டாடா டெக்னாலஜிஸ் உடன் ஜிகேஎன் ஆட்டோமேட்டிவ் கூட்டணி சேர்ந்தது.. பெங்களூரில் புதிய இன்ஜினியரிங் மையம்

உலகளாவிய பொறியியல் மற்றும் தயாரிப்பு மேம்பாடு டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான டாடா டெக்னாலஜிஸும் ட்ரைவ்லைன் அமைப்புகள் & மேம்பட்ட இ-பவர்ட்ரெயின் தொழிற்நுட்பங்களில் தலைமை நிறுவனமான ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ்-வும் கூட்டாக சேர்ந்து இன்று உலகளாவிய மின் இயக்கத்திற்கான மென்பொருள் பொறியியல் மையம் பெங்களூருவில் புதியதாக திறந்துள்ளன.

டாடா டெக்னாலஜிஸ் உடன் இணைந்தது ஜிகேஎன் ஆட்டோமேட்டிவ்...

புதிய மையம் டாடா டெக்னாலஜிஸின் மின்சார மற்றும் உட்பொதிக்கப்பட்ட அமைப்புகளில் நிபுணத்துவம் பெறுவதோடு, ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை இ-ட்ரைவ் தொழில்நுட்பங்களில் பணியாற்றுவதற்காக இந்தியாவின் மென்பொருள் பொறியியல் திறமையாளர்களையும் ஈர்க்கும்.

இதனால் இந்த மையம் நிலையான மின் இயக்கத்தின் எதிர்காலத்தை மாற்றியமைத்தாலும் ஆச்சிரியப்படுவதற்கில்லை. 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100க்கும் மேற்பட்ட உலக தரம் வாய்ந்த மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் ஆதரவு ஊழியர்களைக் கொண்ட பணியாளர்கள் குழுவை கொண்டிருக்க வேண்டும் என்பதே இவ்விரு நிறுவனங்களின் தற்போதைய லட்சியமாகும்.

ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தின் எதிர்கால அட்வான்ஸ்டு இ-பவர்ட்ரெய்ன் தொழிற்நுட்பங்களை உருவாக்கவுள்ள இந்தியாவின் சிறந்த திறமையாளர்களை ஈர்க்க, விரைவான ஆட்சேர்ப்பு இயக்கம் ஏற்கனவே இந்நிறுவனத்திடம் செயல்பாட்டில் உள்ளது.

இதுகுறித்து டாடா டெக்னாலஜிஸின் நிர்வாக இயக்குனரும் சிஇஒ-வுமான வாரன் ஹாரிஸ் கருத்து தெரிவிக்கையில், "டாடா டெக்னாலஜிஸ், 'பொறியியல் ஒரு சிறந்த உலகம்' என்ற பார்வையுடன் உலகளாவிய ஒரிஜினல் உபகரண உற்பத்தியாளர்கள் மற்றும் அடுக்கு-1 தயாரிப்பாளர்களை செயல்படுத்துகிறது.

அதன் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் பொறியியல் திறன்களின் மூலம் அதன் சிறந்த தயாரிப்புகளை நம்மை அறிய வைக்கிறது. ஜி.கே.என் ஆட்டோமோட்டிவ் உடனான இந்த கூட்டணி, நிலையான மற்றும் பசுமையான உலகத்தை அடைய உதவும் அடுத்த தலைமுறை மின்சார வாகனங்களின் வளர்ச்சிக்கு கணிசமாக பங்களிக்கும்" என தெரிவித்தார்.

ஜிகேஎன் ஆட்டோமேட்டிவ் நிறுவனத்தின் சிஇஒ லியாம் பட்டர்வொர்த் பேசுகையில், "இது ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான முயற்சி. இந்த மையத்தை உருவாக்க டாடா டெக்னாலஜிஸுடன் கூட்டணி சேர்ந்திருப்பது, இந்தியாவில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மென்பொருள் பொறியியல் திறமையாளர்களை பெறவும், டாடா டெக்னாலஜிஸின் தயாரிப்பு பொறியியல் திறன்களை பயன்படுத்தவும் உதவும்.

எங்கள் இ-ட்ரைவ் தொழில்நுட்பங்கள் ஏற்கனவே எங்களை சந்தையில் முன்னணி நிலையில் வைத்திருக்கின்றன, ஆனால் இந்த முயற்சி மேலும் வளரவும், எங்கள் தொழில்நுட்ப திறன்களை விரிவுபடுத்தவும் மேம்படுத்தவும் உதவும்" என தெரிவித்தார்.

