என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி.. டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா!

டெஸ்லா நிறுவனத்தின் பிரபல சைபர் டிரக்கிற்கு போட்டியாக நிகோலா என்ற ஆரம்பநிலை நிறுவனம் புதிய டிரக்கை அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த கார் ஒரே ஒரு முழுமையான ஹைட்ரஜன் ப்யூவல் செல் சார்ஜில் 945 கிமீ வரையிலான ரேஞ்சை வழங்கும். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

தானியங்கி மின்சார வாகன சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி வரும் டெஸ்லா நிறுவனம், சைபர் டிரக் எனும் மின்சார வாகனத்தை அண்மையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.

இந்த வாகனம் சாதாரணமான வாகனங்களைப் போன்று அல்லாமல் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இதனால், ஆஃப்-ரோடு வாகன பிரியர்கள் மத்தியில் அளவுகடந்த வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமின்றி, இந்த வாகனம் பிக்-அப் டிரக்காக இருக்கின்ற காரணத்தால் வணிகத்துறையில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத்துடன் நில்லாமல், இந்த வாகனத்தில் பல்வேறு சிறப்பம்சங்கள் காவல்துறையையும் ஈர்த்துள்ளது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

குறிப்பாக, துபாய் நாட்டு காவல்துறையை இந்த பிக்-அப் டிரக் வெகுவாக ஈர்த்துள்ளது. இதன்காரணமாக, அந்நாட்டின் காவல்துறை பயன்பாட்டிற்காக இந்த ஆஃப்-ரோடு மின்சார பிக்-அப் ட்ரக்கை வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இதுமட்டுமின்றி, அமெரிக்கா போன்ற வேறுசில முக்கிய நாடுகளும் இந்த காருக்கான ஆர்டர்களை அமோகமாக வழங்கி வருகின்றன. இதனால், இந்த கார் அறிமுகமான மிக குறுகிய காலத்திலேயே ஏகபோகமான புக்கிங்கைப் பெற தொடங்கியது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இத்தகைய வரேவற்பைப் பெற்று வரும் டெஸ்லா சைபர் பிக்-டிரக்கிற்கு சந்தையில் போட்டியே இல்லாத நிலையே நீடித்து வந்தது. ஆனால், அது தற்போது அப்படியே மாறியிருக்கின்றது. ஏனென்றால், இந்த வாகனத்திற்கு போட்டியளிக்கின்ற வகையிலான பிக்-அப் டிரக்கை நிக்கோலா களமிறக்க இருப்பதாக அறிவித்துள்ளது. அதற்கான டீசர் புகைப்படங்களைக் கூட அது வெளியிட்டிருக்கின்றது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இந்த நிக்கோலா கார்பரேசன் என்பது அரிசோனாவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது ஓர் ஆரம்பநிலை நிறுவனம். சொல்லப்போனால் டெஸ்லா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படிதான் அதன் கால்தடத்தை உலகில் பதித்தது. தற்போது, தானியங்கி மின்சார வாகன சந்தையில் அது புரட்சி செய்துக்கொண்டிருக்கின்றது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இந்நிலையிலேயே டெஸ்லா நிறுவனத்திற்கு போட்டியாக நிக்கோலா அமெரிக்காவில் புதிதாக களமிறங்கியுள்ளது. இதன் ஆரம்பத்திலேயே தற்போது மிகப்பெரிய டிமாண்டை ஏற்படுத்து வரும் சைபர் டிரக்கிற்கு போட்டியாக ஒரு முழுமையான சார்ஜில் 965 கிமீ ரேஞ்சை வழங்கும் பிக்-அப் டிரக்கை அது அறிமுகம் செய்ய இருக்கின்றது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இதுமட்டுமின்றி, மற்ற அனைத்து தொழில்நுட்பத்திலும் சைபர் டிரக்கிற்கு இது கடுமையான போட்டியை வழங்குகின்ற வகையிலேயே சிறப்பம்சத்தைப் பெற்றிருக்கின்றது.

குறிப்பாக, இந்த கார் டெஸ்லாவின் சைபர் டிரக்கைப் போல் மின்சார கார் இல்லை. இது ஓர் ஹைட்ரஜன் ப்யூவலால் சார்ஜை ஏற்றிக் கொள்ளும் ஹைட்ரஜன் ப்யூவல் செல் பேட்டரி காராகும்.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இந்த ப்யூவல் செல் மின் மோட்டார் 918 பிஎஸ் திறன் கொண்டதாகும். இதேபோன்று, இந்த காரின் என்எம் டார்க்கும் பிரம்மிப்பை ஏற்படுத்துகின்ற வகையில் உள்ளது. அதிகபட்சமாக 1,328 என்ற அளவீட்டில் வெளிப்படுத்துகின்றது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இந்த அதீத திறனானது காருக்கு மிகவும் அசாத்தியமான உத்வேகத்தை வழங்குகின்றது. ஆகையால், இந்த கார் வெறும் 2.9 விநாடிகளிலேயே 0த்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தை மிகவும் அசால்டாக தொட்டுவிடுகின்றது.

என்னது 945 கிமீ ரேஞ்சா...? டெஸ்லா சைபர் டிரக்கிற்கு போட்டி வந்துவிட்டது... டீசர் வெளியிட்டு கதிகலங்கவைத்த நிகோலா..!

இந்த பிரத்யேக டிரக்கை குறிப்பிட்ட அளவு மட்டுமே விற்பனைச் செய்ய நிக்கோலா திட்டமிட்டிருக்கின்றது. இதற்கான புக்கிங்கை வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
English summary
Tesla Cyber Truck Rival Nikola Badger Teaser Revealed. Read In Tamil.
Story first published: Tuesday, February 11, 2020, 20:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X