தேசிய கொடி - அசோக முத்திரையுடன் கெத்து காட்டிய கருடா.. இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரியுமா..?

2020 ஆட்டோ எக்ஸ்போவில் தேசிய கொடி மற்றும் மூன்று சிங்கங்கள் கொண்ட அசோக முத்திரைகளுடன் கருடா என்ற கார் கெத்துகாட்டியுள்ளது. இந்த காரை பற்றிய கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

2020ம் ஆண்டிற்கான 15 ஆட்டோ எக்ஸ்போ கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி நேற்று வரை (பிப்ரவரி 13) நடைபெற்றது. இதில் ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் எதிர்கால மற்றும் புது முக வாகனங்களை காட்சிப்படுத்தின.

அந்தவகையில், இந்திய ஜம்பவான் நிறுவனமான டாடாவும் கணிசமான புதிய வாகனங்களை காட்சிப்படுத்தியிருந்தது.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

குறிப்பாக, டாடாவிற்கென ஒதுக்கப்பட்டிருந்த ஸ்டாலில் நிலை நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் மட்டும் அனைத்து பார்வையாளர்களையும் தன் வசம் ஈர்த்தது. கருடா என்ற பெயரில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த அந்த வாகனம் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் ஸ்டாராக மாறியது.

ஜனாதிபதிகள் பயன்படுத்தும் ரகத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த காரை என்ஐடி (தேசிய வடிவமைப்பு நிறுவனம்) மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதனை முழுக்க முழுக்க கற்பனையின் அடிப்படையிலேயே என்ஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். இப்படிதான் ஒவ்வொரு வாகனங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றது. தற்போது, டாடா நிறுவனத்தின் குளோபல் டிசைன்களுக்கான துணைத் தலைவராக பணியாற்றி வரும் பிரதாப் போஸ் என்ஐடி-இன் முன்னாள் மாணவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதுகுறித்து டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த காரை என்ஐடி மாணவர்கள் ஜனாதிபதியின் லிமோசைன் வாகனத்தை அடிப்படை கருத்தாக உருவாக்கியிருப்பாக தெரவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக டாடாவின் சில வாகன நுணுக்கங்களும் சேர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக டாடாவின் சியரா மற்றும் எச்பிஎக்ஸ் ஆகிய கான்செப்ட் மாடல்களில் உள்ள சில அம்சங்கள் இந்த கருடா வாகனத்தில் இடம்பெற்றிருப்பதை நம்மால் மிக தெளிவாக காண முடிகின்றது.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதனை, கருடாவில் இடம்பெற்றிருக்கும் ஸ்லீக் டைப்பிலான டிஆர்எல்கள் அதன்கீழே நிறுவப்பட்டிருக்கும் ஹெட்லேம்ப் க்ளஸ்டர் உள்ளிட்டவை உறுதி செய்கின்றன.

இத்துடன், இந்த லிமோசைன் காருக்கு மிகவும் கவர்ச்சியான தோற்றம் வழங்க வேண்டும் என்பதற்காக 26 ஸ்போக்குகள் கொண்ட அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், இதனை டாடாவின் தயாரிப்பு என சித்தரிக்கும் விதமாக முன் மற்றும் பின் பக்கங்களில் டாடா பேட்ஜ்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இத்துடன், அசோகாவின் மூன்று சிங்கங்கள் முத்திரை காரின் கடைசி பில்லர்களில் நிறுவப்பட்டுள்ளது. தொடர்ந்து, முகப்பு மற்றும் இன்டிகேட்டர்களுக்கு எல்இடி மின் விளக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், காரின் கூடுதல் கவர்ச்சிக்காக அடர்ந்த நீல நிறம் வழங்கப்பட்டுள்ளது.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதுபோன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட காரை தான் உலகின் வல்லாதிக்க நாடுகளாக கருதப்படும் அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்த வாகனங்களை அந்நாட்டை மையமாகவே கொண்டு இயங்கும் வாகன உற்பத்தி நிறுவனங்களே கஸ்டமைஸ் செய்து வழங்கி வருகின்றன.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

அவ்வாறு, அமெரிக்க ஜனாதிபதி பயன்படுத்தும் கடில்லாக் ஒன் ஏகேஏ வாகனத்தை அந்நாட்டு ஜெனரல் மோட்டார்ஸ் வடிவமைத்து வழங்கியது. இது உலகில் உள்ள அதீத பாதுகாப்பு வசதி கொண்ட வாகனங்களில் ஒன்றாகும். இதைதான் இந்திய ஜனாதிபதியும் பயன்படுத்தி வருகின்றார்.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இந்த காரில் என்ன மாதிரியான வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன என்ற தகவலை அந்த நிறுவனங்கள் பாதுகாப்பு கருதி வெளியிடவில்லை.

தேசிய கொடி - அசோக முத்திரைகளுடன் கெத்து காட்டிய 'கருடா'... இதை வடிவமைத்தவர்கள் யார் என தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..!

இதேபோன்றதொரு காரைதான் ரஷ்யாவின் ஜனாதிபதி வால்டிமிர் புதின் பயன்படுத்தி வருகின்றார். அவுரஸ் செனட் லிமோசைன் என்றழைக்கப்படும் அந்த காரை அந்நாட்டைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் கட்டமைத்திருக்கின்றது.

Most Read Articles
English summary
Tata Showcased Garuda Presidential Vehicle At 2020 Auto Expo. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X