பெங்களூரில் இந்த மையம் சுமார் 12,650 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த மையத்தில் ஒரு வடிவமைப்பு ஸ்டுடியோ, ஆய்வக நிலையங்கள், கலந்துரையாடல் அறைகள் மற்றும் ஒரு ஆரோக்கிய மையம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

கோவிட்-19 தொற்றுநோயால் எதிர்பாராத சவால்கள் இருந்தபோதிலும், இந்த மையம் தளவமைப்பு முதல் கட்டுமானம் வரை வெறும் ஆறு மாதங்களில் நிறைவடைந்துள்ளது. அனைத்து டாடா டெக்னாலஜிஸ் தொழிற்சாலைகளிலும் செயல்படுத்தப்பட்டு வரும் கடுமையான சுகாதாரம், சுத்திகரிப்பு மற்றும் சமூக இடைவெளி உள்ளிட நடைமுறைகள் முழுமையாக திறக்கப்பட்ட பின்னர் இந்த மையத்திலும் தொடரவுள்ளது.

டாடா டெக்னாலிஜிஸை பற்றி கூற வேண்டுமென்றால், இது ஒரு மேம்பட்ட தயாரிப்பு வடிவமைப்பு, பொறியியல் மற்றும் ஆர் & டி ஆலோசனை சேவைகளை மேம்படுத்துவதில் உலகளாவிய கண்டுபிடிப்பாளராகும். முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் சிறந்த, பாதுகாப்பான, பசுமையான, வேகமான மற்றும் அனுபவமிக்க இயக்க தீர்வுகளை உருவாக்க இந்நிறுவனம் உதவுகிறது.

'பொறியியல் ஒரு சிறந்த உலகம்' என்ற விஷன் மூலம் கூட்டு கண்டுபிடிப்பு, மற்றும் நிலையான தொழில்நுட்ப விஷயங்களில் சுறுசுறுப்புடன் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், எதிர்கால போக்குவரத்து இயக்கத்தை மாற்றும் விதமாக, உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய 8500க்கும் மேற்பட்ட கண்டுப்பிடிப்பாளர்களை கொண்டுள்ளது.

டாடா குழுமத்தில், இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு வணிகக் குழுவான டாடா டெக்னாலஜிஸ் அடுத்த-தலைமுறை தயாரிப்பு வாழ்க்கை சுழற்சி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் நிறுவன தீர்வுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒரு முதன்மை பங்காளியாகும். இந்நிறுவனத்தை http://www.tatatechnologies.com/ என்ற இணையத்தளத்தில் தொடர்பு கொள்ளலாம்.

ஜி.கே.என் ஆட்டோமோட்டிவ் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனம். இது உலகின் பெரும்பாலான வாகன நிறுவனங்களுக்கு சந்தை-முன்னணி டிரைவ்லைன் அமைப்புகள் மற்றும் மேம்பட்ட இ-பவர்ட்ரெயின் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், கட்டமைத்தல் மற்றும் வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது.

ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ்-வின் சந்தை-முன்னணி டிரைவ்லைன் பிரிவு விரிவான தொழில்நுட்பங்களை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றது. குறைந்த விலை வாகனங்களை சிக்கலான ஆல்-வீல் டிரைவ் டிரைவிங் டைனமிக்ஸ் கொண்ட டாப் எண்ட் பிரீமியம் கார்களாக மாற்றுவதில் அதிக அளவிலான பங்களிப்பை கொண்டுள்ளது.

மின்மயமாக்கப்பட்ட அனைத்து வாகனங்களுக்கும் தொழில்நுட்ப தீர்வுகளை இதன் இ-பவர்டிரெய்ன் பிரிவு இப்போது வழங்குகிறது. இத்தகைய தொழில்நுட்பங்களின் முற்போக்கான முன்னோடியான இது, 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு உற்பத்தி காரில் முதன்முறையாக இ-ட்ரைவ் அமைப்பை பொருத்தியது. இந்நிறுவனம் மூலம் இப்போதுவரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான மின்மயமாக்கப்பட்ட வாகனங்கள் உலகளவில் இயங்கி வருகின்றன.

ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ் என்பது ஒரு உலகளாவிய நிறுவனமாகும், இது இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. 21 நாடுகளில் இயங்கிவரும் இந்நிறுவனம் உலகளவில் 27,000 பேருக்கு வேலை அளிக்கிறது. ஜிகேஎன் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தை http://www.gknautomotive.com/ என்ற இணையத்தளம் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

Most Read Articles

மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Tata Technologies and GKN Automotive join forces to set up a Global E-Mobility Software Engineering center at Bengaluru, India
Story first published: Thursday, October 8, 2020, 20:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X