இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் மாடல்களின் அப்டேட் செர்சனை அறிமுகத்தியது இருந்தது. அதனை தொடர்ந்து நடப்பாண்டில் கூடுதலாக மூன்று தயாரிப்பு மாடல்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கடந்த மாதம் க்ரேட்டர் நொய்டாவில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த டாடாவின் இந்தாண்டிற்கான 3 புதிய மாடல்களை பற்றி விரிவாக இந்த செய்தியில் காண்போம்.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

டாடா கிராவிட்டாஸ்

ஹெரியர் மாடலின் 7-இருக்கை வெர்சனான டாடா கிராவிட்டாஸ் கடந்த ஆண்டு ஜெனிவாவில் நடைபெற்ற மோட்டார் கண்காட்சியின் மூலம் உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பின் இந்த மாடலின் இறுதிக்கட்ட தயாரிப்பு வெர்சன் 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்டது.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

ஹெரியருடன் ஒப்பிடும்போது சில டிசைன் மாற்றங்களை பெற்றிருந்த இந்த காரின் பின்புறம் நீண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரூஃப் லைன் அதற்கு ஏற்றாற்போல் பின்புறத்தில் அகலமாக கொடுக்கப்பட்டுள்ளது. கிராவிட்டாஸ் மாடலில் ஃபியாட்டின் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்கும் இதன் டீசல் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் என்ற இரு ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகள் வழங்கப்படவுள்ளன.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

டாடா அல்ட்ராஸ் இவி

டாடாவின் சமீபத்திய அறிமுகங்களுள் ஒன்றான அல்ட்ராஸின் எலக்ட்ரிக் வெர்சன் காரையும் இந்த 2020ஆம் ஆண்டில் சந்தைக்கு கொண்டுவர டாடா நிறுவனம் தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஆண்டு இறுதியில் வரும் தீபாவளி பண்டிக்கை காலத்தில் அறிமுகமாகவுள்ளதாக கூறப்படும் இந்த கார் 2020ல் அறிமுகமாகவிட்டாலும் 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வந்துவிடும்.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

நெக்ஸான் இவி மாடலுக்கு டாடா நிறுவனம் அதிகப்படியான விலையை நிர்ணயித்துள்ளதால் அல்ட்ராஸ் இவி மாடலின் விலையும் ரூ.10 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கிள் சார்ஜில் 250- 300 கிமீ தூரம் வரை இயங்கக்கூடிய இந்த இவி கார் பெரும்பாலான பாகங்களை தனது எரிபொருள் வெர்சன் காரில் இருந்து பெற்றுள்ளது.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

டாடா எச்பிஎக்ஸ்

2020 ஆட்டோ எக்ஸ்போவில் டாடா நிறுவனத்தின் சார்பில் காட்சிப்படுத்தப்பட்ட மாடல்களுள் ஒன்றான எச்பிஎக்ஸ், மைக்ரோ எஸ்யூவி ரக காராகும். எச்2எக்ஸ் கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு வருகின்ற இந்த எஸ்யூவி கார் மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ, மஹிந்திரா கேயூவி நெக்ஸ்ட் மற்றும் ரெனால்ட் க்விட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டியிடவுள்ளது.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

ஹார்ன்பில் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வரும் டாடா எச்பிஎக்ஸ் மைக்ரோ எஸ்யூவி ஐந்து-இருக்கை வெர்சனாகும். இதனால் இந்த கார் டாடாவின் எஸ்யூவி லைன்-அப்பில் நெக்ஸான் மாடலுக்கு கீழே நிலை நிறுத்தப்படவுள்ளது. ஆல்ஃபா ப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் இரண்டாவது மாடலாக எச்பிஎக்ஸ் மாடல் விளங்கவுள்ளது.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

இந்த ஃப்ளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்படும் டாடாவின் எதிர்கால தயாரிப்புகளின் நீளம் 4.3 மீட்டருக்கும் குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த சப்-4-மீட்டர் எஸ்யூவி காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜினை டாடா நிறுவனம் பொருத்தியுள்ளது. ட்ரான்ஸ்மிஷன் அமைப்பாக 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் 5-ஸ்பீடு ஏஎம்டி என்ற இரு கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படவுள்ளன.

இழந்த இடத்தை மீண்டும் பெற 3 புதிய கார்களை 2020ல் அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்...!

ஆனால் தற்சமயம் கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவதால் டாடாவின் தொழிற்சாலையில் எந்த காரும் தயாரிக்கப்படவில்லை. இதனால் இந்நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான தயாரிப்பு மாடல்களின் அறிமுகங்களில் சில மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata to launch 3 new models in India this year
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X