தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக மத்திய அரசு மிக நீண்ட காலமாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மத்திய அரசு தவிர, பல்வேறு மாநில அரசுகளும் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இதில், தெலங்கானாவும் ஒன்று. மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளால் தெலங்கானாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடுகையில், நடப்பு 2020ம் ஆண்டின் முதல் 8 மாதங்களில், மின்சார வாகனங்களின் விற்பனை 23 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி நிலவரப்படி தெலங்கானா மாநிலத்தில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் இயங்கி கொண்டுள்ளன.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

இதில், 6 ஆயிரம் மின்சார கார்களும், 4 ஆயிரம் மின்சார இரு சக்கர வாகனங்களும் அடங்கும். ஆனால் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை நிலவரப்படி தெலங்கானாவில் இயங்கி கொண்டு மின்சார வாகனங்களின் எண்ணிக்கை 9,303 மட்டும்தான். இதில், 5,573 மின்சார கார்களும், 3,690 மின்சார இரு சக்கர வாகனங்களும், 40 ஆர்டிசி பயணிகள் வாகனங்களும் அடங்கும்.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

தெலங்கானா மாநிலத்தில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து ஆட்டோமொபைல் துறை வல்லுனர்கள் கூறுகையில், ''மின்சார வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து வெறும் 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இந்த நடவடிக்கையே மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பிற்கு முக்கியமான காரணமாக இருக்கும் என்று கருதுகிறோம்.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

இதுதவிர மின்சார வாகனங்களுக்கு மானியம் கிடைப்பது, பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்களை இயக்குவதற்கு குறைவான செலவே ஆவது ஆகியவையும் மக்கள் மின்சார வாகனங்களை தேர்வு செய்வதற்கு முதன்மையான காரணிகளாக இருக்கலாம். மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால், காற்றின் தரம் மேம்படும்.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

ஐதராபாத் போன்ற மெட்ரோ நகரங்களுக்கு இது மிகவும் நல்லது'' என்றனர். தெலங்கானா மாநில அரசின் சமீபத்திய ஒரு நடவடிக்கை காரணமாகவும் வரும் காலங்களில் அங்கு மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலங்கானா மாநில அரசு, புதிய மின்சார வாகன கொள்கைக்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

இதில், தெலங்கானா மாநிலத்தில் மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக மின்சார வாகனங்களுக்கு சாலை வரி மற்றும் பதிவு கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் விலக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே மின்சார வாகனங்களின் ஆன் ரோடு விலை குறையும்.

தெலங்கானா மாநிலத்தில் டாப் கியரில் மின்சார வாகனங்கள் விற்பனை... எப்படினு தெரியுமா?

மின்சார வாகனங்களுக்கு மக்கள் மாறுவதில் இருக்கும் மிகப்பெரிய தடைக்கல்லே அவற்றின் அதிகப்படியான விலைதான். ஆனால் தெலங்கானா அரசின் நடவடிக்கையால் மின்சார வாகனங்களின் விலை குறையவுள்ளது. எனவே அவற்றின் விற்பனை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Telangana: EV Sales In Top Gear. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X