அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

சற்று மறைப்பால் மறைக்கப்பட்ட நிலையில் டாடா டியாகோ ஹேட்ச்பேக் கார் ஒன்று இந்திய நகர்புற சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்பி ஆட்டோ டெக் டாக்ஸ் என்ற யூடியுப் சேனல் வெளியிட்டுள்ள வீடியோவை பற்றி விரிவாக இந்த செய்தியில் பார்ப்போம்.

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எந்த விதமான என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது என்பது குறித்த எந்த குறியீடு இந்த சோதனை காரில் இல்லை. இதனால் இந்த டியாகோ மாதிரி காரில் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருப்பதற்கு வாய்ப்புள்ளது.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

டியாகோவில் டர்போ என்ஜினை டாடா நிறுவனம் வழங்குவது இது முதல்முறை அல்ல. ஏனெனில் சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெயம் டாடா ஃபெர்ஃபார்மன்ஸ் நிறுவனம் 1.2 லிட்டர் ரெவோட்ரான் டர்போ என்ஜினை டியாகோவில் பொருத்தியிருந்தது.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

112 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு வந்தது. மேலும் ஸ்போர்டியான ட்ரைவிங் பண்பிற்காக சஸ்பென்ஷன் அமைப்பும் அப்கிரேட் செய்யப்பட்டு டியாகோவில் அப்போது பொருத்தப்பட்டு வந்தது.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

ஆனால் அதன்பின் டியாகோ மற்றும் டிகோர் கார்களில் வழங்கப்பட்டு வந்த இந்த டர்போ என்ஜின் தேர்வு அதிகப்படியான தேவை இல்லாததினாலும், ஹேட்ச்பேக் கார்கள் பிரிவில் நிலவும் கடுமையான விற்பனை போட்டியினாலும் நிறுத்தி கொள்ளப்பட்டது.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

இருப்பினும் விரைவில் டியாகோவில் கொண்டுவரப்படவுள்ள டர்போ வெர்சனில் அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் யூனிட் தான் தொடரவுள்ளது. தற்சமயம் நெக்ஸான் க்ராஸ்ஓவர் காரில் பொருத்தப்பட்டுவரும் இந்த டர்போ என்ஜின் டியாகோ மட்டுமின்றி அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் காரிலும் வழங்கப்படவுள்ளது.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

நெக்ஸானில் இந்த டர்போ என்ஜின் பிஎஸ்6 தரத்தில் 118 பிஎச்பி மற்றும் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. ஆனால் டியாகோ மற்றும் அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார்களில் சிறந்த எரிபொருள் திறனிற்கு சற்று குறைவான ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில்தான் இந்த என்ஜின் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

அதேபோல் 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸையும் எதிர்பார்க்கலாம். மற்றப்படி டியாகோ டர்போவில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட் வழங்கப்படுமா அல்லது சிறிய அளவு கார் என்பதால் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

டியாகோவில் தற்சமயம் வழங்கப்பட்டு வருகின்ற 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 84 பிஎச்பி மற்றும் 113 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துகிறது. டியாகோவிற்கு டர்போ வெர்சனை அதன் உயர் ட்ரிம்களில் மட்டும்தான் டாடா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இதற்கு என்ஆர்ஜி எடிசன் என்ற பெயரும் வைக்கப்படலாம்.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

தோற்ற அமைப்பில் பக்கவாட்டு பகுதிகளில் கருப்பு நிற பிளாஸ்டிக் க்ளாடிங்குகள் மற்றும் ரூஃப் ரெயில்களை இந்த சோதனை டியாகோ கார் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா, அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவையையும் டியாகோவின் இந்த புதிய வேரியண்ட்டில் எதிர்பார்க்கலாம்.

அசத்தலான தோற்றத்தில் டாடா டியாகோ சோதனை ஓட்டம்... டர்போ வெர்சனா அல்லது என்ஆர்ஜி எடிசனா...?

டியாகோவிற்கு விற்பனையில் போட்டியாக உள்ள மாருதி செலிரியோவும் புதிய தலைமுறை உடன் டர்போசார்ஜ்டு என்ஜினை பெறவுள்ளது. ஆனால் இந்த சமயத்தில் டியாகோ டர்போ கார் அறிமுகமானால் அதற்கு ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் டர்போ மட்டும் தான் போட்டியாக இருக்கும். டியாகோ டர்போ வரும் பண்டிக்கை காலத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Tiago Turbo Gets Roof Rails, Black Cladding – Or Is It NRG Edition
Story first published: Friday, September 25, 2020, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X