திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

அம்சத்திலும், உருவத்திலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரால் செய்ய முடியாத ஓர் காரியத்தை டாடா டியாகோ ஹேட்ச்பேக் செய்து பிரம்மிப்பை ஏற்படுத்தியுள்ளது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றது. இந்த கார்கள் ஆஃப் மற்றும் ஆன் ரோடுகளில் இயங்கும் தன்மைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலும், அதிக இட வசதியைக் கொண்டிருப்பதன் காரணத்தினாலும் இத்தகைய நிலைப்பாடு இந்தியாவில் நிலவுகின்றது. இதன் காரணத்தினாலயே இந்தியாவில் எஸ்யூவி ரக கார்கள் அதிகம் விற்பனையாகும் வாகனங்களாக இருக்கின்றன.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

மேலும், இந்த ரக கார்கள் சிறிய மற்றும் பெரிய உருவம் என அனைத்து விதமான அளவு தேர்விலும் விற்பனைக்கு கிடைக்கின்றது. தொடர்ந்து, ஆஃப் ரோடுகளில் பயனளிக்கின்ற வகையில், கிரவுண்ட் கிளியரன்ஸ் உள்ளிட்ட அம்சங்களை அது பெற்றிருக்கின்றது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

என்னதான் பல அம்சங்களை அவைக் கொண்டிருந்தாலும், சில நேரங்களில் சாய்வான அல்லது கரடு, முரடான சாலைகளில் செல்லும்போது அதிகப்படியான சிக்கலைச் சந்திக்கின்றன.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

அந்த கார்களில், ஆஃப் ரோடுகளில் இயங்குவதற்கான அம்சங்கள் இருந்தும் இம்மாதிரியான நிலை ஏற்படுகின்றது. அந்தவகையில், சாய்வான காட்டு பாதை ஒன்றில் செல்ல முடியாமல் சிக்கி தவிக்கும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ காரைப் பற்றிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியிருக்கின்றது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

அதே வீடியோவில், ஆச்சரியமளிக்கும் விதமாக டாடா நிறுவனத்தின் சிறிய உருவம் கொண்ட டியாகோ ஹேட்ச்பேக் ரக கார், அதே பாதையை மிகவும் அசால்டாக கடப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருக்கின்றன. இதுகுறித்த வீடியோவை ஒன் லிவிங் லைஃப் என்ற யுடியூப் சேனல் வெளியிட்டுள்ளது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

இந்த வீடியோ, அருணாச்சல பிரதேசத்தில் ஓர் பகுதியில் எடுக்கப்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளது. அதாவது, பரசுராம் குந்த் டூ வலாங் டவுனிற்கு செல்லும் வழியிலேயே இந்த சம்பவம் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பகுதியை இணைக்கும் சாலைகள்தான் இந்தளவிற்கு கரடு, முரடாக மோசமானதாக இருக்கும்.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

இது காடுகளின் ஊடாக செல்லும் பாதை என்பதால் பாறைகளும், மண் குவியல்களும் அதிகம் நிறைந்த சாலையாக இருக்கின்றது.

இந்த சாலையில், முதலில் வந்த டாடா டியாகோ கார் எந்தவொரு சிக்கலையும் சந்திக்காமல் சர்வ சாதாரணமாக செல்கின்றது. இதனை வீடியோ வாயிலாக நம்மால் காண முடிகின்றது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

ஆனால், டியாகோவைத் தொடர்ந்து வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார், பிடியை இழந்து பல முறை ஏற முயற்சித்தும் தோல்வியைச் சந்திக்கின்றது. பின்னர், சிறிது பின்னோக்கி சென்ற ஸ்கார்ப்பியோ, ஓட்டுநரின் கணிசமான முயற்சியால், அந்த சரிவான பாதையில் இருந்து வெளியேறி சீரான பாதையை அடைகின்றது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

முன்னதாக, இந்த பாதையில் டாடா டியாகோ காரே நிச்சயம் சிக்கி தவிக்கும் என அந்த குழு நினைத்தது. மேலும், கற்கள் நிறைந்த சாலையை கடக்காமல் ஏதேனும் பாறைகளில் மோதி கடுமையாக பாதிப்படையும் என்றும் அவர்கள் கவலையில் ஆழ்ந்திருந்தனர்.

ஆனால், ஆச்சரியமளிக்கும் விதமாக இதில் எதுவும் நடக்காமல், அவர்களின் எண்ணத்திற்கு மாறுபட்டு டியாகோ கார் செயல்பட்டது. மேலும், ஸ்கார்பியோ கடக்க திணறிய அந்த பாதையை மிகவும் அசால்டாக அது கடந்தது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

இந்த சிக்கல் எதனால் மஹிந்திரா ஸ்கார்பியோ காருக்கு ஏற்பட்டது என்ற கேள்வி உங்களில் பலருக்கு எழும்பலாம்.. முதல் காரணம், எடை. ஸ்கார்பியோவுடன் ஒப்பிடுகையில் டியாகோ மிகவும் இலகுவான கார் ஆகும். எடை குறைவாக இருந்ததன் காரணத்தினாலயே அவ்வளவு கடினமான சாலையையும் அசால்டாக கடந்தது.

திணறிய ஸ்கார்பியோ.. அசால்ட் செய்த டாடா டியோகா.. டாடா, டாடாதான்யா.. இத அடிச்சிக்க ஆளே இல்லை...!

மற்றொரு காரணம், டியாகோ ஒரு முன் சக்கர இயக்கம் கொண்ட கார் ஆகும். மேலும், இந்த காருக்கான எஞ்ஜினும் முன் பகுதியில் நிறுவப்பட்டுள்ளது. ஆகையால், முன் பக்கத்தில் அதிக எடை ஏற்பட்டு கூடுதல் பிடிமானத்தை முன் சக்கரங்களுக்கு வழங்குவதால் இம்மாதிரியான கரடு, முரடான சாலையை அது எளிதில் கடக்கின்றது. ஆனால், ஸ்கார்பியோ பின்புற சக்கரத்தால் இயங்கும் தன்மைக் கொண்டது. இதனாலயே கடுமையான சூழ்நிலையில் பிடியை இழந்து கார் தத்தளிக்கும் நிலை ஏற்படுகின்றது.

இதுபோன்ற காரணங்களினாலயே மலைப் பகுதிகளில் அதிகமானோர் மாருதி 800 மற்றும் ஆல்டோ கார்களை பயன்படுத்தி வருகின்றனர். அதேசமயம், ஸ்கார்பியோ எந்த வகையிலும் குறைந்த திறன் கொண்ட கார் அல்ல. காருக்குள் போதுமான சுமை இருந்தால், பின்புற சக்கரத்தின் இயக்கம் மூலமே அந்த கார் எந்தவொரு சாலையை அசால்டாக கடந்துவிடும். ஆனால், இந்த சம்பவத்தில் அம்மாதிரியான ஓர் நிகழ்வு ஏற்படவில்லை. எனவே, டியாகோவைக் காட்டிலும் அதிக சிரமத்தை அது சந்தித்துள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Tata Tiago Crossed Without Getting Stuck At An Inclined Place. Read In Tamil.
Story first published: Wednesday, April 22, 2020, 19:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X