டாடா டியாகோ, டிகோர் கார்கள் பயணத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

டாடா நிறுவனத்தின் டியாகோ மற்றும் டிகோர் ஆகிய இரு கார்களும் விபத்தின்போது எத்தகைய பாதுகாப்பை வழங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

இந்தியாவில் எத்தனைதான் வெளிநாட்டு வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதன் கவர்ச்சிகரமான தயாரிப்புகளுடன் களமிறங்கினாலும், இந்தியர்களின் மனதில் தனித்துவமான இடத்தை பிடித்திருக்கின்றது டாடா நிறுவனம்.

இந்நிறுவனம், அண்மைக் காலங்களாக அதன் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்துகின்ற வகையிலான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

அந்தவகையில், இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார், பயணிகளின் பாதுகாப்பில் ஐந்திற்கு 5 நட்சத்திரங்களைப் பெற்று அசத்தியது. இதுபோன்ற டாடா நிறுவனத்தின் தயாரிப்பு 5/5 நட்சத்திரங்களைப் பெறுவது முதல்முறையல்ல.

முன்னதாக டாடா நெக்ஸான் கார்கூட இதேபோன்று பாதுகாப்பு தரத்தில் ஐந்து நட்சத்திரங்களைப் பெற்று அசத்தியது குறிப்பிடத்தகுந்தது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

இதனால், ஐந்து நட்சத்திரங்களைப் பெற்ற முதல் இந்திய தயாரிப்பு என்ற புகழை டாடா நெக்ஸான் கார் பெற்றது. இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனம் இனி வரும் காலங்களில் அதன் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்ற வகையிலான தயாரிப்புகளையே உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்தது. அதன்படி, தற்போது புதிய வரவாக இருக்கும் அல்ட்ராஸ் காரையும் அது ஐந்து நட்சத்திரங்கள் பாதுகாப்பிற்கு இணையாக தயாரித்தது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

இந்நிலையில், டாடா நிறுவனத்தின் மேலும்சில பிரபல தயாரிப்புகளான டியாகோ மற்றும் டிகோர் மாடல் கார்களின் பாதுகாப்பு தரம் பற்றிய தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த கார்களை குளோபல் என்சிஏபி என்ற அமைப்பு க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தி அந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனையில் டாடா டிகோர் மற்றும் டியாகோ கார்கள் ஐந்திற்கு நான்கு நட்சத்திரங்களைப் பெற்றிருக்கின்றது. இது, பெரியவர்களுக்கான பாதுகாப்பு ரேட்டிங் ஆகும்.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

அதேசமயம், குழந்தைகளின் பாதுகாப்பில் இந்த கார்கள் சற்றே பின் தங்கியுள்ளது. இதில், வெறும் 3 நட்சத்திரங்களை மட்டுமே அவை பெற்றிருக்கின்றன.

குளோபல் என்சிஏபி அமைப்பு டாடாவின் டியாகோ மற்றும் டிகோரின் ஸ்டாண்டர்டு வேரியண்டுகளைதான் தற்போது க்ராஷ் டெஸ்டிற்கு உட்படுத்தியுள்ளது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

இவ்விரு வேரியண்டின் முன்பக்கத்திலும் பாதுகாப்பு அம்சத்திற்காக இரு ஏர் பேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இருப்பினும், கார்களின் கட்டமைப்பு மற்றும் கால்கள் வைக்கும் பகுதி பலவீணமாக இருப்பதன் காரணத்தால் பாதுகாப்புகுறித்த தர ஆய்வில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதேசமயம், காரில் பயணிக்கும் பெரியவர்களின் கழுத்து மற்றும் தலைப் பகுதிக்கு தரமான பாதுகாப்பை வழங்கும் வகையில் காரின் கட்டமைப்பு இருப்பது இந்த பரிசோதனையின்மூலம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று, தொடை மற்றும் முழங்கால் பகுதிக்கு டியாகோ மற்றும் டிகோர் கார்கள் ஓரளவிற்கு மட்டுமே பாதுகாப்பை வழங்குகின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

தொடர்ந்து, ஓட்டுநர் இருக்கையில் அமர்பவர்களுக்கான பாதுகாப்பை பற்றி பார்ப்போமேயானால், மார்பக பகுதிக்கான பாதுகாப்பு ஓரளவில் மட்டுமே இருக்கின்றது. இருப்பினும், விபத்தின்போது பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று கூறப்படுகின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

இதேபோல், குழந்தைகளின் பாதுகாப்பை பொறுத்தவரை டிகோர் மற்றும் டியாகோ ஆகிய இரு கார்களும் 3 நட்சத்திரங்களை மட்டுமே பெற்றிருக்கின்றது. இது போதுமானதாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் இருக்கின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

குறிப்பாக, 3 வயதிற்கும் குறைந்த குழந்தைகளின் பாதுகாப்பிற்காக பெரியவர்களுக்கு வழங்குவதைப் போன்ற சீட் பெல்ட் மற்றும் லெக் சப்போர்ட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவை, குழந்தைகளின் தலை மற்றும் மார்பு பகுதிகளுக்கு லேசான பாதுகாப்பை வழங்குகின்றது.

இதேபோன்ற பாதுகாப்பைதான் 18 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு டிகோர் மற்றும் டியாகோ வழங்குகின்றது. இது சற்றே ஆபத்தான விஷயம்தான்.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் அனைத்து இருக்கைக்கும் மும்முனை சீட் பெல்ட் வழங்கப்படவில்லே. மேலும், சிறுவர்களுக்கான பாதுகாப்பை வழங்கும் ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கைக்கான ஆங்கர்களும் இடம்பெறவில்லை. இவற்றின் குறைபாடின் காரணமாகவும், இரு கார்களின் பாதுகாப்பு தர ரேட்டிங் மதிப்பு குறைந்திருக்கின்றது.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

டாடா, அதன் வாடிக்கையாளர்களின் தேவையை உடனுக்குடன் பூர்த்தி செய்வதில் முதலிடத்தில் இருக்கின்றது. ஆகையால், வரும்காலங்களில் இந்த குறைபாட்டை நீக்குவதற்கான நடவடிக்கையில் அது களமிறங்கலாம் என எதிர்பார்க்கின்றது.

அத்துடன், பாதுகாப்பு ரேட்டிங் அதிக ரேட்டிங்கைப் பெறுவதற்கான முயற்சியையும் அது மேற்கொள்ளலாம்.

டாடா டியாகோ, டிகோர் கார்கள் விபத்தில் எத்தகைய பாதுகாப்பை வழங்கும்..? இதோ ஆய்வு தகவல்..!

டாடா நிறுவனம் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸன் ஆகிய மாடல்களின் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இவையனைத்திலும் பிஎஸ் 6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவே, இந்த கார்களில் காணப்படும் முக்கிய புதுப்பித்தலாக காட்சியளிக்கின்றது. இதுதவிர, தொழில்நுட்பம் மற்றும் டிசைனில் லேசான மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
English summary
Tata Tiago, Tigor Gets 4 Star Safety Rating NCAP Crash Test - Video. Read In Tamil.
Story first published: Wednesday, January 22, 2020, 17:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X