டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

விற்பனைக்கு கொண்டுவரப்படுவதற்கு வாய்ப்புள்ள டாடா ஹெக்ஸாவின் புதிய வேரியண்ட் சோதனை ஓட்டத்தின்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம். 

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அருகே நடத்தப்பட்டுள்ள இந்த சோதனை ஓட்ட ஸ்பை படங்களை டீம்பிஎச்பி செய்தி தளம் வெளியிட்டுள்ளது. இந்த படங்களில் சோதனை காரின் முன் கதவுகளில் 4X4 முத்திரை வழங்கபட்டுள்ளது.

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

அதேபோல் பின் கதவில் எக்ஸ்எம்ஏ முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மூலமாகதான் இது ஹெக்ஸாவின் புதிய வேரியண்ட் என்பதை அடையாளப்படுத்தியுள்ளோம். இந்த அடையாள முத்திரைகளை தவிர்த்து பார்த்தோமேயானால் இந்த சோதனை கார் வழக்கமான டாடா ஹெக்ஸாவை தான் ஒத்து காணப்படுகிறது.

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

இதனால் பின்பக்கத்தில் இரட்டை எக்ஸாஸ்ட் குழாய், டெயில்லேம்ப் க்ளஸ்ட்டருக்கு மேற்புறத்தில் ஜன்னல் லைனிற்கு இணையாக க்ரோம் ட்ரிம் உள்ளிட்டவை தொடர்ந்துள்ளன. ஹெக்ஸாவின் டாப் வேரியண்ட்களில் ட்யூல்-டோனில் அலாய் சக்கரங்கள் வழங்கப்பட்டன. ஆனால் இந்த வேரியண்ட் இரும்பு சக்கரங்களையே கொண்டுள்ளது.

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இதுவரை பிஎஸ்6 தரத்திற்கு அப்கிட்ரேட் செய்து ஹெக்ஸாவை அறிமுகம் செய்யவில்லை. விரைவில் விற்பனைக்கு வந்தாலும் வழக்கமான 2.2 லிட்டர் வாரிகோர் டீசல் என்ஜினை தான் புதிய மாசு உமிழ்வு விதிக்கு இணக்கமாக பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

பிஎஸ்4 தரத்தில் இந்த 2.2 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் இரு விதமான ஆற்றல் அளவுகளை வெளிப்படுத்தும் வகையில் வழக்கப்பட்டு வந்தது. அதாவது ஆரம்ப நிலை ட்ரிம்மில் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 4000 ஆர்பிஎம்-ல் 148 பிஎச்பி மற்றும் 1500- 3000 ஆர்பிஎம்-ல் 320 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் வகையில் வழங்கப்பட்டது.

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

அதேநேரம் விலையுயர்ந்த டாப் வேரியண்ட்களில் இந்த என்ஜின் 4000 ஆர்பிஎம்-ல் 154 பிஎச்பி மற்றும் 1750- 2500 ஆர்பிஎம்-ல் 400 என்எம் டார்க் திறனை வழங்குகிறது. இந்த டீசல் என்ஜின் உடன் ட்ரான்ஸ்மிஷனிற்கு 5-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் உள்ளிட்ட கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட்டு வந்தன.

டாடா ஹெக்ஸாவில் புதியதாக 4x4 வேரியண்ட்...? தொழிற்சாலைக்கு அருகே சோதனை ஓட்டம்...

மற்றப்படி டாடா ஹெக்ஸாவின் இந்த புதிய 4x4 வேரியண்ட்டின் அறிமுகம் குறித்தோ அல்லது பிஎஸ்6 ஹெக்ஸாவின் அறிமுகம் குறித்தோ தற்போதைக்கு எந்த தகவலும் இல்லை. இந்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ட்ரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைப்பில் இருங்கள்.

Most Read Articles

English summary
Tata Hexa XMA 4X4 variant spied
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X