டிகோர் மற்றும் ஹாரியர் போன்ற மாடல்களால் மிகவும் பிரபலமான ஓர் மாடலாக திகழ்ந்து வருகின்றது.

இதேபோன்று, இந்நிறுவனத்தின் மற்றுமொரு புகழ்வாயந்த கார்களில் ஒன்றாக டாடா நெக்ஸான் இருக்கின்றது. இது, இந்தியாவின் முதல் பாதுகாப்பு நிறைந்த கார் என்ற பெறுமையைக் கொண்டிருக்கின்றது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு இந்த காரை க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியன்மூலம் இந்த தகவல் தெரியவந்தது. அது மேற்கொண்ட பரிசோதனையில் நெக்ஸான் கார் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களை பாதுகாப்பு தரத்தில் பெற்று புதுமையான சாதனையைப் படைத்தது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களிலேயே இந்த ரேட்டிங்கைப் பெறும் முதல் கார் இந்த நெக்ஸான்தான். ஆகையால், உலக நாடுகள் மத்தியில் அனைத்திலும் இந்த கார் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, முன்னதாக காணப்பட்ட விற்பனை விகிதத்தைக் காட்டிலும் கணிசமான விற்பனை வளர்ச்சியையும் அது பெற்றது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

இந்நிலையில், மோட்டார் ஷோ என்ற யுடியூப் தளம் ஒன்று டாடாவின் பாதுகாப்பு நிறைந்த நெக்ஸான் கார் போலீஸ் காராக மாற்றப்பட்டால் எப்படி இருக்கும் என்ற மாதிரி வடிவமைப்பைச் செய்து வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட மாற்றங்கள் தற்போது பயணிகள் காராக இருக்கும் நெக்ஸான், மேற்கத்திய நாடுகளில் காணப்படும் காவல்துறையினர் பயன்படுத்தும் நவீன போலீஸ் காராக மாறியிருக்கின்றது.

வீடியோவில், புதிய ட்யூவல் டோன் நெக்ஸான் காரை போலீஸ் காராக மாற்றும் விதமாக ரூஃபிற்கு வழங்கப்பட்டிருந்த சில்வர் நிறம் முதலில் கருப்பு நிறமாக மாற்றப்படுகின்றது. இதைத்தொடர்ந்து, காரின் அனைத்து பகுதிகளுக்கும் கருப்பு நிறம் வழங்கப்பட்டு உள்ளது. இதையடுத்து காரின் முன்பக்க க்ரில்லில் போலீஸ் வாகனத்திற்கே உரித்தான ஃபிளாஷர் எல்இடி மின் விளக்குகள் பொருத்தப்பட்டது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

இதேபோன்று, மேற்கூரையிலும் போலீஸ் வாகனம் என்பதை விளக்கும் வகையில் மூவர்ண எல்இடி மின் விளக்குகள் இணைக்கப்பட்டன. இதுமட்டுமின்றி, காரின் பக்கவாட்டு பகுதியில் போலீஸ் இன்டர்செப்டார் என்ற எழுத்துக்கள் பொருந்திய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டிருக்கின்றன.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

தொடர்ந்து, கூடுதலாக காரின் மிர்ரர்களுக்கு அருகே அடர்ந்த பனி மற்றும் இருட்டான பகுதியில் தெளிவான பார்வையை உருவாக்குவதற்கு ஏற்ப எல்இடி மின் விளக்குகள் இணைக்கப்பட்டுள்ளது.

நெக்ஸானின் முன்பக்க க்ரில் பகுதியில் புல் பார் என்ற பம்பர் பொருத்தப்பட்டுள்ளது. இது மோதலின்போது கார்களுக்கு பாதுகாப்பு வழங்கும் விதமாக இணைக்கப்பட்டுள்ளது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

இதிலும், எல்இடி ஃபிளாஷ் மின்விளக்குகள் அனைத்து நேரத்திலும் ஒளிரும் வகையில் இணைக்கப்பட்டிருக்கின்றது. இதுபோன்ற பல்வேறு மாற்றங்களால் இந்திய தயாரிப்பாக இருக்கும் நெக்ஸான் கார் சர்வதேச அளவில் பயன்படுத்தும் போலீஸ் வாகனத்து இணையாக மாறியிருக்கின்றது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

டாடா நிறுவனம் இந்த பாதுகாப்பு நிறைந்த நெக்ஸான் மாடலை பிஎஸ்-6 தரத்திற்கு அப்கிரேட் செய்திருக்கின்றது. இந்த கார் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டர்போ டீசல் எஞ்ஜின் ஆகிய இரு தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இவ்விறு எஞ்ஜின்களும் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிக்கின் தேர்விலும் கிடைக்கின்றது.

போலீஸ் உடையில் கம்பீரமாக தரிசனமளித்த இந்தியாவின் முதல் 5 ஸ்டார் ரேடட் கார்... இது என்ன கார்னு கண்டுபிடிங்க பாப்போம்..!

இதுமட்டுமின்றி, இந்த புகழ்வாய்ந்த மாடலில் பெட்ரோல், டீசல் அல்லாமல் மின்சார தேர்விலும் அறிமுகம் செய்திருக்கின்றது. இதனால், இந்த காருக்கான மதிப்பு அதிகரித்துக் கொண்டே சென்றுக் கொண்டிருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata Nexon Rendered As A Police Car. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X