எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான டெஸ்லா, தனது மாடல் எஸ் லாங்க் ரேஞ்ச் ப்ளஸ் கார் தான் உலகிலேயே சிங்கிள் சார்ஜில் 400 மைல் (644 கிமீ) தூரத்தை எட்டிய முதல் எலக்ட்ரிக் கார் என்பதை உறுதி செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

முன்னதாக இந்த செய்தியை கடந்த ஜனவரி மாதத்திலேயே டெஸ்லா நிறுவனத்தின் இயக்குனர் எலன் மஸ்க் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனத்தால் இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

மாடல் எஸ் லாங்க் ரேஞ்ச் எலக்ட்ரிக் காரில் புதிய இபிஏ-மதிப்பிலான ரேஞ்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ரேஞ்ச், அதே பேட்டரி தொகுப்பை பெற்ற 2019 டெஸ்லா மாடல் எஸ் 100டி காரை காட்டிலும் 20 சதவீத ரேஞ்ச்சை அதிகமாக இந்த காரில் வழங்குகிறது.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

இதுகுறித்து டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த குறிப்பிடத்தக்க சாதனை ஆனது தயாரிப்புகளின் திறன் மற்றும் ஆற்றல் சிக்கனத்தில் டெஸ்லா கொண்டிருக்கும் ஈடுப்பாட்டை காட்டுகிறது. இதன் மூலம் தயாரிப்பின் ஹார்ட்வேர் மற்றும் கட்டமைப்பில் டெஸ்லாவின் பொறியியல், டிசைன் மற்றும் தயாரிப்பு குழுவினர் கொண்டு வந்துள்ள மாற்றங்கள் எத்தகையது என்பதை உணர முடியும்.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

இந்த மாற்றங்கள் அனைத்தும் மாடல் எஸ் லாங் ரேஞ்ச் ப்ளஸ் எலக்ட்ரிக் காரின் தயாரிப்பு பணியில் கொண்டுவரப்பட்டுள்ளன. இதனால் தயாரிப்பு பணிகளை நிறைவு செய்து வெளிவரும் அனைத்து மாடல் எஸ் லாங் ரேஞ்ச் ப்ளஸ் எலக்ட்ரிக் கார்களும் 402 மைல் ரேஞ்ச்சை கொண்டிருக்கும் என கூறப்பட்டுள்ளது.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

இந்த வகையில் இந்த சாதனையை புரிவதற்கு இந்த எலக்ட்ரிக் காரில் டெஸ்லா நிறுவனம் கொண்டுவந்துள்ள வேலைப்பாடுகளில் முக்கியமானதாக எடை குறைப்பு உள்ளது. அதாவது இந்நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகங்களான மாடல் 3 மற்றும் மாடல் ஒய் உள்ளிட்டவற்றை காட்டிலும் இந்த மாடல் எஸ் காரின் எடை கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

இந்த எடை குறைப்பை காரின் இருக்கை தயாரிப்பின் மூலமாகவும், பேட்டரி தொகுப்பு மற்றும் ட்ரைவ் யூனிட்களில் பயன்படுத்தப்பட்ட மெட்டீரியல்கள் மூலமாகவும் கொண்டுவந்ததாக டெஸ்லா நிறுவனம் கூறியுள்ளது. இது மட்டுமின்றி எதிர் காற்றினால் காரின் வேகம் குறைவதை தடுக்க 8.5 இன்ச்சில் அகலமான ஏரோ சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

கஸ்டமைஸ்ட் டயர்களுடன் உள்ள புதிய ஏரோ சக்கரங்களினால் காரின் ரேஞ்ச் இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இவற்றுடன் காரின் பின் ஏசி-இண்டக்‌ஷன் ட்ரைவ் யூனிட்டில் வழங்கப்பட்டுள்ள எலக்ட்ரிக் ஆயில் பம்ப் ஆனது பாகங்களின் உராய்வை குறைத்து சீரான காரின் வேகத்திற்கு வித்திடுகிறது.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

மாடல் எஸ் லாங் ரேஞ்ச் ப்ளஸ் காரில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு அப்டேட்டாக, முன்புற நிரந்தர காந்த ஒத்திசைவான தயக்கம் மோட்டார்கள் அமைப்பில் உள்ள ட்ரான்ஸ்மிஷன் மேம்படுத்தப்பட்ட நிலையில் வழங்கப்பட்டுள்ளது. இதன் எலக்ட்ரிக் மோட்டார்களை டெஸ்லா மாடல் 3 மற்றும் மாடல் ஒய் கார்களிலும் பார்க்க முடியும்.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

இந்த மேம்படுத்தப்பட்ட ட்ரான்ஸ்மிஷனினால் காரின் ரேஞ்ச் இரண்டு சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசியாக, புதிய ஹோல்ட் வசதியை இந்த எலக்ட்ரிக் கார் பெற்றுள்ளது. இந்த வசதி என்ஜின் ரீஜெனரேட்டிவ் ப்ரேக்-ஐ ஓட்டுனர் அளிக்கும் ப்ரேக் உடன் கலப்பதால் காரை மிகவும் மென்மையாக இயக்கத்தில் இருந்து நிறுத்த முடியும்.

எந்த காரும் கிடையாது... உலகிலேயே டெஸ்லாவின் எலக்ட்ரிக் கார் மட்டுமே செய்த அசாதாரண காரியம்...

அதேநேரம் புதிய ஹோல்ட் வசதி நிறுத்தப்பட்டதற்கு பிறகான ஆற்றலையும் மீண்டும் பேட்டரிக்கே அனுப்பிவிடும். முன்னதாக டெஸ்லா நிறுவனம் இந்த ஆண்டு துவக்கத்தில் அதன் ஏர் எலக்ட்ரிக் வாகனத்தின் மூலமாக 400 மைல்கள் ரேஞ்ச்சை எட்டவுள்ளதாக அறிவித்திருந்தது. ஆனால் மாடல் எஸ் லாங் ரேஞ்ச் ப்ளஸ் மாடலின் மூலமாகவே இந்த சாதனையை இந்நிறுவனம் புரிந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #டெஸ்லா #tesla
English summary
Tesla Model S Becomes The First-Ever Electric Vehicle To Breach 644 Km On A Single Charge
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X