100கிமீ வேகத்தில் பல்டியடித்தும் ஒன்னுமே ஆகல! கடவுளாய் மாறிய டாடா கார்! இதனாலே இது ஜாம்பவான்!

பெரும் விபத்தில் சிக்கியும் பயணிகளுக்கு அதிக பாதுகாப்பை டாடா நிறுவனத்தின் காரொன்று வழங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

உலக நாடுகளுக்கு இணையான கார்களை எங்களாலும் தயாரிக்க முடியும் என்பதை இந்திய நிறுவனங்கள் சில நிரூபித்து வருகின்றன. அதில், டாடா நிறுவனத்தின் தயாரிப்பு சற்று ஓங்கி இருக்கின்றது என்றே கூறலாம். ஆம், டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் ஸ்டைல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் மட்டுமின்றி பாதுகாப்பு தரத்திலும் தலை சிறந்த கார்கள் என்பதை அவ்வப்போது நிரூபித்து வண்ணம் இருக்கின்றன.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

அந்தவகையிலான ஓர் தகவலைதான் தற்போது நாம் பார்க்கவிருக்கின்றோம். இதுகுறித்த வீடியோவை பிரதீக்சிங் (Prateek Singh)எனும் யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த தயாரிப்புகளில் ஒன்றாக டியாகோ உள்ளது. இந்த கார் குளோபல் என்சிஏபி அமைப்பு நிகழ்த்திய பாதுகாப்புகுறித்த கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திரங்களைப் பெற்று சாதனைப் படைத்தது.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

இந்த பாதுகாப்பு தரத்தை நிஜ வாழ்க்கையில் உறுதிப்படுத்தும் வகையில், நம்ப முடியாத பாதுகாப்பினை டியாகோ அதன் பயணிகளுக்கு வழங்கியுள்ளது. சுமார் 100 கிமீ வேகத்தில் வந்த டாடா டியாகே, தலை கீழாக கவிழ்ந்து 80 மீட்டர் தூரம் உருண்டு சென்ற பின்னரும் அதற்குள் பயணித்த அனைத்து பயணிகளையும் பத்திரப்படுத்தியுள்ளது.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய ஆட்டோ துறைக்குமே பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், டாடா நிறுவனத்தின் தயாரிப்புகள் இந்தளவிற்கு பாதுகாப்பு நிறைந்ததா என்ற ஆச்சரியத்தையும் உருவாக்கியுள்ளது.

டாடா கார்கள் இதுபோன்று பயணிகளை மிகப்பெரிய விபத்துகளில் இருந்து காப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதே போன்ற நம்ப முடியாத விபத்துகளில் இருந்தும்கூட அதன் பயணிகளை டாடா கார்கள் காப்பாற்றியிருக்கின்றன.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

அதிலும், டாடா நிறுவனத்தின் அதிக பாதுகாப்பு நிறைந்த காராக கருதப்படும் நெக்ஸான் எஸ்யூவி செய்த சாதனைகள் பல.

சமீபத்தில்கூட கேரளாவில் நிகழ்ந்த மிகப் பெரிய விபத்து சம்பவத்தில், தலை கீழாக கவிழ்ந்து பல முறை சாலையில் உருண்டோடியும் அந்த காரில் பயணித்த ஒரே ஒரு பயணியான டிரைவரை சிறு கீரல்களுடன் உயிருடன் காப்பாற்றியது.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

இதில், உச்சம் என்னவென்றால், இந்த காரின் எஞ்ஜின் பே-வில் பொருத்தப்பட்டிருந்த எஞ்ஜின் சில மீட்டர்கள் தூரத்திற்கு வீசப்பட்டு இருந்தது. மேலும், காரின் முன் பகுதி கண்டுபிடிக்க முடியாத வகையில் அப்பளம்போல் நொருங்கி இருந்தது.

இந்த விபரீதமான நிகழ்விலும்கூட அதன் பயணிக்கு நம்ப முடியாத வகையில் பாதுகாப்பை உருவாக்கிக் கொடுத்து இந்திய சந்தையில் நற்பெயரைச் சூட்டிக் கொண்டது டாடா நெக்ஸான்.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

இதுபோன்று நெக்ஸான் செய்த நல்ல காரியங்கள் பல இருக்கின்றன. இந்த நிலையில்தான் டாடா தாயரிப்புகள் என்றாலே பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்கின்ற வகையில் டாடா டியாகோ, 100 கிமீ வேகத்தில் விபத்தைச் சந்தித்தும் பயணிகளைக் காப்பாற்றியிருக்கின்றது. இந்த காரும் 80 மீட்டர்கள் வரை தலைகீழாக கவிழ்ந்து உருண்டு சென்றிருக்கின்றது.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

இந்த சம்பவம் ஒடிசா மாநிலம் டியோகர் (Deogarh) எனும் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்காரின் உரிமையாளர் அதே மாநிலத்தைச் சேர்ந்த டெபி பிரசாத் தாஸ் என்பத கண்டறியப்பட்டுள்ளது.

இந்த மிகப் பெரிய விபத்திற்கு டெபி, அதி வேகத்தில் காரை இயக்கியதே காரணம் என கூறப்படுகின்றது. இவர், 100 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் காரை இயக்கியுள்ளார்.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

அப்போது எதிர்பாராத விதமாக வந்த வளைவில் திருப்ப முடியாமல் சாலையின் ஒதுக்குபுறத்தில் கார் சென்றுள்ளது. இதனால், அக்கார் சுமார் 7 முறைக்கும் அதிகமாக உருள நேர்ந்துள்ளது. இதனால் காரின் முன் பகுதி பிள்ளர்கள் கடுமையாக சேதமடைந்தன. இதுமட்டுமின்றி மேற்கூரை முற்றிலுமாக நொருங்கியது. இருப்பினும், அக்காரில் பயணித்த ஓட்டுநர் மற்றும் சக பயணிகள் சிறு காயங்களுடன் மீண்டனர்.

இந்த அபரீதமான செயலுக்கு டாடா டியாகோ காரில் இடம்பெற்றிருக்கும் பாதுகாப்பு அம்சங்களே முக்கிய காரணமாக உள்ளது. ட்யூவல் ஏர் பேக், சீட் பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடிங் அலர்ட், ரியர் பார்க்கிங் சென்சார் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் அம்சம் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் இக்காரில் இடம்பெற்றிருக்கின்றன. எனவேதான் நாம் ஏற்கனவே கூறியதைப் போல் பாதுகாப்பு தரத்தில் 4 நட்சத்திரங்களை இக்கார் பெற்றிருக்கின்றது.

80மீ உருண்டும் பயணிக்கு ஒன்னுமே ஆகல... கடவுளாய் மாறிய டாடா கார்... இதனால் இது இந்தியாவின் ஜாம்பவான்!

இந்த காரில் 1.2 லிட்டர், நேச்சுரல்லி அஸ்பயர்ட், இன்லைன்-3 பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இது அதிகபட்சமாக 87 பிஎஸ் மற்றும் 113 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும். இது 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

இந்தியாவில் இக்கார் 4.6 லட்சம் ரூபாய் இருந்து 6.59 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Tiago Build Quality Proved Again. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X