டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்தியாவை சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டாடா மோட்டார்ஸ் இந்த வருட துவக்கத்தில் வெளிப்புற மற்றும் உட்புறத்தில் சில காஸ்மெட்டிக் மாற்றங்களுடன் தனது தயாரிப்பு மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்து வெளியிட்டு இருந்தது.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

இந்த வகையில் டியாகோ ஹேட்ச்பேக், டிகோர் காம்பெக்ட் செடான் மற்றும் நெக்ஸான் காம்பெட் எஸ்யூவி மாடலின் பிஎஸ்6 மாடல்கள் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனாக டாடா நிறுவனத்தில் இருந்து வெளிவந்தன. இதில் டிகோர் ஃபேஸ்லிஃப்ட் வெர்சனின் புதிய டீசர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

டாடா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் டிகோர் மாடல் முந்திய வெர்சனில் கொண்டிருந்த மாற்றங்களை அப்படியே பெற்றுள்ளது. வீடியோ ஆரம்பமானவுடன் காரின் வெளிப்புறம் காட்டுப்படுகிறது.

MOST READ: தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு... ஸ்தம்பித்து நிற்கும் ஆசியாவின் 'டெட்ராய்ட்'!

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

அதன்படி காரின் முன்புறத்தில் வழங்கபட்டுள்ள பளபளப்பான கருப்பு நிற க்ரில் ட்ரை-ஏரோ வடிவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிறகு காட்டப்படும் காரின் பின்புறத்தில் ரீ-டிசைனில் ஹெட்லேம்ப், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப் மற்றும் எல்இடி தரத்தில் பிளவுப்பட்ட டெயில்லைட் யூனிட் உடன் உள்ளது.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

சுறாவின் துடுப்பு வடிவிலான அண்டெனா மற்றும் ஸ்பாய்லர் காருக்கு கூடுதல் ப்ரீமியம் தோற்றத்தை தருகின்றன. இவற்றுடன் பம்பர் மற்றும் எல்இடி டிஆர்எல்களின் டிசைன்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் டைமண்ட் கட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

MOST READ: 1,800 கிமீ சைக்கிள் பயணம்... சொந்த ஊர் வந்ததும் என்ன நடந்தது தெரியுமா? நாட்டையே கலங்க வைத்த இளைஞர்

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

உட்புறத்தில் டேஸ்போர்டு வழக்கமான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் மையத்தில் கொண்டுள்ளது. இந்த இன்போடெயின்மெண்ட் சிஸ்டத்தின் மூலமாக ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோவுடன் இணைக்க முடியும்.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

க்ரே டோனில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலின் உட்புறத்தில் தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ட்ரை-ஏரோ டிசைனில் இருக்கைகள், ஸ்டார்ட் செய்ய பொத்தான், வெளிப்புற பெயிண்ட் நிறத்தில் ஏசி வெண்ட்ஸ் உள்பட வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளன.

MOST READ: தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கியது ஹூண்டாய்!

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

உட்புறத்தில் கொண்டுவரப்பட்டுள்ள மிக பெரிய மாற்றமே டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் தான். இந்த க்ளஸ்ட்டர் மூலமாக தேவையான தகவல்களை ஓட்டுனர் பெற முடியும். என்ஜின் அமைப்பை பொறுத்தவரையில், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டிகோர் ஃபேஸ்லிஃப்ட்டின் புதிய டீசர் வீடியோ வெளியீடு...

டிகோர் மாடலின் டீசல் வேரியண்ட் பிஎஸ்4 வெர்சனில் தான் தற்போதும் உள்ளதால் விற்பனை ஏற்கனவே நிறுத்தப்பட்டுவிட்டது. பிஎஸ்6 டிகோர் மாடலில் ட்ரான்ஸ்மிஷனுக்கு 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

MOST READ: பிஎஸ்6-க்கு அப்டேட் செய்யப்படவில்லை... இந்தியாவில் இருந்து விடைபெறும் ஹோண்டா ஏவியேட்டர் & க்ரேஸியா..

இந்த செடான் மாடலின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.5.75 லட்சமாக உள்ளது. இதன் பிரிவில் உள்ள மற்ற செடான் கார்களான மாருதி டிசைர், ஹோண்டா அமேஸ் மற்றும் சமீபத்தில் அறிமுகமான ஹூண்டாய் அவ்ரா உள்ளிட்டவற்றின் விலை இதை விட அதிகம். இதனால் காம்பெக்ட் செடான் பிரிவில் விலை குறைவான காராக டாடா டிகோர் மாடல் தான் விளங்குகிறது.

Most Read Articles

English summary
Tata Tigor Facelift: Official video gives you an in-depth view
Story first published: Tuesday, April 14, 2020, 18:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X