டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

உலகிலேயே சாலை விபத்துக்களால் அதிக உயிரிழப்புகளை சந்தித்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இங்கு சாலை விபத்துக்கள் காரணமாக ஒரு ஆண்டுக்கு தோராயமாக 1.50 லட்சம் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாததே இதற்கு காரணம் என சொல்லி விடலாம். இது உண்மையும் கூட.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

ஆனால் இது மட்டும்தான் காரணமா? என்றால், நிச்சயம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆம், சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை குறைக்க வேண்டுமென்றால், வாகனங்கள் பாதுகாப்பானதாக இருக்க வேண்டியதும் அவசியம். பொதுவாக 'மேட் இன் இந்தியா' கார்கள் பாதுகாப்பானது கிடையாது என்னும் கருத்து சர்வதேச அரங்கில் இருந்து வருகிறது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

ஆனால் இந்தியாவை சேர்ந்த டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய இரண்டு நிறுவனங்களும் சமீப காலமாக அந்த குறையை தவிடு பொடியாக்கி வருகின்றன. குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பானது, கார்களை க்ராஷ் டெஸ்ட்டிற்கு (மோதல் சோதனை) உட்படுத்தி, அவற்றின் பாதுகாப்பு தரத்தை கண்டறிந்து அறிவித்து வருகிறது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெறும் கார்கள் மிகவும் பாதுகாப்பானவை என கருதப்படுகிறது. இந்த வகையில் டாடா நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் அல்ட்ராஸ் ஆகிய இரண்டு கார்களும், குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளன. அத்துடன் மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 காரும் 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்றுள்ளது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

இதில், அல்ட்ராஸ் காரின் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை ஹைலைட்டாக காட்டி, புது டிவிசி வீடியோ ஒன்றை டாடா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. டாடா நிறுவனத்தால் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார் அல்ட்ராஸ்தான். கடந்த ஆண்டு நடைபெற்ற ஜெனீவா மோட்டார் ஷோ திருவிழாவில் டாடா அல்ட்ராஸ் கார் வெளியிடப்பட்டது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

அதன்பின்னர் நடப்பாண்டு தொடக்கத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில், மாருதி சுஸுகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் எலைட் ஐ20 ஆகிய கார்களுடன், டாடா அல்ட்ராஸ் போட்டியிட்டு வருகிறது. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் டாடா அல்ட்ராஸ் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான கார் என்ற பெருமையை டாடா அல்ட்ராஸ் தன் வசம் வைத்திருப்பதும் இதற்கு ஒரு காரணம். இந்த செக்மெண்ட்டில் மட்டுமல்லாது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களிலேயே, பாதுகாப்பான மாடல்களில் ஒன்றாகவும் டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் இருந்து வருகிறது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

பொதுவாக பாதுகாப்பான கார்களை தயாரிப்பதில் டாடா நிறுவனம் நிபுணத்துவம் பெற்று விளங்குகிறது. அல்ட்ராஸ் காரின் கட்டுமான தரத்திலும் அது எதிரொலித்துள்ளது. இதன் காரணமாகதான் குளோபல் என்சிஏபி அமைப்பிடம் இருந்து அல்ட்ராஸ் காரால், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை கொத்தாக அள்ள முடிந்தது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

இப்படிப்பட்ட சூழலில், அல்ட்ராஸ் காரின் 5 ஸ்டார் ரேட்டிங்கை எடுத்துக்கூறும் வகையில் டாடா நிறுவனம் வெளியிட்டுள்ள டிவிசி வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. குளோபல் என்சிஏபி அமைப்பால் நடத்தப்பட்ட க்ராஷ் டெஸ்ட்டின் சிறிய க்ளிப்பிங்ஸ் இந்த வீடியோவில் சேர்க்கப்பட்டுள்ளது. பொதுவாக க்ராஷ் டெஸ்ட்டின்போது காரின் அனைத்து இருக்கைகளிலும் டம்மிகள் வைக்கப்படும்.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

இதன் பின்னர் விபத்தை எதிரொலிக்கும் வகையில், குறிப்பிட்ட வேகத்தில் ஒரு பொருளின் மீது கார் மோத வைக்கப்படும். இறுதியாக காரின் பாடி, விபத்தின் காரணமாக டம்மிகள் மற்றும் காரில் ஏற்பட்ட தாக்கம் ஆகியவற்றை கணக்கிட்டு பாதுகாப்பு ரேட்டிங் வழங்கப்படும். டாடா அல்ட்ராஸ் காருக்கும் இப்படிப்பட்ட சோதனைதான் நடத்தப்பட்டது. வீடியோவில் நம்மால் அதனை காண முடிகிறது.

டம்மி கார்களை நம்பி ஏமாந்தது போதும்... இந்தியர்களை பெருமைப்பட வைக்கும் டாடாவின் பாதுகாப்பான கார்...

இந்த சோதனையின்போது டாடா அல்ட்ராஸ் காரின் முன் பகுதி விபத்தின் தாக்கத்தை வாங்கி கொண்டது. அதே சமயம் பயணிகளை பாதுகாக்கும் வகையில் காரின் கேபின் அப்படியே உள்ளது. மேலும் பொருளின் மீது கார் மோதியதும், உடனடியாக ஏர்பேக்குகள் விரிவடைந்து விட்டன. இதுவும் பயணிகளுடைய பாதுகாப்பை உறுதி செய்யும் அம்சம்.

அத்துடன் காரின் ஏ, பி மற்றும் சி பில்லர்களும் அப்படியே உள்ளன. இதன் மூலம் அல்ட்ராஸ் காரை மிகவும் பாதுகாப்பானதாக உருவாக்க டாடா நிறுவனம் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. டாடா அல்ட்ராஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் கார், ஆல்பா (ALFA) பிளாட்பார்ம் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Releases New TVC For Altroz Premium Hatchback. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X