உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

தானியங்கி வாகன உலகில் புதிய அத்தியாத்தை உருவாக்கிய டெஸ்லா நிறுவனம் உலக புகழ்பெற்ற ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய அங்கீகாரம் பெற்றுள்ளது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

தானியங்கி மின்சார வாகனங்களை தயாரித்து வரும் அமெரிக்காவைச் சார்ந்த டெஸ்லா நிறுவனத்திற்கு உலகளவில் புதிய சிறப்பந்தஸ்து கிடைத்துள்ளது. இந்நிறுவனம், உலக புகழ்பெற்ற ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி உலகின் 2வது மிக மதிப்புமிக்க கார் உற்பத்தியாளர் என்ற புகழ்வாகை சூடியுள்ளது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

ஜெர்மன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் ஃபோக்ஸ்வேகனே முந்தைய காலகட்டத்தில் இந்த இடத்தை தன் வசதப்படுத்தியிருந்தது.

டெஸ்லா நிறுவனத்தின் பங்கு கடந்த மூன்று மாதங்களாக தொடர்ச்சியாக உயர்வையேக் கண்டுவந்தததன் காரணத்தினால் இந்த புதிய அந்தஸ்தை அது பெற்றிருக்கின்றது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் அதன் சந்தை மூலதனம் 100 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ன. அதேசமயம், உலகபுகழ்பெற்ற ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 99.6 சதவீதத்தை மட்டுமேப் பெற்றிருக்கின்றது. இது, டெஸ்லா நிறுவனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகராமகாவே உள்ளது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

இதுமட்டுமின்றி, டெஸ்லா நிறுவனம் மேலும்சில ஜாம்பவான்களையும் பின்னுக்கு தள்ளியுள்ளது. ஹோண்டா, பிஎம்டபிள்யூ, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் டைம்லர் (பென்ஸ்) உள்ளிட்ட நிறுவனங்களை அடியோடு வீழ்த்தியுள்ளது.

இந்த வரிசையில் எப்போதும்போல டொயோட்டா நிறுவனமே முதல் இடத்தில் இருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்தையே டெஸ்லா நிறுவனம் பிடித்திருக்கின்றது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

டெஸ்லா நிறுவனம் அண்மையில் சீனாவில் அதன் புத்தம் புதிய உற்பத்தி தளத்தை நிறுவியது. இங்கு அது எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகளவிலான யூனிட்டுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், அது நிர்ணயித்த இலக்கையும் தாண்டி உற்பத்தி அதிகரித்து புதிய சாதனையைப் படைத்தது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

இது, புக்கிங் செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு கார்களை மிக விரைவில் டெலிவரி செய்ய அதிக உதவியாக இருக்கின்றது. எனவே, முந்தையக் காலக்கட்டத்தில் கிடைத்ததைக் காட்டிலும் அதிகளவில் வருமானம் ஈட்டத் தொடங்கியிருக்கின்றது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

இதனால், டெஸ்லா நிறுவனத்தின்மீது செய்யப்படும் முதலீடு சற்றே உயரத் தொடங்கியுள்ளது. இதற்கு டெஸ்லா நிறுவனத்தின் உற்பத்தி அதிகரிப்பு மட்டுமே ஓர் காரணியாக இல்லை. அது தயாரிக்கும் கார்களின் தரமும் ஓர் காரணமாக இருக்கின்றது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

டெஸ்லா நிறுவனம் மாடல் எஸ், மாடல் 3, மாடல் எக்ஸ், மாடல் ஒய், சைபர் ட்ரக், ரோட்ஸ்டர் ஆகிய மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இதில் ஒரு மாடல்கள்கூட இன்னும் இந்தியாவில் விற்பனைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

இத்துடன், எனர்ஜி என்ற பிராண்டில் மின்வாகனங்களுக்கு தேவையான சார்ஜிங் மற்றும் சார்ஜர் போர்ட் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனைச் செய்து வருகின்றது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

இதில், சைபர் ட்ரக் (பிக்-அப் ட்ரக்) மற்றும் ரோட்ஸ்டர் என்பது அந்நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளாக காட்யளிக்கின்றன. ரோட்ஸ்டருக்கான ரிசர்வேசன் தற்போது தொடங்கியுள்ளது. அதேசமயம், சைபர்ட்ரக்கிற்கான புக்கிங் அமோக நடைபெற தொடங்கியுள்ளது. இது, ஓர் மின்சார வாகனம் ஆகும். குறிப்பாக இந்த பிக்-அப் ட்ரக் அறிமுகம் செய்யப்பட்ட வெறும் மூன்றே நாட்களில் புக்கிங் கூரையை பிய்த்துக் கொண்டு கொட்ட ஆரம்பித்தது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

அந்தவகையில், ஆன்லைனில் முன்பதிவு தொடங்கப்பட்ட வெறும் 48 மணி நேரத்தில் 1.46 லட்சம் யூனிட்டுகளுக்கான புக்கிங்குகள் குவிந்தன. தொடர்ந்து மூன்று நாட்களில் மட்டும் 1.87 லட்சம் யூனிட் பிக்-அப் ட்ரக்குகளுக்கான புக்கிங்கு பெறப்பட்டுள்ளது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

இந்த அதீத வரவேற்பிற்கு டெஸ்லா சைபர்டிரக்கில் கிடைக்கும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளே முக்கிய காரணமாக இருக்கின்றது. எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக்கில் குண்டு துளைக்காத ஜன்னல் கண்ணாடிகள், வலிமையான பாடி, அதிக பாரம் சுமக்கும் திறன், நீண்ட தூரம் பயணிக்கும் சக்தி என பாதுகாப்பு மற்றும் எஞ்ஜின் திறனில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றது.

உலகளவில் புதிய அங்கீகாரம் பெற்ற டெஸ்லா... ஃபோக்ஸ்வேகனை பின்னுக்கு தள்ளி புதிய சாதனை...!

இந்த எலெக்ட்ரிக் பிக்-அப் டிரக் மூன்று விதமான தேர்வுகளில் கிடைக்கின்றது. அந்தவகையில் ஒற்றை, இரட்டை மற்றும் மூன்று ஆகிய மின் மோட்டார் தேர்வில் கிடைக்கின்றது. இவை ஒவ்வொன்றும் வித்தியாசமான ரேஞ்ச் வசிதையைக் கொண்டவையாகும். இது இந்திய மதிப்பில் ரூ. 29 லட்சத்தில் இருந்து 50 லட்சம் ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Most Read Articles
மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Gets New Place As World's 2nd Most Valuable Carmaker. Read In Tamil.
Story first published: Sunday, January 26, 2020, 15:12 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X