70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

நான்கு சக்கர மற்றும் இரு சக்கர வாகனங்களை நீண்ட வருடங்களுக்காக ஓட்டிய அனுபவமிக்க இளம்பெண் ஒருவர் தனியாளாக அதிக எடை கொண்ட 70 வருட பழமையான லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சீரிஸ் மாடல் காரை ஓட்டி அசத்தி உள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

லேண்ட் ரோவர் டிஃபெண்டர் என்ற வார்த்தையை கேட்காதவர்கள் இருக்க மாட்டீர்கள் என்று தான் நினைக்கிறேன். கார், பைக்குகளை பற்றிய ஆர்வம் உங்களிடம் இருந்தால் நிச்சயம் இந்த வார்த்தையை ஒருமுறையேனும் கேட்டிருப்பீர்கள் அல்லது படித்திருப்பீர்கள்.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

ஏனெனில் லேண்ட் ரோவர் டிஃபெண்டருக்கு சந்தையில் மிக நீண்ட வருட வரலாறு உள்ளது. அதாவது முதல் சீரிஸ் 1 டிஃபெண்டர் சுமார் 70 வருடங்களுக்கு முன்னர் அறிமுகமாகியது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். ஆனால் இத்தகைய பழமையான லேண்ட் ரோவர் மாடல்கள் இப்போது எவரேனும் ஒருவரது வீட்டில் காட்சி பொருளாகவே நிறுத்தி வைத்திருக்க வாய்ப்புண்டு.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

பயன்பாட்டில் இருப்பவை விரல் விட்டு எண்ணிவிடும் அளவில் தான் இருக்கும். இவ்வாறு பயன்பாட்டில் இருக்கும் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் சீரிஸ் 1 மாடலை தான் மத்திய பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் ஓட்டி அசத்தியுள்ளார். இதுகுறித்து யுவிலாக்ஸ் என்ற யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவில் இந்த பயணம் முழுக்க முழுக்க தனியாருக்கு சொந்தமான இடத்தில் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் ஓட்டுனர் உரிமம் போன்ற தேவையான ஆவணங்களை ஓட்டுனர் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரின் நிலையை வீடியோவை பார்த்தால் உங்களுக்கே தெரியவரும். மொத்தமும் துருப்பிடித்து, இயக்கத்தின்போது தானாகவே பாகங்கள் உதிர்ந்துவிடும் அளவிற்கு உள்ளது.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

இந்த வீடியோவை சற்று உற்று கவனித்தால் காரின் என்ஜின் சத்தம் வித்தியாசமாக இருப்பதை உணரலாம். இதற்கு காரணம் இந்த டிஃபெண்டர் காரில் ஒரிஜினல் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படவில்லை, மாறாக மஹிந்திரா பொலேரோவின் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

மேலும் இந்த டிஃபெண்டர் மாடலில் அலங்கார பொருட்கள் எதுவும் இல்லை. மிகவும் அடிப்படை வசதிகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. தற்சமயம் விற்பனையில் உள்ள டிஃபெண்டர் மாடலை இந்தியா உள்பட சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டில் லேண்ட் ரோவர் ப்ராண்ட் அறிமுகம் செய்தது.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

அதனுடன் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ள டிஃபெண்டர் மாடலை ஒப்பிட்டு பார்த்தால் லேண்ட் ரோவர் ப்ராண்ட் வாகனத்தின் தோற்றத்தை மேம்படுத்துவதில் எந்த அளவிற்கு பணியாற்றி உள்ளது என்பதை அறிய முடியும். ஆனால் உண்மையில் லேண்ட் ரோவர் மாடல்கள் உலக போர்களின்போது கரடு முரடான மலைப்பாதை, பனி நிறைந்த பகுதிகள் என எந்தவொரு இடத்திற்கும் எடுத்து செல்லும் வகையில் 4x4 சிஸ்டத்துடன் வடிவமைக்கப்படவே ஆரம்பித்தன.

70 ஆண்டு பழமையான முதல் லேண்ட் ரோவர் டிஃபெண்டர்... தனியாளாக ஓட்டி அசத்திய இளம்பெண்...

அதனால் தான் வீடியோவில் காட்டப்பட்டுள்ள டிஃபெண்டர் மாடல் எந்தவொரு ஆடம்பர டிசைனையும் பெறவில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இந்த எளிமையே அவற்றை உலகம் முழுவதில் பிரபலமடைய செய்தது. பயன்படுத்தப்பட்ட கார் மார்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் இவ்வாறான பழமை வாய்ந்த கார்களை தற்போது வாங்க சென்றால் நிச்சயம் மிக அதிக விலையை கூறுவர்.

Most Read Articles
English summary
Meet the teenaged Indian girl who drives a 50 year-old vintage Land Rover [Video]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X