அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

டாடா டியாகோவின் புதிய வேரியண்ட் சாக்கர் என்ற பெயரில் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைந்துள்ளது. இதுகுறித்து இந்தியன்ஆட்டோ செய்திதளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

டாடா மோட்டார்ஸின் ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் காராக டியாகோ விளங்குகிறது. இதன் புதிய சாக்கர் எடிசன் புதிய உடல் வடிவத்தில் சில மாற்றங்களுடன் கொண்டுவரப்பட்டுள்ளது.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

வழக்கமான டியாகோ வேரியண்ட்களை காட்டிலும் வெறும் ரூ.8,000 கூடுதல் விலையுடன் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய எடிசன் காரின் படங்களை வைத்து பார்க்கும்போது சாக்கர் எடிசன் வெளிப்புறத்தில் கூடுதலாக க்ரே மற்றும் கருப்பு நிற கிராஃபிக்ஸ் உடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

இந்த வகையில் C-பில்லர் முழுவதும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. சாக்கர் என்ற முத்திரை காரின் முன் கதவுகளில் தென்படுகிறது. மற்றப்படி என்ஜின் அமைப்புகளில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. டாடா டியாகோவில் பிஎஸ்6 தரத்தில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளுடன் வழங்கப்படுகின்ற இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 85 பிஎச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

இந்த புதிய சாக்கர் எடிசன் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டியாகோவின் டர்போசார்ஜ்டு வெர்சனின் தயாரிப்பு பணிகளிலும் ஈடுப்பட்டு வருகிறது. தற்சமயம் சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வரும் இந்த வெர்சனில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் 99 பிஎச்பி மற்றும் 141 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் டாடா அல்ட்ராஸிலும் விரைவில் வழங்கப்படவுள்ளது. ஏனெனில் அல்ட்ராஸ் டர்போ வெர்சனையும் சில முறை சோதனை ஓட்டங்களின்போது கண்டறிந்துள்ளோம். டாடா நிறுவனம் தற்சமயம் 6 இருக்கை கொண்ட கிராவிட்டாஸ் எஸ்யூவியின் அறிமுக பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது.

அசத்தலான பெயிண்ட் அமைப்புடன் விற்பனைக்கு வந்தது டாடா டியாகோ சாக்கர்.. வெறும் ரூ.8,000 மட்டுமே அதிகம்

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்ட கிராவிட்டாஸின் மீது மிக பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இதனை தொடர்ந்து எச்பிஎக்ஸ் என்ற பெயரில் மைக்ரோ-எஸ்யூவி மாடல் ஒன்றையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Tata Tiago Soccer Edition spotted at dealerships. Read in Telugu.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X